கோபம்

வேறு ஒருவர் செய்யும் தவறுக்கு நீங்கள் அளிக்கும் தண்டனை

யாரும் கலக்கத்திலோ, கோபத்திலோ இருக்க விரும்புவதில்லை. மற்றவர்கள் தவறிழைக்கும் பொழுது, நாம் இரக்கப்படவில்லை என்றால், அவர்கள் மீதும், இறுதியில் நம் மீதும் கோபமடைவது உறுதி. நம்மைப்பற்றி, நம் மனதைப்பற்றி, நமது விழிப்புணர்வைப் பற்றி மற்றும் நம் இயல்பில் ஏற்படும் சிதைவின் மூலக்காரணம் இவற்றைப்பற்றிய சிறிதளவு அறிவு நமக்கு உதவும். நம் மூச்சு நமக்கு கற்றுத்தரக்கூடிய ஒரு மகத்தான பாடத்தை நாம் மறந்துவிட்டோம். மூச்சுப்பயிற்சிகள் மற்றும் தியானம், நம் மனதை சாந்தப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளவையாக அமைகின்றன. அப்போதுதான் நம்மால் நமது கோபத்தை விலையுயர்ந்ததாகவும், நமது புன்னகையை இலவசமாகவும் ஆக்க இயலும்.

கோபத்தைப் பற்றிய ஆச்சரியமான இரகசியம்

icon

தர்ம நெறியைப் பின்பற்றுவதைப் பற்றிய சிந்தை

தர்மத்தின் பாதையைக் கடைபிடிப்பதைப் பற்றிய நமது எண்ணமே கோபத்தின் மூல காரணமாகும். நீங்கள் சரியான பாதையில் இல்லையென்று நினைத்தால், உங்களால் கோபம் கொள்ள முடியாது. ஒருவர் மற்றவர் மீது கோபமாக இருந்தால், இருவரும் தாங்கள் தான் சரி என்று கருதுகிறார்கள். நீங்கள் இருவரிடமும் தனித்தனியாக பேசும்போது, அவரவர் கோணத்திலிருந்து, அவ்விருவரும் சரி என்பது உங்களுக்கு விளங்கும். எனவே தர்ம நெறி பற்றிய சிந்தை ஒருவரின் கண்ணோட்டமே.

icon

ஆழ்ந்த ஆசை

இரண்டாவது காரணம் — நமக்குள் ஒரு ஆழ்ந்த ஆசை இருந்து, அது நிறைவேறவில்லை என்றால், நாம் விரக்தியடைவோம். அந்த விரக்தியே கோபமாக வெளிப்படும்.

icon

சோர்வு

மூன்றாவது காரணி, நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்து, சுமந்து கொண்டிருக்கும் மன அழுத்தங்களிலிருந்து விடுபடாமல் இருக்கும்போது, அந்தச் சோர்வு கோபமாக மாறும்.

icon

பரிபூரணத்திற்கான ஆசை

நான்காவது காரணம், நீங்கள் பரிபூரணத்திற்கான ஆசையைக் கொண்டிருப்பதால், நீங்கள் அபூரணத்தின் மீது கோபப்படுகிறீர்கள். உங்கள் பரிபூரணக் கருத்துக்குள் அனைவரும் பொருந்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், அது நடக்கப்போவதில்லை. அது நிச்சயமாக உங்களுக்குள் கோபத்தைத் தூண்டும்.

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

உங்கள் கோபத்தை விலையுயர்ந்ததாகவும், உங்கள் புன்னகையை இலவசமாகவும் ஆக்குங்கள்!

வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்

கோபம் உங்களது உண்மையான தன்மையின் சிதைவு; இது உங்களது ஆன்மாவை முழுமையாகப் பிரகாசிக்க விடுவதில்லை. நீங்கள் கோபப்படக் கூடாது என்று நூறு முறை நினைவு படுத்திக் கொண்டாலும், உணர்வு எழும்பும் போது அதை, உங்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை. அது இடியுடன் கூடிய மழை போல வரும்.

- குருதேவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

கோபத்தை விட்டொழிப்பதற்கான குறிப்புகள்

exercises

உடற்பயிற்சிகள்

பொதுவாக, அதிகமாக உடல் இயக்கம் இல்லாதவர்கள் பெரும்பாலும் அதிகம் கோபம் அடைகிறார்கள். அனைத்து ரஜோ குணங்களும் உடலில் தேங்கியுள்ளன ,அவை புத்தியில் தேங்கியுள்ள. நீங்கள் நீண்ட நடைப் பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். ஓடு பொறியில் (tread mill) பயிற்சி செய்யுங்கள். யோகா இதற்கு ஒரு நல்ல மாற்று பயிற்சியாகும். சூர்ய நமஸ்காரம் செய்யுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் சோர்வடைவீர்கள். கோபப்படுவதற்கு உங்களுக்கு சக்தியே இருக்காது.

Meditation - Smiling Ekta meditating on the pathway in Ashram

மூச்சு மற்றும் தியானம்

ஆழ்ந்த மூச்செடுத்து அமைதி அடையுங்கள். தொடர்ந்து பிராணாயாமம் மற்றும் தியான பயிற்சி செய்வது உங்களுக்கு கோபத்தை வெல்வதற்கு தேவையான பலத்தை அளிப்பது உறுதி.

Children and teens - Happy girl smiling with open arms looking at the sky

உங்கள் பார்வையை விசாலமாக்குங்கள்

இந்த உலகம் முழுமையாகப் பரிபூரணமாக இருக்க முடியாது — எனவே பார்வையை விசாலமாக்குங்கள். குறைபாட்டிற்கு சிறிது இடமளியுங்கள். .'நான் மட்டுமே சரி” என்பதனை பிடித்துக்கொண்டு இருக்காதீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கும் இடம் கொடுங்கள். எல்லோரையும் நீங்கள் விரும்பியவாறு இருக்கச் செய்ய முடியாது. அனேகமாக விரும்பத்தகாதவை நிகழக்கூடும். அவ்வாறு நிகழும்போது அதை கடந்து செல்வதற்கு வலிமையும், தைரியமும் உங்களுக்கு இருக்க வேண்டும்.

மனிதர்களையும்,சூழ்நிலைகளையும் அவ்வாறே ஏற்றுக்கொள்ளுங்கள்.

healthy food habits to maintain wellness

உங்கள் உணவில் கவனம் கொள்ளுங்கள்

நீங்கள் பித்த உடல் வகையுடையவராயின் எளிதில் கோபப்படுவீர்கள். உங்களது உணவை கட்டாயமாக நாளின் முற்பகுதியில் உட்கொள்ளுங்கள். சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் எதையேனும் உண்ணுங்கள். இல்லையெனில், பித்தம் அதிக அளவு உயரும். பித்த தன்மை கொண்டவர்களுக்கு காலை உணவு மிகவும் அவசியம். மிளகுசாஸ் (டபாஸ்கோ சாஸ்) மற்றும் காரமான மிளகாய் சாஸை அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அதிக நேரம் உபவாசம் மேற்கொள்ள வேண்டாம்; நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ளுங்கள். உணவுப் பழக்கங்கள் உங்கள் உடலில் அதாவது உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும்; அப்போதுதான் பித்தம் சமநிலையை இழந்து, எப்போதும் கோபத்திற்கும் கலக்கத்திற்கும் உட்படுவீர்கள்.

உங்கள் பித்தம் சமநிலையில் உள்ளபொழுது நீங்கள் காரணமின்றி கோபப்பட மாட்டீர்கள்.

மற்றவர் கோபம் கொள்ளும் பொழுது என்ன செய்வது?

