சிவன் என்பவர் யார்?

சிவபெருமான் என்பவர் எங்கோ ஒரு இடத்தில் அமர்ந்திருப்பவரா?

சிவம் என்பது என்ன?

அவர் ஒரு உருவம் மட்டும்தானா?

பல நூற்றாண்டுகளாக, வரலாற்றாசிரியர்களும் பக்தர்களும் சிவபெருமானின் திருவுருவத்தை ஒரு தெய்வீகக் கற்பனையுடன் சித்தரித்து வருகின்றனர். சாம்பல் பூசிய திருமேனி, புலித்தோல் ஆடை, பிறைச்சந்திரன், கழுத்தில் பாம்பு, நெற்றிக்கண், சடைமுடி, சடையிலிருந்து பாயும் கங்கை நதி, ஒரு கையில் திரிசூலம், மறுகையில் உடுக்கை, சில சமயங்களில் பிரபஞ்ச நடனத்தில் மூழ்கியிருப்பவர், சில சமயங்களில் பாறை போல அசைவற்று அமர்ந்திருப்பவர். இவற்றுடன், சிவபெருமானின் பண்புகளை விவரிக்க 1008 திருநாமங்களும் உள்ளன.

உண்மையாக சிவபெருமானை அறிவதற்கு, நாமம், ரூபம், காலம் ஆகியவற்றால் கட்டுப்படுத்த முடியாதவர் அவர் என்பதை அறிந்துகொள்வது அவசியம். மிக முக்கியமாக, சிவன் என்பவர் ஏதோ ஒரு இடத்திலோ வானத்திலோ அம்ர்ந்திருப்பவர் இல்லை.

who is shiva?

சிவ என்பதன் பொருள் என்ன?

சிவ என்பது ச+ஈ+வ ஆகும்.

ச என்பது சரீரத்தை அல்லது உடலைக் குறிக்கிறது.

ஈ என்பது ஈஸ்வரி அல்லது உயிர்சக்தியைக் குறிக்கிறது.

வ என்பது வாயு அல்லது அசைவைக் குறிக்கிறது.

ஆகவே, சிவ எனபது உயிர்சக்தியும் அசைவும் கூடிய உடலைக் குறிக்கிறது.

சிவத்திலிருந்து ‘ஈ’ யை அகற்றி விட்டால்,   அது ச+வ=சவம் ஆகிவிடுகிறது.

சவம் என்பது உயிரற்ற உடல். சிவம் உயிர்சக்தியை கொண்டது, ஆனால் சவமோ உயிரற்றது.

சிவன் என்பவரே வாழ்க்கை, சிவன் என்பவரே வாழ்விற்கான ஆற்றல், சிவன் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர் – அவரே பிரபஞ்ச ஆன்மா அல்லது பேரறிவு என்ற ஆழமான புரிதலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த சிவ தத்துவத்தை உணர்வது ஆனந்தம் அல்லது பேரின்பத்திற்கு வழிவகுக்கிறது.

சிவத்தின் இயல்பு எத்தகையது?

சிவம் என்னும் கருத்துரு உன்னதமானது. இந்த உன்னதத்தை நம் முன்னோர்கள் மூன்று வகையாக சிறப்பாக பகுத்துள்ளார்கள்:

அரூபம்: உருவிலி
ரூப-அரூபம்: உருவமில்லா உருவம்
சாரூபம்: உருவம் கொண்டது

அரூப நிலை என்பது உருவமோ, வடிவமோ, நிறமோ இல்லாதது. அதாவது வெளியோ, காலமோ, பருப்பொருளோ இல்லாத நிலை என்பதால் அரூப நிலையை வருணிக்க அவற்றைப் பயன்படுத்த முடியாது. இப்பிரபஞ்சமே படைக்கப்படாத போதுதான் அப்படி ஒரு நிலை சாத்தியம்.

