இராவணன் இயற்றிய சிவ தாண்டவ ஸ்தோத்திரம்

जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले

गलेऽवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाम्।

डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं

चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्॥

ஜடா கடாஹ ஸம்ப்4ரம ப்4ரமந்நிலிம்பநிர்ஜ2ரீ

விலோலவீசிவல்லரீ விராஜமான மூர்த4னி |

43த்343த்343ஜ்வலல்லலாடபட்டபாவகே

கிஷோரசந்த்ரஷேக2ரேரதி: பிரதிக்ஷணம்மம||

கங்கை பொங்கியோடும் அடர்ந்த சடை விரிய சுழன்றாடுபவர்,

அலைபாயும் கொடிபோன்ற சடைமுடியை உடையவர்,

தேஜோமயமான நெற்றியில் தகதகக்கும் அக்னியை உடையவர், 

பால சந்திரனை சிரசில் தரித்தவர் எவரோ, அவரிடம் ஒவ்வொரு கணமும் நான் காதல் கொண்டிருக்க வேண்டும்.

என்னவொரு ஆச்சரியமான முறையில் சிவபெருமான் வருணிக்கப் பட்டிருக்கிறார்! இப்படிபட்ட வர்ணனைகள் பெரும்பாலும் பக்தியில் திளைத்திருப்பவர்களாலேயே எழுதப்பட்டிருகின்றன. இந்த அழகிய சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை எழுதியது யார் என்று எப்பொழுதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? இதை எழுதியது இலங்கை அரசன் இராவணன்.

அவன் சிவபெருமானின் பெரும் பக்தனாவான். பல நூற்றாண்டுகளுக்கு முன் அவனால் எழுதப்பட்டது சிவ தாண்டவ ஸ்தோத்திரம். இராமனின் மனைவியான சீதையை இராவணன் அபகரித்து சென்ற இராமாயணக்  கதையை பலரும் அறிவார்கள். பலருக்கும் அவனுடைய ஆணவமும் அகம்பாவமும் நிறைந்த பக்கம் தான் தெரியும். ஆனால் சிவபெருமானிடம் அவன் கொண்டிருந்த அளப்பரிய பக்தியை சிலர் மட்டுமே அறிவார்கள். இப்போது நாம் இராவணன் என்னும் மகாபக்தன் மற்றும் கலைஞனை பற்றி ஆழ்ந்து அறியலாம்.

சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை இயற்றியது யார்?

இராவணனால் சிவபெருமானைக் குறித்து இயற்றிப் பாடப் பெற்றது சிவ தாண்டவ ஸ்தோத்திரம். எதிர்மறை சக்திகளை முறிக்கும் சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தை சிவ தாண்டவ ஸ்தோத்திரம் காட்சிப்படுத்துகிறது. 15 பாடல்களைக் கொண்ட இத்துதியில் ஒவ்வொரு பாடலும் சிவபெருமானின் வீரத்தையும், அவருடைய சாசுவதமான அழகையும் விரிவாக வருணிக்கிறது.

இராவணன் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை ஏன் இயற்றினான்?

ஒவ்வொரு தெய்வீக சக்திக்கும் இந்தியாவில் பல வடிவங்களும் பெயர்களும் உள்ளன. சிவபெருமானின் பல அம்சங்களில் மிகவும் பிரபலமானது போலேநாத் என அழைக்கப்படும் வடிவம்; இதன் பொருள் கள்ளமற்றவர் அல்லது சுலபமாக மகிழ்விக்கப் படுபவர் என்பதாகும்.

இதற்கான புராணக்கதை இதோ: அவரை துதிப்பவர்க்கும், பக்தியோடும், சிரத்தையோடும் தவம் புரிபவர்களுக்கும் சிவபெருமான் வரங்களை வாரி வழங்குவார். இதனை தமக்கு சாதகமாக அரக்கர்கள் பலரும் பயன்படுத்திக் கொண்டனர்; சிவபெருமானை மகிழ்வித்து வரங்களைப் பெறுவது சுலபம் என அவர்கள் அறிந்திருந்தனர்.

