நமது மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் நாம் எதிர்கொள்ளும் பல மருத்துவ நிலைகளில், உடல் பருமன் மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். உடலில் அதிகப்படியான கொழுப்பு குவியும்போது மாரடைப்பு போன்ற உடல்நல அபாயங்கள் அதிகரிக்கும்.
உடல் பருமன் என்றால் என்ன?
உலக சுகாதார அமைப்பின் (WHO) வலைத்தளத்தில் கிடைக்கும் ஒரு உண்மைத் தகவலின்படி, 1980 முதல் உலகளவில் உடல் பருமன் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2008 ஆம் ஆண்டில், 300 மில்லியன் பெண்களும் 200 மில்லியன் ஆண்களும் உடல் பருமனாக இருந்தனர். இந்த புள்ளிவிவரங்கள் உங்கள் சொந்த உடல்நலனைப் பற்றி கவலைப்பட வைக்கின்றனவா? வியர்க்கத் தொடங்குவதற்கு முன், நீங்கள் உடல் பருமனாக இருக்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தொழில்நுட்ப ரீதியாகப் பேசினால், உடல் பருமனாக இருப்பது அதிக எடையுடன் இருப்பதிலிருந்து வேறுபட்டது. எளிமையாகச் சொன்னால், 25 ஐ விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கும் உடல் நிறை குறியீட்டெண் (BMI) அதிக எடை கொண்டதாக வகைப்படுத்துகிறது. இருப்பினும், 30 ஐ விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் (BMI) பருமனான வகையின் கீழ் வருகிறது.
வெளியேற வழி என்ன?
நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும், இரண்டு சூழ்நிலைகளிலும் உங்கள் தரப்பில் சில தீவிர நடவடிக்கைகள் தேவை. உடல் பருமனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். உங்கள் உடல் பருமனைக் குறைக்க, உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களைத் தவிர்த்து, உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். தொடக்கத்தில், நீங்கள் ஒரு ஆரோக்கியமான உணவுத் திட்டத்தைப் பின்பற்றுகிறீர்களா என்பதையும், சில உடற்பயிற்சிகளைச் செய்கிறீர்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உடற்பயிற்சிக்கு கூடத்திற்கு (ஜிம்மிற்குச்) செல்ல வேண்டுமென்பது உங்கள் விருப்பமான வழி அல்ல என்றால், இயற்கையான மாற்றான யோகாவைச் சார்ந்திருங்கள்.
இயற்கையாக உடல்நலனை மீட்டெடுப்பது
யோகா என்பது ஒரு பண்டைய நுட்பமாகும், இது எப்போதும் சிறந்த வாழ்க்கை முறை, சரியான உணவு பழக்கம் மற்றும் உடல் – மனம் சமநிலையைப் பேணும் பயிற்சி. பல்வேறு ஆசனங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சுவாசத்தில் கவனம் செலுத்தும் ஒரு இயற்கை நுட்பமாக இருப்பதால், முற்றிலும் பாதிப்பில்லாதது மற்றும் அலோபதி எடை குறைப்பு மாத்திரைகளுக்கு சரியான மாற்றாகும். உங்கள் உடல் நிறை குறியீட்டு எண் (பிஎம்ஐ) மிக அதிகமாக இருந்தாலும் அல்லது நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நம்பினாலும், யோகா அனைவருக்கும் ஏற்றது. உங்கள் எடையைக் குறைப்பதற்கான பாதையில் நீங்கள் தொடங்கக்கூடிய சில யோக நுட்பங்கள் இங்கே:
கபால பாதி பிராணயாமம்

இந்த சுவாச நுட்பம் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, இதனால் எடையைக் குறைக்க உதவுகிறது. இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் மற்றும் ஒருங்கிணைப்பதை மேம்படுத்துகிறது.
பஸ்ச்சிமோஸ்தாசனா

இந்த ஆசனம் வயிறு மற்றும் இடுப்புப் பகுதி உறுப்புகளை மசாஜ் செய்து, அவற்றை உறுதியானதாக ஆக்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி, கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
வீர்பத்ராசனம்

இந்த ஆசனம் உடலின் சமநிலையை மேம்படுத்தி, சக்தியையும் (stamina) அதிகரிக்கிறது. இதைத் தொடர்ந்து செய்வதால் வயிற்றுப் பகுதி உறுப்புகள் செயல்பாட்டில் ஊக்கமடைகின்றன
தண்டாசனம்
இந்த ஆசனம் வயிற்று தசைகளுக்கு சிறந்த உறுதிப்படுத்தும் பயிற்சி ஆகும். இது மணிக்கட்டுகள் மற்றும் கைகளை வலுப்படுத்துவதால் மேல் உடலுக்கு (உடலின் மேல்பகுதிக்கு) நல்லது.
பூர்வோட்டனாசனம்

இந்த ஆசனம் குடல் மற்றும் வயிற்று உறுப்புகளை நீட்டி அவற்றை வலுப்படுத்துகிறது. வயிற்றை இறுக்கமாகவும் உறுதியானதாகவும் மாற்றும் பயனும் உண்டு.
நௌகாசனம்

இந்த “படகு ஆசனம்”வயிற்று தசைகளை வலுப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தி, குடல் செயல்பாட்டைத் தூண்டுகிறது.
சலபாசனம்

