உலக சாதனைகள்

வாழும் கலை அமைப்பு பன்முகத்தன்மையை கொண்டாடி இசையின் வாயிலாக கலாசாரங்களை இணைக்கிறது.

வாழும் கலை அமைப்பின் குறிக்கோள்களில் ஒன்றானது, மதங்களுக்கிடையேயும் மற்றும் கலாசாரத்திற்குமிடையேயான பிணைப்புகளை வலுப்படுத்துவது ஆகும். குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பன்முகத்தன்மையை கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பன்முகத்தன்மையை அனுபவிப்பதற்கு இசை மூலம் வெளிப்படுத்துவதை விட சிறந்த வழி வேறு என்ன!

மனதை மயக்கும் ஸ்காட்லாந்தின் பேக்பைப் (bagpipes) இசை முதல் சிதாரின் மதுரமான இசை குறிப்புகள் வரை, இசை என்னும் பொதுவான பிணைப்பு, சமூகங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பிரிவைக் கடக்க உதவும் பாலமாக இருந்து வருகிறது. வாழும் கலை அமைப்பு, மிகப் பெரிய எண்ணிக்கையிலான கலைஞர்களையும், ரசிகர்களையும் ஒன்றிணைத்ததன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பிரம்மாண்டமான சாதனைகளுக்காக கின்னஸ் உலக சாதனை விருதுகள் பெற்ற கலாசார நிகழ்வுகள் பின்வருமாறு!

1. 9 ஜனவரி 2013 - அமைதிக்காக ஊதுதல்

மிகப் பெரிய அளவிலான, 444 இசைக்கலைஞர்களைக் கொண்ட கொம்பு கூட்டிசை குழுமம், இந்தியாவின் கேரள மாநிலத்தில், கொல்லம் நகரில், வாழும் கலை அமைப்பால் சாதிக்கப்பட்டது. 444 இசைக்கலைஞர்களும் C-வடிவ, நீண்ட இந்திய இசைக் கொம்பு என்றழைக்கப்படும் கொம்பு அல்லது சிருங்கம் என்பதை வாசித்தார்கள். இந்நிகழ்ச்சி 25 நிமிடங்கள் நீடித்தது.

2. 13 நவம்பர் 2012 – அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக மெழுகுவர்த்திகள்

ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 12,135 மெழுகுவர்த்திகளை தீபாவளி அன்று ஏற்றி இந்தியாவில், அகமதாபாதின் வாழும் கலை அமைப்பு சாதனை படைத்தது.

3. 16 மே 2012 – பல்கேரியாவின் பேக்பைப்புகள்

333 கலைஞர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்வு ஏற்பாட்டின் மூலம் மிகப் பெரிய பேக்பைப் கூட்டிசை, பல்கேரியாவின் சோஃபியா நகரின் நேஷனல் பேலஸ் ஆஃப் கல்சரில் வாழும் கலை அமைப்பினால் சாதிக்கப்பட்டது.

4. 17 ஜனவரி 2012 – தாள் நினாத்

1230 தபலா மற்றும் ட்ரம் கலைஞர்கள் பங்கேற்ற மிகப் பெரிய ஹேண்ட் ட்ரம் கூட்டிசை, இந்தியாவின் ஷோலாபுர் நகரத்தில் ஹம்பர்வாடி எஸ்டேட்டில் வாழும் கலை அமைப்பினால் சாதிக்கப்பட்டது.

5. 21 பிப்ரவரி 2011 – அபங்க் நாத்

1,356 கலைஞர்கள் பங்கு பெற்ற ஒரு நிகழ்வு ஏற்பாட்டின் மூலம் மிகப் பெரிய டோல் கூட்டிசை, இந்தியாவின் கோலாபூர் நகரத்தில் சிவாஜி பல்கலைகழக மைதானத்தில் வாழும் கலை அமைப்பினால் சாதிக்கப்பட்டது. (நேரம்: சுமார் 23 நிமிடங்கள்)

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.

மேலும் அறிக

6. 12 பிப்ரவரி 2011 – நாட்டிய விஸ்மயம்

150 கலைஞர்கள் பங்கு பெற்ற ஒரு நிகழ்வு ஏற்பாட்டின் மூலம் மிகப் பெரிய கதகளி நிகழ்ச்சி, இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புதரிக்கண்டம் மைதானத்தில் வாழும் கலை அமைப்பினால் சாதிக்கப்பட்டது. (நேரம்: தலா 20 நிமிடங்கள் நீடித்த 2 நிகழ்ச்சிகள்)

7. 30 ஜனவரி 2011 – நாத வைபவம்

121,440 கலைஞர்கள் பங்கு பெற்ற மிகப் பெரிய பாடகர் குழு நிகழ்ச்சி இந்தியாவில், சென்னை நகரத்தில் பெருங்களத்தூரில் வாழும் கலை அமைப்பினால் நடத்தப்பட்டது.

