international children and teens enjoying a yoga session

மேதா யோகா லெவல் 2

மீள்தன்மை அடைதல், சுய கட்டுப்பாட்டை உருவாக்குதல், பெரிதாக சிந்தித்தல், பாதுகாப்பாக உணர்தல், பகிர்தலின் மூலம் கற்றுக் கொள்ளுதல்.

தகுதி: மேதா யோகா லெவல் 1 பட்டதாரிகள் (13 முதல் 18 வயது)

பதிவு செய்ய

பதின்ம வயதினர் எவ்வாறு பயனடைவார்கள்?

சர்வதேசப் பரவலின் பின்னணியில், வயது தொடர்பான பிரச்சினைகள், மற்றும் நிச்சயமற்றதன்மை, பதின்ம வயதினர் நமது பயிற்சிகளின் மூலம் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை கண்டறிகிறார்கள்.

icon

பாதுகாப்பாக உணர்தல்

பதின்ம வயதினர் இங்கு பாதுகாப்பாக உணர்வதால் உடலால், உணர்ச்சியால், மற்றும் அறிவுசார்ந்த மாற்றங்களுக்கு மனதார உட்படுத்திக் கொள்ள கற்றுக் கொள்கிறார்கள்.

icon

பகிர்தலின் மூலம் கற்றுக் கொள்ளுதல்

பதின்ம வயதினர் தங்களுடைய சொந்த பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதோடு மட்டுமல்லாமல், தங்கள் சகாக்களின் மோதல்கள் மற்றும் போராட்டங்களை கவனிப்பதன் மூலமும் கற்றுக் கொள்கிறார்கள்.

icon

சுய கட்டுப்பாட்டை உருவாக்குதல்

பதின்ம வயதினர் தங்களுடைய உணர்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளைக் கையாள்வதற்கும், தங்களுடைய வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்கிறார்கள்.

icon

சிறப்பாகச் சிந்தித்தல்

பதின்ம வயதினர், அவர்கள் கவனம் செலுத்த ஏதுவான பெரியதான ஒன்றைக் கண்டுபிடிக்கும் வரை தங்களை முற்றிலும் உள்வாங்கிக் கொண்டவர்காளக இருப்பார்கள். நாங்கள் அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறோம்.

மேதா யோகா என்றால் என்ன?

ஆராய்ச்சி “மகிழ்ச்சியான பதின்ம வயதினர் ஆரோக்கியமான பெரியவர்களாக மாறுகிறார்கள்” என்று காட்டுகிறது. ஆனால் மகிழ்ச்சியான பதின்ம வயதினர் அரிதாகி வருகிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்வயது பருவத்திற்கு மாறுவது, கல்வி, நுழைவுத் தேர்வுகள், சகாக்களின் அழுத்தம், மற்றும் உறவுமுறைகளுடன் அதிகரிக்கும் மன அழுத்தம், சவால்கள் ஆகியற்றை உள்ளடக்கியதாகும்.

மேதா யோகா நிலை 2ல், பதின்ம வயதினர் தாங்கள் கற்றுக் கொண்ட எளிய செயல்முறைகளை முன்னிறுத்தி, ஞானம் மற்றும் ஆழ்ந்த தியானம் ஆகியவற்றை மேல்நிறுத்தி, பயம் மற்றும் தடுப்புகளைக் கடந்து, தங்களின் தனித்தன்மையான பலங்களைக் கண்டறிகிறார்கள். தியானத்தின் மூலம் பெறும் சேவையில் இன்பம், அமைதி சுதந்திரம் மற்றும் அறிவுசார் கூர்மை ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள். இத்திட்டம் பதின்ம வயதினர் மற்றவர்களை விட சிறந்தவராக இருப்பதற்கு மாற்றாக, தங்களுடனேயே போட்டி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. வாழ்நாள் முழுவதும் வெற்றிக்கு அடித்தளமாக விளங்குகிறது.

முக்கிய கூறுகள்

icon

சேவை

பதின்ம வயதினர் சேவை செய்வதில் ஈடுபட்டு தங்கள் சுயத்தை ஆராய்ந்து, அவர்கள் வாழும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்துடன் ஒரு வலுவான இணைப்பை ஏற்படுத்துகிறார்கள்.

icon

முத்ரா பிராணாயாமங்கள்

குறைந்த, ஆனால் சக்தி வாய்ந்த சுவாச நுட்பங்களுடன் பதின்ம வயதினர் உடல் முழுவதும் மேம்படுத்தப்பட்ட ஆற்றலை அனுபவிக்கிறார்கள். தினமும் ஒரு சில நிமிடங்கள் உலகளவு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

icon

குழு விவாதங்கள்

பதின்ம வயதினர் தங்கள் கருத்துக்களையும், அச்சங்களையும் வெளிப்படையாகத் தெரிவித்து, மற்றவர்களுக்கு செவிசாய்ப்பதன் மூலம் சுறுசுறுப்பாக தீர்வுகளை நாடுவதோடு, அதிலிருந்து வெளியிலிருந்து சிந்தித்து கற்பனை செய்து யோசனைகளை செயல்படுத்துகிறார்கள்.

icon

மௌனம் மற்றும் தியானங்கள்

பதின்ம வயதினர் தங்கள் மனக்குரலை கண்டறிந்து, தங்கள் கனவுகளை வெளிக்கொணர்ந்து, தங்களை சுயமாகப் பரிசோதித்து, அசைக்க முடியாத மையக்கருவான அவர்களின் சுயத்தின் சாராம்சத்துடன் இணைகிறார்கள்.

