
வெல்னஸ் ப்ரோக்ராம் ஃபார் சப்ஸ்டன்ஸ் யூசர்ஸ்
சக்திவாய்ந்த சுவாச நுட்பங்கள், செயல்முறைகள் மற்றும் நிபுணர் நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி ஒரு மருந்தியல் அல்லாத சிகிச்சை
போதைப் பொருட்களையும் மதுவையும் விட்டுவிடுங்கள் • உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் • தீய பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள்
இந்த பயிற்சியின் மூலம் நான் என்ன பெற முடியும்?

போதைப் பொருட்களிலிருந்து விடுபட கற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் மது, கஞ்சா, போதைப்பொருள், ஊசி மருந்துகள், உள்ளிழுக்கும் மருந்துகள், ஓபியாய்டுகள் வலிநிவாரணிகள் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தினாலும், நிதானமாக இருக்க கற்றுக்கொள்ளலாம். புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி வகுப்புகளையும் நாங்கள் வழங்குகிறோம்

மன அமைதியுடன் நலமாக இருங்கள்
பக்கவிளைவுகள் இல்லாத சுவாச நுட்பங்கள் மற்றும் தியானங்களைக் கற்றுக்கொண்டு, ஆழ்ந்த ஓய்வை அனுபவிக்கவும், போதைப்பொருள் உபயோகிக்காமலே நன்றாக உணரவும் முடியும்.

ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துங்கள்
போதைப் பொருளின் தவறான பயன்பாடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும். இதற்கு மாற்றாக, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும், ஆற்றலை அதிகரிக்க உதவும் நுட்பங்களை இங்கு கற்றுக்கொள்ளலாம்.

மன அழுத்தம், பதற்றம் மற்றும் தூக்கமின்மையை நீக்குங்கள்
போதைப் பொருட்களின் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும் முக்கிய காரணியான மன அழுத்தத்தை எதிர்த்து வெல்லுங்கள். மேலும், நிரூபிக்கப்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி போதைப் பொருள் சார்ந்த பதற்றம் மற்றும் தூக்கமின்மையை அகற்றவும்.

சுதர்சன கிரியா
சுதர்சன கிரியா என்பது இந்த நிகழ்ச்சியில் கற்பிக்கப்படும் ஒரு தாள சுவாச நுட்பமாகும்., இந்த மூச்சுப் பயிற்சி போதைப் பொருட்கள் உபயோகிப்பாளர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பல நன்மைகளில் ஒன்றாகும்.

போதைப்பொருள் பழக்கத்துக்கு மீண்டும் செல்லாமல் தடுக்கும் வழிகள்
போதைப்பொருள் உபயோகிக்கும் ஒவ்வொருவரின் மிகப்பெரிய பயம் போதைப்பொருள் பழக்கத்துக்கு மீண்டும் செல்லாமல் தடுப்பதாகும்.
அடங்காத விருப்பத்தை கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் மறு உபயோகத்தைத் தடுக்கும் இயற்கை நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
82 பேர்களில், 65% பேர் 6 நாட்களுக்கு புகையிலை பயன்படுத்தாமல் இருந்தனர். மீதமுள்ளவர்கள் 50% முதல் 90% வரையான அளவில் புகையிலை பழக்கத்தை குறைத்திருந்தனர்.
ஆரோக்கிய பராமரிப்பில் யோகாவின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறை
மனநலம் சார்ந்த ஆண் கைதிகளில் நல்வாழ்வு உணர்வை அதிகரிக்கிறது மற்றும் பதற்றத்தை குறைக்கிறது
ஏசியன் மனநல மருத்துவ இதழ்
புகையிலை நுகர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது
புற்றுநோயியல் துறை, IRCH புது தில்லி
பொதுவான தவறான நம்பிக்கைகள் — முறியடிப்பு
ஜெய்ப்பூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இரைப்பை குடல் நிபுணர் மற்றும் இரத்தவியல் நிபுணர் (ஹெபடாலஜிஸ்ட்) டாக்டர் நீரஜ்

சிவப்பு திராட்சை மது (ரெட் ஒயின்) இதயத்திற்கு நல்லது

மது அருந்துவதற்கு பாதுகாப்பான வரம்பு உள்ளது

பீர் பாதுகாப்பானது

அதிகப்படியான குடிப்பழக்கம் பரவாயில்லை
வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்
திட்ட ஆலோசகர்கள் குழு:
டாக்டர் ராஜேஷ் தோபேஷ்வர்கர்
இருதயநோய் நிபுணர், இதய மின்னியல் நிபுணர் (EP), இதய தாளம் மற்றும் இதய செயலிழப்பு மருத்துவமனை, புனே
புது தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) -ல் முதுகலை பட்டம் பெற்ற டாக்டர் ராஜேஷ் தோபேஷ்வர்கர், புனேவில் உள்ள முதல் மூன்று இருதயநோய் நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் கார்ப்பரேட் துறைக்கான வாழ்க்கை முறை சீர்கேடுகள் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த அமர்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

டாக்டர் நீரஜ் நாகைச்
ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர்
புகழ்பெற்ற மருத்துவ இதழ்களின் ஆசிரியரும், அடிக்கடி ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்குபவரும், வெளியிடுபவருமான டாக்டர் நீரஜ், இந்திய இரைப்பை குடல் மருத்துவ சங்கம் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களுடனும் தொடர்புடையவர்.