யாராவது கோபமாக இருக்கும்போது நீங்களும் அதே நேரத்தில் கோபப்படாதீர்கள். இது அவருடைய நேரம், அவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் ஒரு பார்வையாளராக இருங்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவராக இருக்க வேண்டாம். வேறு ஒரு சமயம் நீங்கள் பொறுமை இழந்து கத்துவீர்கள். உங்கள் கோபத்தை வெளிபடுத்துவீர்கள். அதற்கும் நேரம் வரும். எனவே ஒருவரும் பார்வையாளராக இல்லாமல், அனைவரும் பங்கேற்பாளாராக ஆகும் பொழுதே பிரச்சினை உருவாகிறது. மாறி மாறி கோபப்படுங்கள். குதூகலம் கொள்ளுங்கள். நகைச்சுவை கோபத்திற்கு ஒரு மாற்று மருந்தாகும். நீங்கள் நடுநிலையில் இருக்கும் பொழுது, நகைச்சுவை உணர்வு தானாகவே அங்கு நிலவும்.

ஒருவர் காரணமின்றி பொறுமையை இழக்கும்பொழுது அவரது பித்தம் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு அவரை சாந்தப்படுத்த உதவுங்கள். சிறிது ஐஸ்கிரீம், பால் அல்லது பித்தத்தை தணிக்கக்கூடிய ஏதாவது குளிர்ந்த உணவு ஒன்றை அவர்களுக்குக் கொடுக்கவும். அது அவர்களின் மனநிலையையும் சமநிலைப்படுத்தும்.

நான் ஒருபொழுதும் கோபம் கொள்ளக்கூடாதா?

கோபம் நல்லதல்ல என்றல்ல. கோபம் சில வினாடிகளே நிலைக்குமாயின்,அது ஒரு பொருட்டாகாது. நீரில் வரையப்பட்ட கோடு நிலைத்திருக்கும் கால அளவிற்கே அது நிலைக்க வேண்டும். எப்பொழுதாவது ஒருமுறை கோபம் வரும்பொழுது உங்களை நீங்கள் குறைக்கூறிக் கொள்ளாதீர்கள். ஆன்மீகப் பாதையில் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்று சுயக்குற்றச்சாட்டு ஆகும்.

கோபத்தை வெளிப்படுத்துவதே தவறு என்பதல்ல.; ஆனால் உங்கள் கோபத்தை உணராமல் இருப்பது உங்களைத்தான் புண்படுத்தும். சில சமயங்களில் உங்கள் கோபத்தை காரணத்தோடு வெளிப்படுத்தலாம். உதாரணத்திற்கு ஒரு தாய் தன் குழந்தைகள், தங்களை அபாயத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளும் பொழுது, கோபம் கொண்டு அவர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்ளலாம் அல்லது அவர்களை கண்டிக்கலாம். அது உண்மையான அக்கறையால் வரும் “கட்டுப்படுத்தப்பட்ட கோபம்.”

கோபம் சில சமயங்களில், உங்களை, நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தயங்கும் சவால்களை எதிர்கொள்ளத் தூண்டும் ஒரு உந்துசக்தியாகவும் இருக்கலாம். ஆனால் அதில் கசப்பு உணர்வு இருக்குமாயின், அந்தக் கோபம் உங்களை உள்ளே அரித்துவிடும். கோபம் ஒரு நெருப்பு போன்றது — அது உங்களுக்கு வெப்பம் தரக்கூடும்; அதே சமயம் எரித்துவிடவும் முடியும். அந்த நெருப்புப் போன்றது. கோபத்தினால் ஏற்படும் விளைவுகளை கவனியுங்கள். கோபத்தில் நீங்கள் எடுத்த முடிவுகள் அல்லது கூறிய வார்த்தைகள் உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கின்றனவா? இல்லை, ஏனெனில் நீங்கள் உங்களது விழிப்புணர்வை முழுமையாக இழந்துவிட்டீர்கள். ஆனால் நீங்கள் முழு விழிப்புணர்வுடன் இருந்து கோபத்தை வெளிப்படுத்தினீர்கள் என்றால் அது நன்று.

கோபம் உங்களை சிறிதும் பாதிக்காத நிலையை அடைய, சிறிது காலம் எடுக்கும். மீண்டும், மீண்டும் கோபம் வெவ்வேறு சாயல்களில், தீவிரங்களில் வந்து கொண்டிருக்கும். அந்த நிலையை அடையும் தருணம் வரை, உங்களது பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யுங்கள் - சுதர்சன கிரியா, பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை உங்களுக்கு மிகுந்த துணைபுரியும்.