சிவத்தின் அரூப நிலை வெளிப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. கீழ்காணும் 6 பிறழ்வுகள் அதை பாதிப்பதில்லை:

ஆதி–அந்தம்: தொடக்கம்–முடிவு
சங்கோசம்–விஸ்தாரம்: சுருங்குதல்–விரிதல்
ப்ரஸரணம்– அபிஸரணம்: பரவுதல்–குவிதல்

வெளிப்படுத்தப்பட்ட சிருஷ்டிக்கு உரியவை இப்பண்புகள். ஆகவே, அரூப நிலை என்பது சிவத்தை சுத்த சைதன்யமாக, தூய விழிப்புணர்வாக, ஓர் அசைவற்ற இருப்பாக குறிக்கிறது. இதுவே அனைத்து படைப்பிற்கும் மூலம், அனைத்து தெய்வங்களும் இதிலிருந்து தான் பிறக்கிறார்கள். ஆகவே இந்நிலையை மகாதேவர் என்று அழைக்கிறோம்–அதாவது அனைத்து தெய்வங்களுக்கும் பிறப்பிடம்.

ரூப–அருப நிலை என்பது அரூபம் ரூபத்தின் வழியாக வெளிப்படுதல் அல்லது அரூபத்திலிருந்து ரூபம் தோன்றுதல். இது சூட்மத்திற்கும்     ஸ்தூலத்திற்கும் இடைப்பட்ட நிலை.

சாரூப நிலை என்பது சிவம் தன்னை பல உருவங்களில் வெளிப்படுத்துதல். சா என்றால் உடன் அல்லது கூடிய என்று பொருள். ஆகவே, சாரூபம் என்றால் உருவத்துடன் கூடிய அல்லது வெளிப்பட்ட நிலை என்று பொருள்.

Lord Shiva

சிவத்தை எப்படி அறிந்து கொள்ளலாம்?

இந்தியாவில் சிவபெருமானை குறித்த விரிவாகப் பேசப்படும் ஒரு இடமாக காஷ்மீரம் விளங்குகின்றது. காஷ்மீர சைவச் சிந்தனை மிக முதிர்ந்த சிந்தனையாக இன்றளவும் கூடக் கருதப்படுகிறது. அது த்ரிகா என்று அழைக்கப்படுகிறது. சிவத்தை மூன்று நிலைகளில் அறிந்துகொள்வதினால், அது த்ரிகா என்று அழைக்கப்படுகிறது. சிவத்தை அறிந்து கொள்ள நான்கு உபாயங்கள் அல்லது வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:

ஆணவோபாயம்: அகங்காரத்தை விடுத்து சிவனை அடையும் பாதை
சாக்தோபாயம்: மௌனத்தில் கவனத்தை குவிப்பதன் மூலம் சிவனை அடையும் பாதை
சாம்பவோபாயம்: சிவத்தை பற்றி அல்லாத மற்ற எண்ணங்களிலிருந்து விடுபட்டு சிவனை அடையும் பாதை
அனுபாயம்: தியானத்தின் வழியாக சிவனை அடையும் பாதை.

எனவே, சிவம் என்பது சூட்மத்திலிருந்து ஸ்தூலத்திற்கும் மீண்டும் சூட்மத்திற்குமான ஒரு சங்கிலித் தொடரைக் குறிக்கிறது. ஆகவே, சிவத்தை அறிவதற்கு தியானமும், நுண்ணுணர்வும் அவசியமாகிறது.

கீழ்காணும் விளக்கத்தில் இது வலியுறுத்தப்படுகிறது:

“शिवम् शांतम् अद्वैतम् चतुर्थम्

मन्यंते सा आत्मा सा विघ्नेहा”

”சிவம் சாந்தம் அத்வைதம் சதுர்த்தம்

மன்யந்தே ஸ ஆத்மா ஸ விஞ்யேய”

(எது விழிப்பு, கனவு, உறக்கம் என்னும் மூன்று நிலைகளுக்கு அப்பாற்பட்டதோ, எது அவ்வற்றிலெல்லாம் ஊடுருவி இருக்கிறதோ அதுவே சிவம், அதுவே அறியத்தக்கது.)

எனினும், இந்நிலை நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாலும், நம்மால் உணரக்கூடிய உருவமற்றிருப்பதாலும், இதை உருவிலி என்கிறோம். இது அரூபம் என்றும் துரிய நிலை அல்லது நான்காம் நிலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், உடல் முழு ஓய்வில் இருக்கிறது, மனம் உச்சகட்ட விழிப்புணர்வில் இருக்கிறது.

சிவத்தில்தான் அனைத்தும் பிறக்கின்றன, அனைத்தும் நிலைநிறுத்தப்படுகின்றன, அனைத்தும் ஒடுங்குகின்றன. இதுதான் சிவம் அல்லது சிவ தத்துவம். நாம் சிவத்திலிருந்து அகலவே முடியாது. ஏனென்றால், இந்த படைப்பு முழுவதுமே சிவத்தால் நிரம்பியுள்ளது.  நம் மனம், உடல், அனைத்தும் சிவத்தினால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான், சிவன் ‘விசுவரூபன்’ எனப்படுகிறார். அதாவது, இப்பிரபஞ்சமே அவருடைய உருவம் தான்.

சிவன் எப்படி நித்தியமானவர்?

சிவபெருமானைப் பற்றி அழகான கதை ஒன்று உள்ளது. ஒரு முறை, பிரம்மாவும் (படைப்புக் கடவுள்) விஷ்ணுவும் (காக்கும் கடவுள்) ‘சிவன் என்பவர் யார்?’ என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்க விழைந்தனர். அவரை முழுவதுமாக புரிந்து கொள்ள விரும்பினர். ஆகவே, பிரம்மா சொன்னார், “நான் அவருடைய முடியை கண்டுபிடிக்கிறேன், நீங்கள் அவருடைய அடியைக் கண்டுப்பிடியுங்கள்.” ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு, விஷ்ணு கீழ்நோக்கி சென்று கொண்டேயிருந்தார், ஆனால் சிவனின் அடியைக் காண முடியவில்லை. பிரம்மா முடியை தேடி மேலே மேலே சென்றார் ஆனால் அவராலும் முடியைக் காணமுடியவில்லை.

இதன் பொருள் என்னவென்றால், சிவன் அடியும் முடியும் இல்லாதவர். தொடக்கத்திற்கும் முடிவிற்கும் அப்பாற்பட்டவர். இறுதியில், இருவரும் மத்தியில் சந்தித்துக் கொண்டு சிவனை அறியமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டனர். சிவலிங்கம் இதைத்தான் குறிக்கிறது. அது எல்லையற்ற  சிவனை குறிக்கும் ஒரு சின்னம் ஆகும்.

எத்தனைப் பெரியவர் சிவன்?

சிவன் ஒரு மனிதர் அல்ல என்றாலும், சிவ உணர்வு எவ்வளவு பெரியது எனப் பார்த்தால், அதை இப்படிச் சொல்லலாம்:

பிரம்மாண்ட வ்யாப்த தேஹ

சிவனின் உடல் அண்டசராசரங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த பிரபஞ்சம் முழுதுமே அவருடைய உடல்தான். விண்மீன்களும், கோளங்களும் அவருடைய சடைமுடி, ஆயிரமாயிரம் சூரியன் சேர்ந்ததே அவர் கண்கள், நீர் அவருடைய வயிறு, பாம்புதான் அவருடைய மனம். மனம், கிரகங்கள் மற்றும் உணவைக்கூட ஒன்றொடொன்று இணைக்கும் பல மில்லியன் அதிர்வலைகளால் நிரம்பியது இவ்வுலகம். அனைத்தும் ஒன்றோடொன்று ஊடாடுகின்றன.

ருத்ராஷ்டகம் இவ்வாறு சொல்கிறது:

நமாமி ஈஷம் ஈஷான ரூபம், விபும் வ்யாபகம் ப்ரம்மவேத ஸ்வரூபம்

நிஜம் நிர்குணம் நிர்விகல்பம் நிரீஹம், சிதாகாசம் ஆகாசவாசம் பஜேகம்.

பொருள்: அது இறைவனாகும். மிகுந்த வலிமை பொருந்தியது. எங்கும் பரவியுள்ளது. அது இல்லாத இடமே இல்லை. அது ஆகாசம், அனைத்து அறிதலும் நிலைகொண்டிருக்கும் விழிப்புணர்வு. அதற்கு பிறப்பு இல்லை, பண்புகள் இல்லை. ஒன்றுமற்ற சமாதி நிலை அது. உள் உறையும் சித் என்னும் விழிப்புணர்வின் வெளி அது. அதுவே சிவம்.

படைக்கப்பட்ட அனைத்துமே சிவன்தான்

कोणतीही निर्मिती हे सकारात्मक आणि नकारात्मक अशा विपरीत मूल्यांचे मिश्रण असते. या विश्वात अग्नी आणि पाणी, चांगुलपणा आणि वाईटपणा अशी अनेक उदाहरणे आहेत. शिव या सर्व विरोधी मूल्यांमध्ये उपस्थित आहे. म्हणूनच शिवाला रुद्र (उग्र) म्हणतात आणि त्याच वेळी, त्याला भोलेनाथ (सर्वात निष्पाप) म्हणतात. त्याला सुंदरेश (सुंदर) आणि अघोर (भयानक) असेही म्हणतात. प्रसिद्ध शिव प्रार्थनेत शिवाचे वर्णन गौरम (अग्निमय) असे आहे आणि त्याच वाक्यात पुढे त्याला करुणावतारम् (करुणेचे अवतार) असे म्हटले आहे.

மகாசிவராத்திரி என்றால் என்ன?

மேலே கூறினார்போல் சிவன் என்பது தியானத்தினால் மட்டுமே அடையக்கூடிய நான்காவது நிலையாகும். நம் இருப்புக்குள்  ஆழ்ந்து சென்று, அசைவற்ற, நிலைத்தத்தன்மையை அடையும், சமாதி நிலையை அனுபவிக்கும் சாத்தியக்கூறு, சிவனுடைய இரவான மகாசிவராத்திரி அன்று உச்சத்தில் இருக்கிறது.

மாதாமாதம் கிருஷ்ண பட்ச சதுர்தசி, அதாவது அமாவாசைக்கு முந்தைய இரவு, அன்று வரும் சிவராத்திரி அவ்வளவாக அறியப்படாதது.

இந்திய நாட்காட்டிப் படி, வருடத்தின் இறுதி மாதத்திற்கு முந்தைய மாதமான மாசி மாதம், கிருஷ்ண பட்ச சதுர்தசி அன்று இரவு மகாசிவராத்திரி, அதாவது சிவனின் மகா இரவு, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அன்றைய இரவில் நம்முள் உறையும் சிவ தத்துவத்தை நாம் கொண்டாடுகிறோம். இராத்திரி என்றால் இரவு – ஓய்வுக்கான நேரம். சிவராத்திரி என்பது சிவதத்துவத்தில் ஓய்வெடுப்பதற்கான நேரம்.

எப்பொழுதும் நிலத்திலிருந்து சில அங்குலம் மேலெழும்பி இருக்கும் சிவ தத்துவம் அல்லது சிவனின் சக்தி, மகாசிவராத்திரி அன்று நிலத்தைத் தொடுகிறது. இந்த புனிதமான நேரம் தியானத்திற்கும், ஆழ்ந்த ஆன்மீக அனுபவங்களுக்கும் ஏற்ற காலமாகும். ஆன்மீக வளர்ச்சிக்கும் இவ்வுலக இலக்குகளை அடையவும் ஏற்ற நாளாக இது கருதப்படுகிறது.

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *