sri sri sanskar kendra

ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திரா

ஸ்ரீ ஸ்ரீ விழுமியங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் என்று (SSCVC)

“ஒரு செடி முழுமையாக வளர நீர் தேவைப்படுவது போல, சிறு குழந்தைகள் மனித மாண்புகளை வளர்த்துக் கொள்ள ‘சன்ஸ்காரங்கள்’ தேவை.”

~ குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திராவை பற்றி

கருணை, இரக்கம், மன்னிக்கும் தன்மை, தாராள மனப்பான்மை, மரியாதை, நேர்மை, ஒழுக்கம், திருப்தி ஆகிய நற்பண்புகள் ஒவ்வொரு சமூகத்திலும் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. ஆனால், சிறு குடும்ப அமைப்பு, ஊடகங்களின் தாக்கம், நேரமின்மை மற்றும் அவசரமான வாழ்க்கை முறை ஆகியவை, நம் செழுமையான பாரம்பரியத்திலிருந்து குழந்தைகளை விலக்கி, மனித மாண்புகளை வளர்ப்பதில் இடைவெளியை ஏற்படுத்துகின்றன.

ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திராக்களில், குழந்தைகள் அடிப்படை மனித மாண்புகளை உள்வாங்கி, சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்ளவும், நமது வளமான கலாச்சாரம் மற்றும் அதன் பன்முகத்தன்மையை போற்றவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திராவில் கதைகள், ஸ்லோகங்கள், மந்திர உச்சாடனம், அற்புதங்கள், விளையாட்டுகள், யோகா மற்றும் பல்வேறு செயல்பாடுகள் இந்த மகிழ்ச்சியான, உற்சாகமான மற்றும் அன்பான அமர்வுகளின் மையமாக உள்ளன. இந்தப் பயிற்சிகள் பள்ளிக் கல்வியை மேலும் மேம்படுத்தி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை கட்டியெழுப்புகின்றன.

சர்வதேச அளவில், இவை ஸ்ரீ ஸ்ரீ விழுமியங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் என்று அழைக்கப்படுகின்றன (SSCVC).

YouTube Thumbnail

இந்த நிகழ்வின் மூலம் குழந்தைகள் பெறுவது என்ன

icon

மனித மாண்புகளை உள்வாங்குதல்

உங்கள் குழந்தைகள் அக்கறை, மரியாதை, பொறுப்பு, நேர்மை, தாராள மனப்பான்மை போன்ற அடிப்படை மனிதப் பண்புகளுடன் மலர்வதை காணலாம்.

icon

வலுவான அடித்தளம்

இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு ஒரு உறுதியான அடித்தளம் உருவாக்கப்படுகிறது. அது அவர்களின் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தவும், மகிழ்ச்சியுடன் பொறுப்புகளை ஏற்கவும், போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும் உதவுகிறது.

icon

பாரம்பரியங்களை மதிக்கும் மனப்பான்மை

குழந்தைகள் அறிவியல் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டு, தங்களின் பழமையான பாரம்பரியத்தை புரிந்துகொண்டு, வாழ்க்கையை ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் காண்கிறார்கள்.

icon

கொண்டாட்டமும் , ஞானமும்

குடும்ப உறவுகள் வலுப்பெறுகின்றன. ஒன்று சேர்ந்து கொண்டாடுவதன் மூலம், குழந்தைகள் அதிக விழிப்புணர்வு பெறுவதோடு சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுடன் ஒரு வலுவான பிணைப்புணர்வைப் பெறுகிறார்கள்.

icon

நினைவாற்றலும் கவனமும்

ஒரு ஆய்வின் படி, 2 ஆண்டுகள் மந்திரங்களை உச்சரிக்கும் பயிற்சியை மேற்கொண்டவர்கள், நினைவாற்றல் சோதனைகளில் சிறப்பாக செயல்பட்டனர், பிழைகள் குறைந்தன, மேலும் சோதனைகளை விரைவாக முடித்தனர். மேலும் தகவல்களுக்கு அந்த ஆய்வு கட்டுரையை பார்க்கலாம்

icon

மந்திரங்களை உச்சாடனம் செய்வதின் நன்மைகள்

‘ஓம்’ (OM) மந்திரத்தை உச்சரிப்பது வேகஸ் நரம்பை தூண்டுகிறது, மேலும் இது மனச்சோர்வு மற்றும் வலிப்பு நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆய்வுக் கட்டுரையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அடிப்படைப் பயிற்சிகள்

(6-10 வயது)