8. 11 நவம்பர் 2010 – மெஹ்ரான் தே ரங்

2,100 நடன கலைஞர்களை உள்ளடக்கிய மிகப் பெரிய பாங்க்ரா நடன நிகழ்ச்சி இந்தியாவின் லூதியானா நகரத்தின் பஞ்சாப் வேளாண்மை பல்கலைகழக மைதானத்தில் வாழும் கலை அமைப்பினால் சாதிக்கப்பட்டது. (நேரம்: சுமார் 15 நிமிடங்கள்)

9. 2 நவம்பர் 2010 – அன்னம் பிரம்மா

5612 வெவ்வேறு உணவு வகைகளைக் கொண்ட மிகப் பெரிய சைவ உணவு விழா ஒரு நிகழ்வு ஏற்பாட்டின் மூலம் இந்தியாவின் அகமதாபாதில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ தாமில் வாழும் கலை அமைப்பினால் நடத்தப்பட்டது.

10. 12 ஜனவரி 2010 – அந்தர்நாத்

1,04,637 பாடல் கலைஞர்கள் இணைந்து ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடிய மிகப்பெரிய சேர்ந்திசை சாதனை நிகழ்வு இந்தியாவின் புனே நகரத்தின் அந்தர்நாத்-ல் வாழும் கலை அமைப்பினால் நடத்தப்பட்டது. (நேரம்: 5 நிமிடங்களுக்கு மேல்)

11. 21 நவம்பர் 2008 – பிரம்ம நாத்

1,094 கலைஞர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்வு ஏற்பாட்டின் மூலம் மிகப் பெரிய சிதார் கூட்டிசை இந்தியாவின், தில்லி நகரத்தில் நொய்டாவில் வாழும் கலை அமைப்பினால் நடத்தப்பட்டது. (நேரம்: 3 சிம்ஃபொனிக்கள், ஒவ்வொன்றும் சுமார் 7 நிமிடங்கள்)

12. 28 நவம்பர் 2006 – மோகினியாட்டம்

வாழும் கலை அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான மோகினியாட்டத்தில், அதிகபட்சமாக 1200 கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்வு இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சியின் ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில், நடத்தப்பட்டது. (நேரம்: சுமார் 12 நிமிடங்கள்)

மிகப் பிரபலமான நிகழ்வுகள்

உலக கலாச்சார விழா 2016

மீள்பார்வை…உலக கலாச்சார விழா

வாழும் கலை அமைப்பு தனது 35வது ஆண்டு விழாவை மார்ச் 2016ல் கொண்டாடியது. வாருங்கள், அற்புதமான நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து, நமது உலகளாவிய பன்முகத்தன்மையின் அழகில் மூழ்குங்கள்.

உலக கலாச்சார விழா

வேற்றுமையில் நல்லிணக்கத்தைக் கொண்டாடுதல்

உலகெங்கிலும் 151 நாடுகளில், 55 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட, இலாப நோக்கமற்ற வாழும் கலை அமைப்பின் திட்டங்களால் பயனடைந்துள்ளதை குறிக்கும் வகையில் இவ்விழா வாழும் கலை அமைப்பின் 30வது ஆண்டு நிறைவு விழாவாக நடைபெறும்.

வெள்ளி விழா கொண்டாட்டம்

உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டம்

150+ நாடுகளிலிருந்து, 3 மில்லியன் மக்களை ஒன்றுதிரட்டி, உலகளாவிய அமைதி, அகிம்சை மற்றும் எல்லைகளுக்கு அப்பாலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக, பெங்களூரில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வரலாற்றுச் சிறப்பு மிக்க தியான நிகழ்வினை வழிநடத்தினார்.

சர்வதேச மகளிர் மாநாடு

மனம் மற்றும் உள்ளுணர்வின் ரகசியங்கள்

சர்வதேச மகளிர் மாநாடு, உலகளாவிய மகளிர் தலைவர்களை ஒன்றிணைத்து, உரையாடல் மற்றும் பயிற்சிப் பட்டறைகளின் வாயிலாக அதிகாரமளித்தல், தலைமைத்துவம் மற்றும் அமைதியையும் ஊக்குவிக்கிறது.

வணிகத்தில் நெறிமுறைகளுக்கான உலக மன்றம்

சர்வதேச தலைமைத்துவ கருத்தரங்கு

வணிகத்தில் நெறிமுறைகளுக்கான உலக மன்றம் நெறிசார்ந்த தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத்தை வளர்த்து, மதிப்புகள் சார்ந்த வணிக நடைமுறை பயிற்சிகளை மேம்படுத்தும் வகையில், உரையாடல், தள கருத்தரங்குகள் மற்றும் கூட்டமைப்பிற்கான உலகளாவிய மேடைகளை அமைக்கிறது.

உலகளாவிய தலைமைத்துவ மன்றம் 2023

மனிதநேய வருங்காலத்தை வடிவமைத்தல்

உலகளாவிய தலைமைத்துவ மன்றம் (GLF), வணிகம், அரசு மற்றும் சர்வதேச நிறுவனங்களிலிருந்து 1000க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களை ஒன்றிணைத்து, யோசனைகள் மற்றும் தீர்வுகளை பரிமாறிக் கொள்ளவும், நமது காலத்தின் முக்கிய நிறுவன மற்றும் சமூக சவால்களை கையாளவும் கூட்டணிகளை கட்டமைக்கிறது.

தியானம்: ஒரு உலகப் புரட்சி

உலகம் குருதேவுடன் தியானம் மேற்கொள்கிறது

2024ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 21ம் நாளினை உலக தியான தினமாக அறிவித்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்காக, குருதேவ் 21 டிசம்பர் 2024 அன்று, உலகமுழுதும் மில்லியன் கணக்கான மக்களை தியானத்தில் வழிநடத்தினார்.