மிகச் சிறந்த வேதபண்டிதரும், நிர்வாகியும், வீரனும், சிவபெருமானின் பக்தனுமான இராவணன், அரக்கர்களில் அரக்கனாக அறியப்பட்டான். அவன் தன்னையும், தன் ஆற்றலையும் மிகவும் நேசித்தான்.

இராவணன் கைலாச மலையை பெயர்த்தெடுத்து, கையோடு சிவபெருமானையும் இலங்கைக்கு கொண்டுசெல்ல முயன்ற நாளிலிருந்து தொடங்குகிறது சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தின் கதை. அவனை தடுக்க, சிவபெருமான் தன் கால் கட்டைவிரலால் சற்றே அழுத்த, இராவணனின் கைவிரல்கள் மலையின் அடியில் நசுக்கப்பட்டன; இராவணன் வேதனையில் அலறினான். அத்தருணத்தில் சிவபெருமானின் கோபத்திலிருந்து தப்ப இராவணன் பாடிய துதியே பின்னர் சிவ தாண்டவ ஸ்தோத்திரம் என்ற பெயரில் பிரபலமடைந்தது.

கடவுளை மகிழ்விக்க சிறந்த வழி இசையே எனச் சொல்லப்படுகிறது. இராவணனுடைய இசையில் ஆழ்ந்த சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சியுற்றார். அவனுக்கு வரம் அளிக்க அவர் முன்வந்தபோது, இராவணன் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதத்தைப் பெற்று அழிக்கப்பட முடியாதவனாகினான்.

சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தின் நற்பயன்கள் யாவை?

சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தின் நற்பயன்கள் எண்ணற்றவை. சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை படிப்பதும், கேட்பதும் அபரிமிதமான சக்தி, பொலிவு மற்றும் மனவுறுதியை அளிக்கிறது. இந்த ஸ்தோத்திரத்தின் பாராயணம் எதிர்மறை சக்திகளை அழித்து சுற்றுச்சூழலைப் புனிதமாக்கும் என நம்பப்படுகிறது.

சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை நாம் எப்போது பாராயணம் செய்ய வேண்டும், அது நமக்கு எப்படி பயனளிக்கிறது?

சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை சொல்ல ஒரு குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் கிடையாது, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதை சொல்லலாம். எனினும், கீழ்கண்ட நேரங்களில் அதை சொல்வது விசேஷ நன்மைகளை அளிக்கிறது:

  1. கிரகண காலம்: கிரகண காலத்தில் ஓம் நம சிவாய என உச்சாடனம் செய்வதும், சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதும் கிரகங்களின் தீய பலன்களை தணிக்கும் என நம்பப்படுகிறது. கிரகண காலத்தில் உச்சாடனம் செய்வது, தியானம் செய்வது மற்றும் பிரார்தனை செய்வது மற்ற நேரங்களை விட நூறு மடங்கு அதிக பலனளிக்கக் கூடியது.
  2. விடியற்காலை மற்றும் அந்தி நேரம்: பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் எந்த செயலுக்கும் அதன் தாக்கம் பல மடங்கு அதிகமாகும். அச்செயலுக்கு செலவாகும் ஆற்றலைக் குறைத்து, பலனை இரட்டிப்பாக்குகிறது. அந்தி நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றப்பட்டு, பல இல்லங்களில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. சிலர் சத்சங்கங்களை நடத்தி நேர்மறையான அதிர்வுகளை உள்வாங்குகிறார்கள்.
  3. பிரதோஷ விரதம்: பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பௌர்ணமி அல்லது அமாவாசை முடிந்த பதிமூன்றாம் நாள், திரயோதசி திதி என்பது பிரதோஷ காலமாகும். திரயோதசி திதியில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது பாபங்களை போக்குகிறது என நம்பப் படுகிறது. பிரதோஷ காலம் என்பது இடத்திற்கு தகுந்தார்போல் மாறுவது என்பதை கவனத்தில் கொள்க.

சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை எப்படி கற்பது?

இந்த மந்திரத்தை சரியான முறையில்  உச்சாடனம் செய்வது மிகவும் முக்கியம். இதன் அர்த்தத்தையும் உச்சரிப்பையும் சரியாக புரிந்து கொள்ளாமல் பலர் அவசர கதியில் இன்றைக்கு இதை உச்சாடனம் செய்கிறார்கள்.

சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை கற்க முதலில் இதை 5-6 முறை கேட்டு உச்சரிப்பையும் பொருளையும் உள்வாங்க வேண்டும். பிறகு, பல முறை அதை கேட்டபடியே பாடிப் பழக வேண்டும். இதை ராகத்துடன் பாடுவதே சிறந்தது, ஏனெனில் அப்படி செய்வதால் இது விரைவாக நினைவில் பதிகிறது.

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் காணொலி

சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தின் வரிகள் சமஸ்கிருதத்திலும்,  தமிழிலும், பொருளுடன்.

जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले गलेऽवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाम्।

डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्॥१॥

ஜடாடவீ 3லஜ்ஜல ப்ரவாஹபாவிதஸ்த2லே

3லேவலம்ப்3 லம்பி3தாம் பு4ஜங்க3துங்க3மாலிகாம் 

3மட்33மட்33மட்33மந்நிநாத3வட்33மர்வயம்

சகாரசண்ட3தாண்ட3வம்தநோதுந: ஷிவ: ஷிவம்|| 1 ||

சிவபெருமானின் சடைமுடிகளிலிருந்து புனித நதியான கங்கை பெருகிப் பாய்ந்து, அவரது கழுத்தைப் புனிதப்படுத்துகிறது; அவரது கழுத்திலிருந்து ஒரு மாலை போல நாகம் தொங்குகிறது; அவரது டமருவிலிருந்து (தாள வாத்தியம்) டமாத்-டமாத்-டமாத் என முழங்கும் டமரூவின் நாதம் எங்கும் நிறைந்திருக்க,சிவன் தனது உணர்ச்சிமிக்க தாண்டவ நடனத்தை நிகழ்த்துகிறார்; சிவபெருமான் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

जटाकटाहसम्भ्रमभ्रमन्निलिम्पनिर्झरी विलोलवीचिवल्लरीविराजमानमूर्धनि।

धगद्धगद्धगज्जलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम॥२॥

ஜடா கடாஹ ஸம்ப்4ரம ப்4ரமந்நிலிம்பநிர்ஜ2ரீ

விலோலவீசிவல்லரீ விராஜமான மூர்த4னி |

43த்343த்343ஜ்வலல்லலாடபட்டபாவகே

கிஷோரசந்த்ரஷேக2ரேரதி: பிரதிக்ஷணம்மம|| 2 ||

கங்கை பொங்கியோடும் அடர்ந்த சடை விரிய சுழன்றாடுபவர், அலைபாயும் கொடிபோன்ற சடைமுடியை உடையவர், தேஜோமயமான நெற்றியில் தகதகக்கும் அக்னியை உடையவர், பால சந்திரனை சிரசில் தரித்தவர் எவரோ, அவரிடம்ஒவ்வொரு கணமும் நான் காதல் கொண்டிருக்க வேண்டும்.

धराधरेन्द्रनन्दिनीविलासबन्धुबन्धुर स्फुरद्दिगन्तसन्ततिप्रमोदमानमानसे।

कृपाकटाक्षधोरणीनिरुद्धदुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि॥३॥

4ராத4ரேந்த்3 நந்தி3னீ விலாஸப3ந்து43ந்து4

ஸ்பு2ரத்3தி33ந்த ஸந்ததி ப்ரமோத3மானமானஸே |

க்ருபாகடாக்ஷதோ4ரணீநிருத்34து3ர்த4ராபதி3

க்வசித்3தி33ம்ப3ரேமனோவினோத3மேதுவஸ்துநி|| 3 ||

பூமியைத் தாங்கும் மலையரசனின் மகளின்(பார்வதியின்) இனிய விளையாட்டுத் தோழன் எவரோ, எவர் மனத்தின் ஒரு துடிப்பில் இந்த பிரபஞ்சம் அடங்குகிறதோ, எவருடைய கிருபாகடாக்ஷதோரணத்தால் எல்லா துன்பங்களும் தீர்கின்றனவோ, திசைகளையே ஆடையாய் கொண்ட அவரிடம் என் மனம் சற்றே லயிக்கட்டும்.

