பவித்ரா திட்டம்

வயதுக்கு வந்த பெண்களிடையே மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பரப்புதல்.

நன்கொடை அளிக்க

icon

சவால்

இந்திய சமூகத்தில் மாதவிடாய் இன்னும் வெளிப்படையாக பேசப்படாத விஷயமாகக் கருதப்படுகிறது.

icon

உத்தி

கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

icon

எட்டும் இலக்கு

கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த மொத்தம் 2,00,000+ பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.

கண்ணோட்டம்

கலாச்சார மற்றும் சமூக காரணிகள் இன்னும் இளம் பெண்களுக்கான பயனுள்ள மாதவிடாய் சுகாதாரக் கல்வியைத் தடுக்கின்றன. பல தாய்மார்கள் மாதவிடாய் பற்றி கலந்துரையாடத் தயங்குகிறார்கள் மற்றும் பருவமடைதல் பற்றிய அறிவியல் அறிவு இல்லை. அறிந்திருந்தாலும் கூட, இந்தியாவில் பெண்கள் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு மருத்துவ உதவியை அரிதாகவே நாடுகிறார்கள்.

வீட்டிலும் பள்ளியிலும் உள்ள எதிர்மறையான சமூக மனப்பான்மை மற்றும் தகவல் பற்றாக்குறை பல சிறுமிகளுக்கு மாதவிடாய் பற்றிய அறிவு, தனால் ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் சரியான சுகாதார நடைமுறைகள் என பல விஷயங்கள் தெரியாமலே போகின்றது. மாதவிடாய் பெரும்பாலும் சமூக கட்டுப்பாடுகளும், மாறுபட்ட எதிர்பார்ப்புகளும் கொண்டு, பெண்களின் சுதந்திரம் மற்றும் சுய வெளிப்பாட்டை பாதிக்கிறது.

போதுமான மாதவிடாய் சுகாதாரமின்மை இனப்பெருக்க மண்டல தொற்று (RTI) மற்றும் இடுப்பு அழற்சி நோய் (PID) போன்ற சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மாதவிடாய் துவக்கத்திலிருந்தே நேர்மறையான அணுகுமுறைகளையும் நல்ல மாதவிடாய் சுகாதாரத்தையும் ஊக்குவிப்பது பெண் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி மற்றும் கண்ணியத்திற்கு அவசியம்.

விழிப்புணர்வு திட்டத்தின் நோக்கங்கள்

icon

விழிப்புணர்வைப் பரப்புதல்

மாதவிடாய், இயல்பான நிகழ்வு என்பது குறித்து சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

icon

தடைகளை நீக்குதல்

சமூகத் தடைகளை நீக்கி, மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை நிர்வகித்தல்

icon

வாழ்க்கை முறை மாற்றம்

ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் தகுதிக்கான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற அவர்களுக்கு உதவுதல்

icon

நம்பிக்கையை உருவாக்குதல்

ஒரு பெண்ணாக இருப்பதில் தன்னம்பிக்கை, பெருமை மற்றும் மரியாதை உணர்வை ஊட்டுதல்

உத்தி

ஆரோக்கியமான யோகா மற்றும் ஆயுர்வேத நிபுணர்களுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆலோசனை மூலம் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் பயிற்சி தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்டம் 11 முதல் 45 வயது பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது..

மாதவிடாய் காரணமாக பெண்கள் அனுபவிக்கும் மன மற்றும் உடல் ரீதியான மன அழுத்தத்தை நிர்வகிப்பதை கற்பிப்பதில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்துகின்றது. மேலும்:

  • மாதவிடாய்க்கு முந்தைய பதற்றத்தை (அதிகரித்த எரிச்சல், வீக்கம் மற்றும் பிடிப்புகள்) குறைக்க பிராணயாமம்.
  • மாதவிடாய்க்கு முன் ஏற்படும் சிக்கல்கள் (பி.எம்.எஸ்) அதிகப்படியான அல்லது குறைவான இரத்தப்போக்கையும் கட்டுக்குள் வைத்திருக்க யோகா ஆசனங்கள்.
  • ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி மற்றும் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவதற்கான உணவுமுறை (உள்ளூரில் கிடைக்கும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி இரத்த சோகை மற்றும் பலவீனத்தைத் தவிர்க்க).
  • இந்த இயற்கை நிகழ்வைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் மூடநம்பிக்கைகளை விளையாட்டுத்தனமான முறையில் பெண்கள் அகற்ற உதவும் விளையாட்டுகள் மற்றும் குறும்படங்கள்.
  • உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி போதுமான மாதவிடாய் சுகாதாரத்தைப் பராமரித்தல்.

இந்த விரிவான பயிற்சியில், மாதவிடாய் சுகாதாரம் பற்றிய முழுமையான தகவல்கள் வழங்கப்படுகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் சமூக-கலாச்சார விதிமுறைகளை நிவர்த்தி செய்ய பெண்களுக்கு தேவையான தன்னம்பிக்கையூட்டி சுய - செயல்திறனுடன் விளங்க உதவுகிறது.

தாக்கம்

28

இந்தியாவில் மாநிலங்கள்

11+

நாடுகள்

7,000+

பயிற்சியாளர்கள்

2,00,000+

பெண்கள்

வாழும் கலை சமூக திட்டத் துறை

வாழும் கலை சர்வதேச மையம், 21வது கி.மீ, கனகப்புரா சாலை, பெங்களூரு, இந்தியா

pavitra@projects.artofliving.org

    Contact us
    *
    *
    *
    *
    *