  • இணையவழி தொகுதி M1-A
    • 8 அமர்வுகள், ஒவ்வொன்றும், 1 மணி நேரம்
  • இணையவழி தொகுதி M1-B
    • 8 அமர்வுகள், ஒவ்வொன்றும் 1 மணி நேரம்
  • நேரடி (In-person) தொகுதி M1
    • 12 அமர்வுகள், ஒவ்வொன்றும் 2 மணி நேரம்

ராமாயண நிகழ்ச்சிகள்

(6-13 வயது)

  • இணையவழி பகுதி A
    • 8 அமர்வுகள், ஒவ்வொன்றும் 1 மணி நேரம்
  • இணையவழி பகுதி B
    • 8 அமர்வுகள், ஒவ்வொன்றும் 1 மணி நேரம்
  • நேரடி அமர்வுகள்
    • 10 அமர்வுகள், ஒவ்வொன்றும் 2 மணி நேரம்

நிறுவனர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமூகத்திற்கான, முன்னெப்போதும் இல்லாத, உலகளாவிய இயக்கத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.

மேலும் அறிக

நான் ஆர்வமாக இருக்கிறேன், ஆனால் சில கேள்விகள் உள்ளன…

அடிப்படை பயிற்சிகள் எவ்வாறு ராமாயணம் பயிற்சியிலிருந்து வேறுபடுகின்றன?

ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திரா அன்பான, தொடர்பு கொள்ளக்கூடிய மற்றும் கொண்டாட்டமான சூழலில் இரண்டு முழுமையான, ஆனால் வேறுபட்ட தொகுதிகளை வழங்குகிறது. ராமாயணம் பயிற்சி, ராமாயணம் என்ற மகாகாப்பியத்தை அடிப்படையாகக் கொண்டவை. இது குழந்தைகளுக்கான நேர்த்தியாக பேணப்படும் பண்புக்கூறுகளின் பொக்கிஷமாகும். இவை சுவாரஸ்யமான அமர்வுகளாக இருப்பதால், குழந்தைகள் தன்னம்பிக்கை பெறுகின்றனர் மற்றும் பக்தி உணர்வை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த திட்டம் இணையவழி மற்றும் நேரடி முறைகளில் ஒருங்கிணைந்ததாக கிடைக்கிறது (ராமாயணம் தொகுதி ( A மற்றும் ராமாயணம் தொகுதி B). வயது: 6 முதல் 13 வரை அடிப்படைப் பயிற்சியின் தொகுதிகள் [M1 (நேரடி), M1-A மற்றும் M1-B (இணையவழி )] இந்த பாடப்பிரிவுகள் குழந்தைகளில் நன்னெறிகளையும், ஞானத்தையும் விதைத்து, வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன. ஒவ்வொரு அமர்வும் ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் அர்த்தமுள்ள ஸ்லோகங்கள் / தோஹாக்கள் மூலம் அடிப்படை மனித மாண்புகளை மையமாகக் கொண்டுள்ளது. வயது: 6 முதல் 13 வரை

இப்போது ஏராளமான இணையவழி வகுப்புகள் உள்ளன. இது கூடுதல் சுமையாக இருக்குமா?

இந்த அமர்வுகள் வழக்கமான இணையவழி வகுப்புகளிலிருந்து ஒரு ஆரோக்கியமான மாற்றாக அமைகின்றன. பெரும்பாலான பெற்றோர் கூறுவதாவது, அவர்களின் குழந்தைகள் இந்த அமர்வுகளுக்கு வருவதற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

என் குழந்தை அடிப்படைப் பயிற்சியின் இரண்டு இணையவழி பாடப்பிரிவிலும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமா?

இரண்டு இணையவழி தொகுதி (M1-A மற்றும் M1-B) ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக இருப்பினும், ஒவ்வொன்றிலும் வேறுபட்ட நேர்த்தியாக பேணப்படும் பண்புக்கூறுகள் கற்பிக்கப்படுகின்றன. இதுவே அதன் தனித்துவம். ஒவ்வொரு தொகுதியிலும் தனித்தனி ஸ்லோகங்கள், மந்திரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன. இந்த திட்டங்களை எந்த வரிசையிலும் கலந்துகொள்ளலாம்.

அடிப்படைப் பயிற்சிகளில் எதைத் தேர்வு செய்யலாம் – நேரடி வகுப்பா அல்லது இணையவழியா ?

6 முதல் 10 வயது குழந்தைகளுக்காக, இணையவழி மற்றும் நேரடி தொகுதிகளின் முக்கிய உள்ளடக்கம் ஒரே மாதிரியாகவே உள்ளன. இந்த அமர்வுகளில் ஊக்கமளிக்கும் கதைகள், ஸ்லோகங்கள், மந்திரங்கள், தோஹாக்கள், பாட்டி வைத்தியங்கள், நமது கலாச்சாரத்தின் சிறப்புகள், மந்திர உச்சாடனம், யோகா, விளையாட்டுகள், செயல்பாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவை அன்பும் தொடர்பும் நிறைந்த சூழலில் கற்பிக்கப்படுகின்றன. இணையவழி முறையில் M1-A மற்றும் M1-B தொகுதிகளும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. ஒவ்வொரு தொகுதியும் 8 அமர்வுகள் கொண்டது; ஒவ்வொரு அமர்வும் 1 மணி நேரம். நேரடி முறை: M1 தொகுதிகள் 12 அமர்வுகளில் கற்பிக்கப்படுகின்றன; ஒவ்வொரு அமர்வும் 2 மணி நேரம். எதைத் தேர்வு செய்வது? இணையவழி மற்றும் நேரடி முறை: இரண்டிற்கும் தங்களுக்கான தனித்தன்மைகள் உள்ளன. உங்கள் குழந்தையின் நேர வசதி மற்றும் உங்களுடைய சௌகர்யத்திற்கேற்ப தேர்வு செய்யலாம்.

நாங்கள் ஏற்கனவே ஸ்லோகங்களையும் கதைகளையும் கற்பிக்கிறோம். இந்த திட்டங்கள் குழந்தைக்கு எப்படி பயன் தரும்?

ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திரா தொகுதிகள் முழுமையான திட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்லோகங்கள் மற்றும் கதைகள் மட்டுமின்றி, ‘பாட்டியின் கைவைத்திய குறிப்புகள் , யோகாசனங்கள், நமது செழுமையான பாரம்பரியத்தின் அற்புதங்கள், மந்திர உச்சாடனம் போன்ற பல அம்சங்களும் இதில் அடங்கியுள்ளன. மேலும், குழு தொடர்புகள் மூலம் குழந்தைகள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதோடு, சேர்ந்து இருப்பது, கருணை, மரியாதை, பகிர்தல், நேர்மை போன்ற பண்புகளின் ஆழ்ந்த தாக்கத்தை உணர்கிறார்கள்.

என் குழந்தை ராமாயணம் நிகழ்ச்சியின் இரண்டு இணையவழி தொகுதிகளிலும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமா?

ராமாயணம் தொகுதியின் இரண்டு பகுதிகள் (பகுதி A மற்றும் பகுதி B) சேர்ந்து முழு கதையையும் உள்ளடக்குகின்றன. பகுதி A ல் ஸ்ரீ ராமச்சரிதமானஸ் நூலின் முதல் சில காண்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. மீதமுள்ள காண்டங்கள் பகுதி B ல் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொடர்பு கொண்ட அமர்விலும், ஆழமான கேட்கும் அனுபவத்துடன், சௌபாய்கள் / தோஹாக்கள், சிறப்பு வீடியோக்களுடன் கற்றல், விசேஷ ஞானம், விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகள், யோகாசனம் மற்றும் தியானம், கொண்டாட்டங்களுடன் ராம கதை உள்ளடக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வரிசைக் கிரமத்தில் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும். கதையின் ஓட்டத்திற்கேற்ப பகுதி A-க்கு பிறகு பகுதி B தொடர்கிறது.

என் குழந்தைக்கு ராமாயணக் கதை ஏற்கனவே தெரியும். அப்படியிருக்க, இந்த திட்டம் எப்படி கூடுதல் பயன் தரும்?

ஸ்ரீ ஸ்ரீ சன்ஸ்கார் கேந்திரா வழங்கும் ராமாயண திட்டம், கதை சொல்லுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதில்லை. அந்தக் கதையில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் காட்டும் நேர்த்தியான பேணப்படும் பண்புக்கூறுகளை குழந்தைகள் வாழ்க்கையில் பின்பற்ற ஊக்குவிப்பதே முக்கிய நோக்கம். மேலும், ஸ்ரீ ராமச்சரிதமானஸ் நூலிலிருந்து சௌபாய்கள் மற்றும் தோஹாக்கள் சிறப்பு வீடியோக்களுடன் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இதனால் நமது செழுமையான கலாச்சாரம் மற்றும் பண்டைய நூல்களின் மீது ஆர்வத்தையும், மதிப்பையும் உருவாகிறது. ஒவ்வொரு அமர்விலும்; தியானம், யோகாசனங்கள், விளையாட்டுகள், செயல்பாடுகள் ஆகியவையும் உள்ளன. குழுவாகக் கற்றுக்கொள்வதால், கற்றல் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மாறி, குழந்தைகளின் மனதில் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.