இந்த ஆசனம் வயிற்று உறுப்புகளை மசாஜ் செய்து, உறுதியாக ஆக்குகிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி, உடலின் நெகிழ்வுத் தன்மையையும் (flexibility) உயர்த்துகிறது.
ஹலாசனம்

இந்த ஆசனம் வயிற்று தசைகளை வலுப்படுத்தி தூண்டுகிறது. இது மன அழுத்தம் மற்றும் சோர்வையும் குறைக்கிறது.
வாழ்க்கை முறையை மாற்றுதல்
முற்றிலுமாக, நல்ல வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டால், உடல் பருமனைக் குறைப்பதற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியின் பலனையும் கணிசமாக மேம்படுத்தலாம். யோகப் பயிற்சி செய்வதைத் தவிர, ஆயுர்வேத வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் எடை குறைப்பு முயற்சிகளை துரிதப்படுத்தலாம். பெரும்பாலும் யோகாவின் சகோதரி என்று குறிப்பிடப்படும் ஆயுர்வேதம், யோகாவைப் போலவே நீண்ட காலமாக இருந்து வருகிறது. இயற்கை மற்றும் முழுமையான (holistic) மருத்துவ முறையாகிய ஆயுர்வேதம், உடல்நலம், மேம்பட வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வது எப்படி என்பதையும் வழிகாட்டுகிறது. மேலும், ஆயுர்வேத சமையல் முறைகள் உங்கள் நாவுக்கும், ஆரோக்கியத்திற்கும் இணைந்த சிறந்த தீர்வாக இருக்கும். எடை குறைப்பை சுவையற்ற அனுபவமாக அல்லாமல், மகிழ்ச்சியான பயணமாக மாற்றும்.
உங்கள் வரம்புகளை மதிக்கவும்
யோகா முதலில் அச்சுறுத்தலாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் உடல் பருமனை குறைப்பதற்கு எளிதான மாற்றாகும். துவக்கத்தில் சில ஆசனங்களில் உடலை வளைத்தல் சிரமமாக இருந்தாலும், தொடர்ச்சியான பயிற்சியால் ஒவ்வொரு நாளும் மேலும் நீட்ட முடியும். உங்கள் உடலுக்கு அதன் சொந்த வரம்புகள் உள்ளன என்பதையும், விரைவாக எடையைக் குறைக்க அந்த வரம்புகளுக்கு அப்பால் நீட்டுவது புத்திசாலித்தனம் அல்ல என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். உங்கள் உடல் அனுமதிக்கும் வரை நீட்சி அடையுங்கள், பின்னர் அந்த ஆசனத்தில் விழிப்புடன் சுவாசிக்கும்போது ஓய்வெடுங்கள்.
உங்கள் மனதை அல்ல, உங்கள் எடையைக் குறைக்கவும்
யோகா விரைவான எடை இழப்பை வழங்காது. இருப்பினும், இது நீண்ட கால விளைவுகளை அளிக்கிறது. ஆரம்பத்தில், எடை இழப்பில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்று நீங்கள் உணரலாம், ஆனால் நீங்கள் உள்ளே மிகவும் உயிர்ப்புடன் சுறுசுறுப்பாகவும் உணரத் தொடங்குவீர்கள். இறுதியில், உடல் பதிலளிக்கத் தொடங்கி நல்ல நிலைக்குத் திரும்பும். பொறுமை மிக முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள், உங்கள் பயிற்சியில் தொடர்ந்து இருங்கள். உங்கள் யோகா பயிற்றுவிப்பாளரிடம் ஆலோசித்து, உங்களுக்கு ஏற்ற தனிப்பட்ட பயிற்சி திட்டம் ஒன்றை அமைத்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உடல், அமைதியான மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனதுக்கு ஒரு வீடாக இருக்கலாம். இது உங்களை அழகாகக் காட்டுவது மட்டுமல்லாமல், நம்பிக்கையையும் சேர்க்கிறது. மேலும், பல்வேறு உடல்நல ஆபத்துகளிலிருந்து விடுபட்டு, நீங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க உதவுகிறது. உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதை இழப்பதன் மூலம் இதையெல்லாம் பெற யோகா உதவுகிறது. நீங்கள் எடையைக் குறைத்து உங்கள் உடலின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறும் ஒரு சரியான வெற்றி – வெற்றி சூழ்நிலை இது. எனவே, உங்கள் யோகா பாயை விரித்து, இன்றே உடல் பருமனை எதிர்த்துப் போராட இயற்கையான வழியை எடுத்துக் கொள்ளுங்கள்.
யோகா பயிற்சி உடலையும் மனதையும் வளர்க்க உதவுகிறது, இது நிறைய ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது, ஆனால் அது மருத்துவத்திற்கு மாற்றாக இல்லை. பயிற்சி பெற்ற ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் யோகாசனங்களைக் கற்றுக்கொள்வதும் பயிற்சி செய்வதும் முக்கியம். ஏதேனும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டால்,, ஒரு மருத்துவர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரை அணுகிய பிறகு யோகாசனங்களைப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு அருகிலுள்ள வாழும் கலை மையத்தில் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சியைப் பற்றி கேட்டறியவும்.
நிகழ்ச்சிகள் குறித்து தகவல் பெற அல்லது உங்கள் கருத்துகளை பகிர,: info@srisriyoga.in ல் எழுதுங்கள்.