जटाभुजङ्गपिङ्गलस्फुरत्फणामणिप्रभा कदम्बकुङ्कुमद्रवप्रलिप्तदिग्वधूमुखे।

मदान्धसिन्धुरस्फुरत्त्वगुत्तरीयमेदुरे मनो विनोदमद्‍भुतं बिभर्तु भूतभर्तरि॥४॥

ஜடா பு4ஜங்க3 பிங்க3 ஸ்பு2ரத்ப2ணாமணிபிரபா4

கத3ம்பகுங்குமத்3ரவ ப்ரலிப்த தி3க்வதூ4முகே2 |

மதா3ந்த4ஸிந்து4ரஸ்பு2ரத்வகுத்தரீயமேது3ரே

மனோவினோத3மத்3பு4தம்பி34ர்துபூ4தப4ர்தரி|| 4 ||

யாருடைய சடாமுடியில் நெளியும் பாம்பின் ரத்தினத்தின் ஒளியால், பேரொளி வீசிப் பிரகாசிக்கும் சிவபெருமானுக்கு வணக்கங்கள், திசைதேவதை என்னும் புதுமணப்பெண்ணின் முகத்தில் கதம்ப நிற குங்குமம் போல் லிக்கின்றதோ, நடனம் ஆடுகையில் யார் யானையின் தோலால் ஆன ஆடையை அணிந்துள்ளாரோ, அத்தகைய அற்புதமான பூதநாதர் (உயிர்களையெல்லாம் காப்பவர்) என் மனத்தை கொள்ளைக் கொள்ளட்டும்.

सहस्रलोचनप्रभृत्यशेषलेखशेखर प्रसूनधूलिधोरणी विधूसराङ्घ्रिपीठभूः।

भुजङ्गराजमालया निबद्धजाटजूटकः श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखरः॥५॥

சஹஸ்ரலோசன ப்ரப்4ருத்யசேஷலேக2ஷேக2

பிரஸூனதூ4ளி தோ4ரணீ விதூ4ஸராங்க்4ரிபீட2பூ4: |

பு4ஜங்க3ராஜமாலயாநிப3த்34 ஜாடஜுடக:

ஷ்ரியைசிராயஜாயதாம்சகோரப3ந்து4ஷேக2ர: || 5 ||

ஆயிரம் கண்ணுடையான் (இந்திரன்)/விஷ்ணு முதலான தேவர்களின் சிரசில் இருக்கும் மலர்களின் மகரந்தத்தால் எவருடைய பாதபீடம் அலங்கரிக்கப்படுகிறதோ, எவருடைய அடர்ந்த சடாமுடி நாகராஜன் என்னும் மாலையால் கட்டப்பட்டிருக்கிறதோ, சகோர பறவையின் தோழனை (சந்திரன்) சிரசில் தரித்திருக்கும் அவர் நமக்கு மங்களம் அளிக்கட்டும்.

ललाटचत्वरज्वलद्धनञ्जयस्फुलिङ्गभा निपीतपञ्चसायकं नमन्निलिम्पनायकम्।

सुधामयूखलेखया विराजमानशेखरं महाकपालिसम्पदेशिरोजटालमस्तु नः॥६॥

லலாடசத்வரஜ்வலத்34னஞ்ஜய ஸ்பு2லிங்க3பா4

நிபீத பஞ்சஸாயகம் நமன் நிலிம்பநாயகம் |

சுதா4மயூக2லேக2யாவிராஜமானஷேக2ரம்

மஹாகபாலிஸம்பதே3ஷிரோஜடாலமஸ்துந: || 6 ||

தம் நெற்றியில் பற்றியெரிந்த தீச்சுடரால் காமக்கடவுளை எரித்தவரும், வானுலகத் தலைவர்களால் போற்றப்படுபவரும், பிறைநிலவின் ஒளியாலும் குளிர்ந்த கிரணங்களாலும் நெற்றிப் பொலிவுறும் பெருமானாகிய சிவபெருமான்,நாம் சித்திச் செல்வங்களைப் பெற்றிடும் வகையில், தம் திருவருளை நம் மீது பொழிவாராக.

करालभालपट्टिकाधगद्‍धगद्‍धगज्ज्वलद् धनञ्जयाहुतीकृतप्रचण्डपञ्चसायके।

धराधरेन्द्रनन्दिनीकुचाग्रचित्रपत्रक प्रकल्पनैकशिल्पिनि त्रिलोचने रतिर्मम॥७॥

கராலபா4 பட்டிகாத43த்343த்343ஜ்ஜ்வலத்3

4னஞ்ஜயாஹுதீக்ருத பிரசண்ட3பஞ்சஸாயகே |

4ராத4ரேந்த்3ரநந்தி3னீகுசாக்3ரசித்ரபத்ரக

ப்ரகல்பநைகஷில்பினித்ரிலோசனேரதிர்மம|| 7 ||

எவருடைய அச்சமூட்டும் நெற்றியில் தகதகக்கும் தீப்பொறி, ஐந்து அம்புகள் கொண்ட தனஞ்ஜயனை (காமனை) தீயில் பொசுக்கியவரும், எந்த மகாகலைஞனால் மலையரசன் மகளின் ஸ்தனங்களில் அழகான வரிகள் வரையப்படுகின்றனவோ,அந்த முக்கண்ணனிடம் என் மனம் லயிக்கட்டும்.

नवीनमेघमण्डली निरुद्‍धदुर्धरस्फुरत् कुहूनिशीथिनीतमः प्रबन्धबद्धकन्धरः।

निलिम्पनिर्झरीधरस्तनोतु कृत्तिसिन्धुरः कलानिधानबन्धुरः श्रियं जगद्धुरंधरः॥८॥

நவீனமேக4மண்ட3லீ நிருத்34 து3ர்த4ரஸ்பு2ரத்

குஹூநிஷீதி2நீதம: ப்ரப3ந்த43த்த4கந்த4: |

நிலிம்பநிர்ஜ2ரீத4ரஸ்தநோதுக்ருத்திஸிந்து4ர:

கலாநிதா4நப3ந்து4ர: ஷ்ரியம்ஜகத்3து4ரந்த4ர: || 8 ||

பிரகாசமான நிலவை மறைக்கும் கருமேகக் கூட்டத்தைப்போலும், அமாவாசை நிலவை போன்றும் கருமைப் பொருந்திய கழுத்தை உடையவன், தேவநதியான கங்கயை தரித்து, உதிரம் தோய்ந்த யானை உறி போர்த்தி, அழகான பிறைசந்திரனை சூடி, பிரபஞ்ச பாரத்தை சுமக்கும் பெருமான் நமக்கு அருளட்டும்.

प्रफुल्लनीलपङ्कजप्रपञ्चकालिमप्रभा वलम्बिकण्ठकन्दलीरुचिप्रबद्धकन्धरम् ।

स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे॥९॥

ப்ரபு2ல்ல நீலபங்கஜ ப்ரபஞ்சகாளிமப்ரபா4

வலம்பி3 கண்ட2கந்த3லீ ருசிப்ரப3த்34கந்த4ரம் |

ஸ்மரச்சி23ம்புரச்சி23ம்ப4வச்சி23ம்மக2ச்சி23ம்

3ஜச்சி2தா3ந்த4கச்சி23ம்தமந்தகச்சி23ம்ப4ஜே|| 9||

கோயில்களில் வழிபாட்டிற்குப் பயன்படும், முழுமையாக மலர்ந்த நீலத் தாமரை மலர்களின் ஒளியால் கழுத்து பிரகாசிக்கும் சிவபெருமானுக்கு நமஸ்காரங்கள்!, பிரபஞ்சத்தின் கருமையை  தன்னுள் கொண்ட, பொலிவு பொருந்திய கழுத்தை உடையவரை, காமனை வென்றவரை, திரிபுரம் வென்றவரை, பவபந்தத்தை வென்றவரை, (தட்சனின்) யாகத்தை வென்றவரை, யானையை வென்றவரை, அந்தகாசுரனை வென்றவரை, காலனை வென்றவரை துதிக்கின்றேன்.

अखर्वसर्वमङ्गलाकलाकदम्बमञ्जरी रसप्रवाहमाधुरीविजृम्भणामधुव्रतम्।

स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे॥१०॥

அக2ர்வ ஸர்வமங்க3ளா கலாகத3ம்ப3மஞ்சரீ

ரசப்ரவாஹ மாது4ரீ விஜ்ரும்ப4ணா மது4வ்ரதம் |

ஸ்மராந்தகம்புராந்தகம்ப4வாந்தகம்மகா2ந்தகம்

3ஜாந்தகாந்த4காந்தகம்தமந்தகாந்தகம்ப4ஜே|| 10 ||

எவர் தரித்திருக்கும் அழகிய கதம்ப மலர்களில் ஊறும் தேனினால் தேனீக்கள் ஈர்க்கப்பட்டுகின்றனவோ, அந்த காமனை அழித்தவரை, திரிபுரம் அழித்தவரை, பவபந்தத்தை  அழித்தவரை, (தட்சனின்) யாகத்தை அழித்தவரை, யானையை அழித்தவரை, அந்தகாசுரனை அழித்தவரை, காலனை அழித்தவரை துதிக்கின்றேன்

जयत्वदभ्रविभ्रमभ्रमद्‍भुजङ्गमश्वसद् विनिर्गमत्क्रमस्फुरत्करालभालहव्यवाट् ।

धिमिद्धिमिद्धिमिध्वनन्मृदङ्गतुङ्गमङ्गल ध्वनिक्रमप्रवर्तितप्रचण्डताण्डवः शिवः ॥११॥

ஜயத்வத3ப்4ரவிப்4ரம ப்4ரமத்பு4ஜங்க3மஷ்வஸத்3

விநிர்க3மத் க்ரமஸ்பு2ரத் கராலபா4லஹவ்யவாட் |

தி4மித்3தி4மித்3தி4மித்4வனன் ம்ருத3ங்க3துங்க3மங்க3த்4வனிக்ரமப்ரவர்த்தித ப்ரசண்ட3 தாண்ட3 ஷிவ || 11||

சிவபெருமானின் அச்சமூட்டும் நெற்றியிலிருந்து வெளிப்படும் நெருப்பானது அவர் அணிந்திருக்கும் சுழன்றாடும் நாகங்களின் மூச்சுக்காற்றினால் நாற்புறமும் பரவுகின்றது.திமித்திமி என்ற மிருதங்கத் தாளத்திற்கேற்ப அவர் நடனமாடுகிறார்.

दृषद्विचित्रतल्पयोर्भुजङ्गमौक्तिकस्रजोर् गरिष्ठरत्नलोष्ठयोः सुहृद्विपक्षपक्षयोः।

तृणारविन्दचक्षुषोः प्रजामहीमहेन्द्रयोः समप्रवृत्तिकः कदा सदाशिवं भजाम्यहम्॥१२॥

த்3ருஷத்3விசித்ர தல்பயோர் பு4ஜங்க3 மௌக்திக ஸ்ரஜோர்

3ரிஷ்ட2ரத்ன லோஷ்ட2யோ: ஸுஹ்ருத்3விபக்ஷ பக்ஷயோ: |

த்ருணாரவிந்த3சக்ஷுஷோ: பிரஜாமஹீமஹேந்த்3ரயோ:

ஸமப்ரவ்ருத்திக: கதா3ஸதா3ஷிவம்ப4ஜாம்யஹம்||12||

உலகின் பலவித வடிவங்களை—பாம்பையும் மாலையையும், இரத்தினத்தையும் களிமண்ணையும், நண்பர்களையும் எதிரிகளையும், புல்லையும் தாமரைப் போன்ற கண்களையும், சாதாரண மக்களையும் அரசர்களையும்—ஒரே நோக்கோடு பார்த்து, நான் சதாசிவனை தொழும் நாள் எந்நாளோ?

कदा निलिम्पनिर्झरीनिकुञ्जकोटरे वसन् विमुक्तदुर्मतिः सदा शिरःस्थमञ्जलिं वहन्।

विमुक्तलोललोचनो ललामभाललग्नकः शिवेति मन्त्रमुच्चरन्कदा सुखी भवाम्यहम्॥१३॥

கதா3 நிலிம்பநிர்ஜ2ரீ நிகுஞ்ஜகோடரே வஸன்

விமுக்தது3ர்மதி: ஸதா3 ஷிர:ஸ்த2மஞ்ஜலிம் வஹன் |

விமுக்தலோலலோசனோலலாமபா4லலக்3னக:

ஷிவேதிமந்த்ரமுச்சரன்கதா3ஸுகீ24வாம்யஹம்|| 13 ||

கங்கைக் கரையில், குகையில் வசித்துக்கொண்டு தலைமேல் கூப்பிய கரங்களுடன், மனத்தின் மலங்கள் கழுவப்பட்டு, சுழன்றாடும் கண்களையும் ஜொலிக்கும் நெற்றியும் உடைய சிவபெருமானின் நாமத்தை உச்சரித்துக்கொண்டு நான் சுகம் அடையும் நாள் எந்நாளோ?

इमं हि नित्यमेवमुक्तमुत्तमोत्तमं स्तवं पठन्स्मरन्ब्रुवन्नरो विशुद्धिमेतिसंततम्।

हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्तनम्॥१४॥

இமம் ஹி நித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்

பட2ன் ஸ்மரன் ப்3ருவந்நரோ விஷுத்3தி4மேதி ஸந்ததம் |

ஹரேகு3ரௌஸுப4க்திமாஷுயாதிநாந்யதா23திம்

விமோஹனம்ஹிதே3ஹிநாம்சுஷங்கரஸ்யசிந்தனம்|| 14 ||

இந்த சிறந்த ஸ்தோத்திரத்தை எவரொருவர் அனுதினமும் படிக்கிறாரோ, நினைவில் கொள்கிறாரோ, உச்சாடனம் செய்கிறாரோ, அவர் தூய்மையடைவார். சிவபெருமானிடம் பக்தி செலுத்துவதைத் தவிர வேறு கதியில்லை.சிவபெருமானை நினைத்த மாத்திரத்தில் மோகம் விலகிவிடும்

पूजावसानसमये दशवक्त्रगीतं यः शम्भुपूजनपरं पठति प्रदोषे।

तस्य स्थिरां रथगजेन्द्रतुरङ्गयुक्तां लक्ष्मीं सदैव सुमुखीं प्रददाति शम्भुः॥१५॥

பூஜாவஸான ஸமயே 3ஷவக்த்ர கீதம் 

: ஷம்பு4 பூஜனபரம் பட2தி ப்ரதோ3ஷே |

தஸ்யஸ்தி2ராம்ரத23ஜேந்த்3ரதுரங்க3யுக்தாம்

லக்ஷ்மீம்ஸதை3வஸுமுகீ2ம்ப்ரத3தா3திஷம்பு4: 15 |

இராவணனால் இயற்றப்பட்ட இப்பாடலை, அதிகாலையில் சிவபெருமானுக்கான பூஜையின் முடிவில், இந்த ஸ்தோத்திரத்தை எவர் பாடுகிறாரோ அவருக்கு ரதம், யானை, குதிரை போன்ற ஐஸ்வர்யங்களை அளித்து, லட்சுமி தேவியின் நிலையான புன்னகையையும் சிவபெருமான் அருள்கிறார்

ஓம் நம சிவாய!!

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *