icon-love

44 ஆண்டுகளாக வாழ்க்கையை மாற்றி வருகிறது

icon-earth-globe

10,000+ உலகம் முழுவதும் தியான மையங்கள்

icon-location

182 நாடுகள்

icon-group

80 கோடிக்கு மேல் மக்களை சென்றடைந்துள்ளது

உலக தியான தினம்: ஒரு உலகப் புரட்சி

நாற்பது ஆண்டுகளாக குருதேவர் தனி நபர், சமூகம் மற்றும் நாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவந்து, தம்முள் உறையும் சக்தியை கண்டறிய லட்சக்கணக்கானோரை ஊக்குவித்துள்ளார். தியானத்தின் மூலம் போர்களை முடிவுக்கு கொண்டுவருதல் மற்றும் போராளிகள் சரணடைய வழிவகுத்தல் முதல் கல்வியில் புரட்சியை ஏற்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் போன்ற பல ஆழமான மாற்றங்களை, குருதேவர் கொண்டு வந்துள்ளார். அவரது முயற்சிகள், எண்ணற்ற சிறைக் கைதிகள் மற்றும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்ததோடு மட்டுமல்லாமல், போதைப்பொருளில்லா வளாகங்களை உருவாக்குதல், கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்வாழ்வை கொண்டுவருதல் மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு உதவுவதன் மூலம் உலகின் 180 நாடுகளில், பல லட்சம் மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

2024 ம் ஆண்டில், ஐ.நா சபை டிசம்பர் 21 ம் தேதியை  உலக தியான தினமாக அறிவித்தது. 21 டிசம்பர் 2024 அன்று நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில், உலகெங்கிலும் உள்ள பல லட்சம் மக்களை குருதேவ் தியானத்தில் வழிநடத்தினார்.

செயல்முறையில் தியானம்

2025 உலக தியான தினத்தில் நான் ஏன் சேர வேண்டும்?

icon

ஒரு வரலாற்றுத் தருணம்

வரலாற்றைப் பற்றி வாசிப்பதை விட அதில் பங்கேற்பது சிறந்தது. ”நான் ஐ.நா வின் முதல் உலக தியான தினத்தில் பங்கேற்றேன்,” என்று யார்தான் சொல்ல விரும்ப மாட்டார்கள்?

icon

உலகளாவிய தியானம்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தியானிக்க உள்ளனர்; இது நடைபெறும்போது அதன் பயன்கள் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.

icon

தியான குரு

குருதேவருடன் தியானம் செய்வதென்பது ஒரு நிகழ்ச்சி அல்ல — அது ஒரு அனுபவம்!

உங்களால் சுவாசிக்க முடியும் என்றால் உங்களால் தியானம் செய்யவும் முடியும்!

நான் இன்னும் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்...

இதற்கு ஏதாவது தகுதி தேவையா?

உங்களால் சுவாசிக்க முடியும் என்றால் உங்களால் தியானமும் செய்ய முடியும்!

குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா?

5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (ஆம், நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள்) இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

தியானத்திற்கு முன்னனுபவம் தேவையா?

இல்லை! தியான வல்லுனராக இருக்க வேண்டிய அவசியமில்லை —உங்களையும், உங்கள் சுவாசத்தையும் மட்டும் கொண்டு வாருங்கள்.

நிகழ்ச்சிக்கு முன் நான் தியானத்தை முயன்று பார்கலாமா?

நிச்சயமாக! யூடியூபில் குருதேவரின் தியான சேனலான “ குருதேவரின் தியானங்கள்" என்ற இணைப்புக்குச் சென்று அதில் இருக்கும் நூற்றுக்கணக்கான, வழிகாட்டுதலுன் கூடிய தியானங்களிலிருந்து நீங்கள் விருப்பப்படி தேர்வு செய்து பயிற்சி செய்யலாம்.

டிசம்பர் 2024ல், நியூ யார்கின் ஒன் வேர்ல்ட் ட்ரேட் சென்டரிலிருந்து குருதேவ் தலைமைத் தாங்கிய தியானத்தில் 8.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணையவழியில் பங்கேற்றனர்.

2025 ஆம் ஆண்டிற்கான உங்கள் இலவச இடத்தைச் சேமிக்கவும்

    *
    *
    *