டாக்டர் தீபக் காந்தி
ஆயுர்வேத ஆலோசகர், நிரஞ்சனி சிகிச்சாலயா, புனே
டாக்டர் தீபக் கடந்த எட்டு ஆண்டுகளாக தூய ஆயுர்வேதம், பஞ்சகர்மா மற்றும் பஞ்சபௌதிக சிகிச்சையைப் பயிற்சி செய்து வருகிறார். ஆயுர்வேத தடுப்பு மருத்துவம், உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை, கருவுறாமை மற்றும் தொற்றா நோய்களுக்கான ஆயுர்வேத மேலாண்மை மற்றும் புற்றுநோய் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை அவரது ஆர்வமுள்ள துறைகளில் அடங்கும்.

டாக்டர் பெலிண்டா வாஸ்
தோல் மருத்துவ ஆலோசகர், மும்பை
30 வருடக்கால துறை அனுபவமுள்ள டாக்டர் பெலிண்டா, பல விருதுகளால் கௌவுரவிக்கப்பட்டுள்ளார் அதே நேரத்தில் அவர் ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். பல்வேறு தோல் கோளாறுகளின் தோற்றத்தில் மனதின் பங்கால் அவர் ஈர்க்கப்படுகிறார், மேலும் தோல் நிலைகளைக் குறைப்பதில் உணவு, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை நுட்பங்களை அங்கீகரிக்கிறார்.

டாக்டர் அஞ்சு தவான்
பேராசிரியர், தேசிய போதைப்பொருள் சார்பு சிகிச்சை மையம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்), புது தில்லி.
கடந்த 30 ஆண்டுகளாக போதைப்பொருள் மனநலத் துறையில் பணியாற்றி வரும் அவர், பல நிபுணத்துவ தேசிய மற்றும் சர்வதேச குழுக்களில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். அவர் பல வெளியீடுகள், தனிக்கட்டுரைகள் மற்றும் மதிப்புமிக்க பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இளம் பருவத்தினரின் போதைப்பொருள் தவறான பயன்பாடு சிகிச்சைக்காக அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் எய்ம்ஸில் ஒரு மருத்துவமனையை (க்கூடம்) நடத்தி வருகிறார், இது அவரது சிறப்பு ஆர்வமுள்ள பகுதியாகும்.

டாக்டர் ஏக்தா
அவுரங்காபாத்தில் உள்ள சத்வ ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் பஞ்சகர்மா மையத்தில் ஆலோசகர்
மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் - சுமதிபாய் ஷா ஆயுர்வேத மகாவித்யாலயா (சானே குருஜி மருத்துவமனை) புனேவில் முதுகலைப் பட்டம் (ரோக்னிதன்-விக்ருதி விக்யான்) பெற்ற டாக்டர் ஏக்தா, இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சான்றளிக்கப்பட்ட யோகா ஆசிரியராகவும் உள்ளார். தனது பரபரப்பான அட்டவணை இருந்தபோதிலும், அவர் எப்போதும் சமூகக் காரணங்களுக்காக நேரத்தைக் கண்டுபிடித்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தனது சிறிய பங்களிப்பை வழங்க விரும்புகிறார்.
நான் சேர விரும்புகிறேன் ஆனால்...
ஆன்லைன் வடிவம் இன்னும் கிடைக்கிறதா?
இந்தப் பயிற்சியின் கால அளவு என்ன? பொருத்தமான நேரத்தை நான் கண்டுபிடிக்க முடியுமா?
இது 15 மணி நேரத்துக்கான ஒரு திட்டமாகும் (5 நாட்கள், தினமும் 3 மணி நேரம்). உங்களுக்கு வசதியாக இருக்கும் நேரத்தில் இந்தத் திட்டங்களை எளிதாகக் காணலாம்.
நான் இந்தப் பயிற்சியைச் செய்யும்போது எனது போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாடு பற்றி யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயப்படுகிறேன்.!!
நான் போதைப்பொருளை நம்பியிருப்பவன் அல்ல. நான் போதைப்பொருளை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துகிறேன். நான் ஏன் சேர வேண்டும்?
நான் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார முடியாது. தியானம் செய்ய எனக்கு பொறுமை இல்லை.
எனது போதைப்பொருளைப் பயன்படுத்துவது பற்றி யாருடனும் விரிவாகப் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.
சுதர்சன கிரியா சுவாச நுட்பம் எனது ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?
ஆம், பல ஆய்வுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் இந்த பயிற்சி பயனர்கள் மற்றும் பயனர்கள் அல்லாதவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றன. இது தூக்கத்தை மேம்படுத்துதல், மன அழுத்தத்தைக் குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பலவற்றைச் செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைத்து உடல்நல நிலைகளையும் பயிற்சியாளருக்குத் தெரியப்படுத்துங்கள், நாங்கள் உங்களுக்கு மிகவும் தனிப்பட்ட அனுபவத்தை வழங்க முடியும்.