மேதா யோகா பற்றிய ஆராய்ச்சிகள்

22%

மேம்படுத்தப்பட்ட துல்லியமான செயல்திறன்

29%

மிகச் சிறந்த நல்வாழ்வு

69%

குறைக்கப்பட்ட உணர்ச்சி சிக்கல்கள்

67%

குறைந்த அதிவேகத்தன்மை

50%

குறைக்கப்பட்ட சகாக்களின் பிரச்சனைகள்

78%

குறைந்த நடத்தை சிக்கல்கள்

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.

மேலும் அறிக

நான் பயிற்சியில் சேர விரும்புகிறேன், ஆனால்…

இப்பயிற்சியை பற்றி மேலும் விவரங்கள் தர முடியுமா?

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட நுட்பங்கள், பழமை வாய்ந்த யோக நுட்பங்கள் மற்றும் பயிற்சிகளை அடிப்படையாக கொண்டது மேதா யோகா. தியானம், யோகா மற்றும் மூச்சு பயிற்சிகளை கற்று தருவதோடு, ஒரு முழுமையான, தன்னம்பிக்கை நிறைந்த வாழ்க்கையை வாழவும், சந்தேகங்கள், மனத்தடைகள், பயம் மற்றும் பதட்டத்தை வெற்றி கொள்ளவும், பதின்பருவத்தினருக்கு இப்பயிற்சி கற்றுத் தருகிறது. இப்பயிற்சியில் ஒரு திறந்த மேடையில் தங்கள் பிரச்சினைகளை விவாதிப்பதனால், சகபயிற்சியாளர்களோடு ஒருமைத்தன்மையை உணர்கிறார்கள். பதின்பருவத்தினர் மிகவும் விரும்புவது மற்றவரிடம் சொந்த போன்ற உணர்வையும் உரிமையோடு பழகுவதையும் தான்; இப்பயிற்சி அவர்களுக்கு அதை அளிக்கிறது. அவர்களுக்கு ஆன்மீகம் மற்றும் இந்திய பாரம்பரியத்தின் அறிமுகமும் கிடைக்கிறது.

பதிவு செய்த பிறகான நடைமுறை என்ன?

நீங்கள் ஒரு படிவத்தில் உங்கள் பதின்பருவதினரின் விவரங்களை நிரப்ப வேண்டியிருக்கும். அதற்கு பிறகு, இணயவழி கட்டணம் கட்ட பேமெண்ட் கேட்வேக்கு செல்ல அறிவுறுத்தப்படுவீர்கள். அவ்வளவுதான்! ஈமெயில் மற்றும் வாட்சப் மூலமாக உங்களை தொடர்பு கொண்டு, நாங்கள் பயிற்சியைக் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்போம்.

இன்னொரு இணையவழி பயிற்சியா? அது தேவையா என யோசிக்கிறேன்.

நீங்கள் சொல்லவருவது எங்களுக்கு புரிகிறது. ஆனால், உங்கள் பதின்பருவத்தினர் முரண்பாடுகள் இல்லாத, அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான வாழ்க்கை வாழக்கூடும் என்றால், இது தேவைதானே? அரிந்தோ, அரியாமலோ அவர்கள் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை பாதிக்கும் பருவம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை கையாள இப்பயிற்சி பதின்பருவத்தினருக்கு கற்றுத் தருகிறது.

பதின்பருவத்தினர் இப்பயிற்சியின் போது நேரடியாக கேள்விகளை கேட்கலாமா?

நிச்சயமாக! இப்பயிற்சி கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டது. பதின்பருவத்தினர் தங்கள் கருத்துகளையும், அவதானிப்புகளையும் (அப்ஸர்வேஷன்) முன்வைக்கவும், சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் வரவேற்கப்படுவார்கள்.

என்னுடைய பதின்பருவ மகன்/மகள் மற்றவருடன் பழகத் தயங்குபவர். மேலும் பயிற்சியின் செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்காமலும் இருக்கலாம். இப்பயிற்சி அவன்/அவளுக்கும் நன்மை தருமா?

நிச்சயமாக! அவர்களும் இப்பயிற்சியில் பயன் பெறுவார்கள். கூச்ச சுபாவம் உள்ள பதின்பருவத்தினரும் இப்பயிற்சியின் போதும், அதன் பின்னரும் தயக்கத்தை உதறி தான் நினைப்பதை பேசக் கற்றுகொள்கிறார்கள்.