right directions to sleep

டீப் ஸ்லீப் அண்ட் அங்ஸைடி ரிலீஃப்

கவலையிலிருந்து உங்கள் மனதை விடுவித்துக் கொள்ள சக்தி வாய்ந்த நுட்பங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சி அடைய செய்யுங்கள் • ஆழ்ந்த ஓய்வினை அனுபவியுங்கள் • செயலாற்றும் திறனை உற்பத்தி செய்து கொள்ளுங்கள்

3 நாட்கள் ஆன்லைன் பயிற்சி (ஒவ்வொரு நாளும் 2.5 மணிநேரம்)

*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது

பதிவு செய்ய

இந்த பயிற்சியால் எனக்கு கிடைக்கும் பயன் என்ன?

icon

முழுமையான புத்துணர்ச்சி பெற்றிடலாம்

நீங்கள் உங்கள் சுவாசத்தை ஒழுங்குபடுத்தும் போது தான் உங்கள் மனதையும் ஒழுங்குப்படுத்தி விட முடியும். உங்கள் மனதின் நிலையினால்தான் உங்கள் வாழ்க்கையின் தரம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே பிராணாயாமங்கள் அல்லது சுவாச நுட்பங்கள் சுதர்சன கிரியா மற்றும் நுண்ணறிவால் ஈர்க்கப்பட்ட ஆயுர்வேதம் கொண்ட வாழ்க்கைமுறை யாவும் உடல் மற்றும் மனதில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். சிறந்த தூக்கத்தினை உறுதி செய்யும்.

icon

நல்ல இரவுகள் நல்ல நாட்கள்

தூக்கக்கலக்கம், தூக்கத்தில் வரும் மூச்சுத் திணறல், மற்றும் தூக்கமின்மை ஆகியவை இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு, நினைவாற்றல் பிரச்சனைகள், பாலியல் செயலிழப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. தூக்கமின்மையால் ஹார்மோன் அளவுகள் மற்றும் மனநிலை மற்றும் எடை அளவுகள் பாதிக்கப்படும். நல்ல உறக்கம் சிறந்த ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். சுதர்சன கிரியா தூக்கத்தின் தரத்தினை மேம்படுத்துகிறது. மற்றும் தூக்கமின்மையை திறம்பட குறைக்கிறது.

icon

வேகஸ் நரம்பை தூண்டுதல்

உடல் மட்டத்தில் கவலை என்பது ஸிம்பதெடிக் நரம்பு மண்டலம் முழு கட்டுப்பாட்டை இழப்பது தான். இதை மீட்க செயல்படுத்த அலை (வேகஸ்) நரம்புகள் உதவி மிகவும் தேவை. கவலையைச் சமாளிக்க அலை (வேகஸ்) நரம்புகள் செயல் திறன் உதவும். பிராணாயாமம், சுதர்சன் கிரியா மற்றும் தியானம் ஆகியவற்றின் வழக்கமான பயிற்சி உங்கள் நரம்பு மண்டலத்தை மேலும் வலுவானதாக ஆக்க உதவுகிறது. நரம்புகளை மீட்டெடுத்து சிறந்த உற்பத்தித் திறன் அமைதி ஆகியவற்றை வழங்குகிறது.

icon

மேம்பட்ட செயல் திறன் & அமைதி

பயிற்சி பட்டறை நுட்பங்கள் நரம்பு மண்டலத்தை முழுமையாக தளர்த்தி விடும். இதுவே தூக்கத்தின் போது முழுமையான ஓய்வெடுக்க அனுமதிக்கிறது. இந்த நுட்பங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வில் சக்தி வாய்ந்த நல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஆரோக்கியமான தூக்க முறையை உருவாக்குகிறது. மன அமைதிக்கான புதிய ஆற்றல் மற்றும் நடைமுறை குறிப்புகளைக் கண்டறியவும் உதவுகிறது.

ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன

37%

அதிக அமைதி

4 நாட்களில்

23%

குறைந்த பதற்றம்

6 வாரங்களில்

31%

குறைந்த தூக்கமின்மை

8 வாரங்களில்

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.

மேலும் அறிக

நான் இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புகிறேன், ஆனால்...

இப்பயிற்சியால் எனது உடல் நலம் மேம்படுமா?

ஆம், நிச்சயமாக மேம்படும்! சுதர்ஷனக் கிரியாவை அன்றாடம் பயிற்சி செய்வதால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்க ஏதுவாகிறது; நோயெதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது; அத்துடன் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவை மட்டுப்படுகின்றன. இப்பயிற்சியை செய்பவர்கள் தாம் அடைந்துள்ள பயன்களைப் பகிர்ந்துள்ள அனுபவச் சான்றுகளை நீங்கள் படித்துப்பாருங்கள். உங்களது நோய்கள் குறித்த விவரங்களை நீங்கள் முன்கூட்டியே உங்கள் ஆசிரியரிடம் தெரிவித்துவிடுவது மிகவும் அவசியமாகும். அதனால் அவரால் உங்களுக்கு மிகவும் சிறப்பான, பொருத்தமான அனுபவங்களை வழங்க இயலும்.

நான்கு நாள் ஆன்லைன் பயிற்சி உண்மையில் என் வாழ்க்கையை மாற்ற முடியுமா?

வாழ்க்கை ஒரு கணத்தில் நொடியில் மாறலாம். அன்புக்குரியவருடன் ஒரு கணம் அல்லது காரை ஓட்டும் போது விழிப்புணர்வு இழந்த நொடி இவ்விரண்டுமே வாழ்க்கையை மாற்றக் கூடியவை. ஒரு யுரேகா கணம் உங்களுக்கு மட்டுமல்ல முழு உலகத்தில் வாழ்க்கையினை விரைவாக மாற்றி விடுகிறது.
இருப்பினும் உங்கள் வாழ்க்கையை மாற்றுவதை விட இந்த பயிற்சி பட்டறை ஆனது உங்கள் வாழ்க்கையை நீங்களே மாற்றிக் கொள்ள உதவும் கருவிகளை வழங்குகிறது. இந்த நான்கு நாட்களில் உலக அளவில் மில்லியன் கணக்கானவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுதர்சன கிரியாவை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். சுதர்சன கிரியாவை பயிற்சி செய்தவர்கள் வாழ்க்கை மாற்றிய அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.
பின் தொடர் அமர்வுகள் வழிகாட்டிகளின் உலகளாவிய சமூகத்திற்கு இலவசமாக நீங்கள் வாழ்நாள் முழுவதும் அணுகப் பெறுவீர்கள். நீங்கள் வாழும் கலையில் இணைந்து பல்வேறு மேம்படுத்தப்பட்ட திட்டங்களில் சேரலாம். உங்கள் பயணம் இதோ இப்பொழுது இருந்து தொடங்கி விட்டது.

இந்த உத்திக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் உண்டா?

ஒருபோதும் மறையாத புன்னகையே இதன் ஒரே பக்கவிளைவாகும். உலகெங்கும் லட்சோப லட்சம் மக்கள் சுதர்ஷனக் கிரியாவை அன்றாடம் பயிற்சி செய்கின்றனர். அவர்கள் அடைந்த பயன்கள் யாவும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.

நமது உத்திகளைப் பயிற்சி செய்வது முற்றிலும் பாதுகாப்பானது. உங்களுக்கு ஆஸ்துமா, உயர் இரத்தஅழுத்தம், இதய நோய், முதுகு வலி போன்ற பாதிப்புகள் இருக்குமெனில் அதற்கேற்ற மாற்றங்களோடு இப்பயிற்சி வழங்கப்படும்.

எனக்கு மனஅழுத்தம் போன்ற எதுவும் இல்லை. நான் எதற்காக இப்பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்?

உங்களுக்கு மனஅழுத்தம் இல்லையென்பது, மிகவும் மகிழ்ச்சிக்குரியது! நீங்கள் ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறீர்கள்! இப்போது பின்வரும் சூழ்நிலைகளை சற்று நினைத்துப்பருங்கள்: உங்களிடம் உள்ள பணம் அனைத்தும் செலவான பின்புதான் நீங்கள் பணத்தை சேமிக்கத் துவங்குவீர்களா? அதுபோலவே, உங்கள் ஆரோக்கியம் முற்றிலும் சீர்குலைந்த பின்புதான் உடற்பயிற்சி செய்யத் துவங்குவீர்களா? இல்லைதானே? உங்கள் உள்ளார்ந்த சேமிப்புகளான அதிர்ச்சிகளிலிருந்து மீளும்தன்மையையும், உங்களது ஆற்றலையும் வளப்படுத்தி வைத்துக்கொண்டால் உங்களுக்குத் தேவை எழும்போது அவற்றை உபயோகித்துக்கொள்ள இயலும், அல்லவா? பாருங்கள், இதற்கான முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். ஒருவேளை மனஅழுத்தம் வரும்வரை நீங்கள் காத்திருக்கலாம். அப்போதும் உங்களுக்கு உதவ இப்பயிற்சி, உங்களது சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும். இப்போது புரிந்து விட்டது! சரி பயிற்சியில் பங்குபெற பதிவு செய்கிறேன்!

நீங்கள் எதற்காக பயிற்சி அளிக்க கட்டணம் வசூலிக்கிறீர்கள்?

இப்பயிற்சிக்கான உரிய நேரத்தை நீங்கள் அர்ப்பணிப்பதை உறுதிப்படுத்துவது முதன்மையான காரணமாகும். உங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத அரிய திறன்களை இப்பயிற்சியால் உங்களுக்குத் தருவதோடு , நீங்கள் அளிக்கும் நன்கொடை நிதி இந்தியாவில் நடைபெறும் பல சேவைப் பணிகளுக்குப் பயன்பட வேண்டும் என்பது மற்றொரு காரணமகும். பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த 70000 குழந்தைகள் பள்ளி சென்று கல்வி பயில உதவுவது, 43 நதிகளின் புனரமைப்பு மற்றும் 2,04,802 கிராமப்புற இளைஞர்கள் தம் வாழ்வாதாரத்தைப் பெறத் தேவையான திறனளிக்கும் பயிற்சி, சூரியசக்திகொண்டு 720 கிராமங்களை ஒளிரச்செய்யும் திட்டம் போன்ற பல சேவைத் திட்டங்கள் அவற்றில் சிலவாகும்.