எனக்கு ஜோத்பூரின் கௌசாலா மைதானம்,  ஜபல்பூரின் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அகமதாபாதின் ப்ரஹ்லாத் நகர் தோட்டம் மிகவும் நினைவுக்கு வருகின்றன. ஏன் தெரியுமா? எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இவை காலை மற்றும் மாலை நடைப்பயிற்சிக்கான உகந்த இடங்கள். ஒவ்வொரு நாளும்  போதுமான நடைப்பயிற்சி செய்ய இங்குள்ள 1 கி.மீ குறியீடு  உதவுகிறது. மேலும் தொல்லைதரும் வாகனங்களும், மேடு பள்ளங்களும் இல்லை,  மேலும் ஒரே மாதிரியான இலக்குகளைக் கொண்டவர்கள் சுற்றி நடப்பது, உங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

நான் எடை குறைப்பதற்காக ஸ்ரீ ஸ்ரீ தத்வாவின் நாடி வைத்தியர்  டாக்டர்  மனஸ் பரிஹார் அவர்களுடன் ஆலோசித்தேன்.  அவரின் மருத்துவ பரிந்துரைகளில் நடைப்பயிற்சி மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அவர் கூறிய நடை யுக்திகள் மிகச் சிறந்த பலனை அளித்தன. மற்றவர்களின் அனுபவங்களைக் கவனித்து, சில கூடுதல் வழிமுறைகளையும் ஏற்றுக்கொண்டேன்.

எடை குறைப்புக்கு நடைப்பயிற்சி மட்டுமே போதுமானதா?

எனக்கு நடைப்பயிற்சியின் மூலம் எடை குறைப்பதில் அனுபவம் உள்ளது. ஆனால், எடை குறைப்புக்கு நடைப்பயிற்சி மட்டுமே  போதுமானது அல்ல. உதாரணமாக, நீங்கள் நடைப்பயிற்சி செய்தாலும், அதிக நேரம் தூங்கினால் அல்லது சோபாவில் உட்கார்ந்திருந்தால், அல்லது ஆரோக்கியமற்ற உணவு எடுத்துக்கொண்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். நான் துரித உணவை குறைத்து,  பழங்களை அதிகமாக உட்கொண்டேன்.

  • சிறந்த மற்றும் சீரான எடை இழப்புக்காக நடைபயிற்சியுடன் இந்த செயல்பாடுகளையும் செய்தேன்.
  • நடைப்பயிற்சியுடன்கூட , அதிக உணவு உட்கொள்ளாமலிருப்பதில் கவனம் செலுத்தினேன்.  எனக்கு இனிப்புகள் பிடிக்கும்; எனவே, இனிப்பு எடுத்துக்கொள்ள வேண்டுமானால், அதை மதியம் சாப்பிடுவது நல்லது என நினைத்தேன் ஏனெனில்,  அதுவே செரிமானத்திற்கு உகந்த நேரம்.
  • நின்ற நிலையில் செய்யப்படும் யோகாசனங்கள் ,  பின் தொடை, கெண்டைக்கால் மற்றும் முன்தொடைத் தசைகளை வலுப்படுத்தி எடைகுறைப்புக்காக வேகமாக நடக்கும்போது தசைப்பிடிப்பு ஏற்படாமல்   உறுதியாக வைத்தன.
  • நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது  நாள் முழுவதும்  தண்ணீர் பருகுவது அவசியம் — இது உங்கள் செயல்திறனை பராமரித்து, தாங்கும்திறனையும் மேம்படுத்தி, இதயத்துடிப்பு மற்றும் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும்.
  • உணவுப் பழக்கங்களை கவனியுங்கள்;  சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மாவுச்சத்துள்ள  உணவை குறைவாக எடுத்துக்கொள்வது,  புத்துணர்ச்சியுடன் எழுவதற்கு உதவும்.

ஒரே மாதிரியான நடைமுறையிலிருந்து விடுபட, நான் நடப்பதையும் ஓடுவதையும் மாறி மாறி செய்கிறேன்.

எடை குறைப்புக்கான 15 நடைபயிற்சி உதவிக்குறிப்புகளும்,  யுக்திகளும்

நீங்கள் எவ்வளவு அதிகமாக நடக்கிறீர்களோ, எவ்வளவு வேகமாக நடக்கிறீர்களோ, அவ்வளவு  கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

  • நல்ல காலணியில் முதலீடு செய்யுங்கள் – வசதியான,  மென்மையான நெகிழ்வான அடித்தளம் மற்றும் உறுதியான குதிகாலைக் கொண்ட  காலணிகளைத் தேர்ந்தெடுக்கவும்
  • தினமும் நீங்கள் சலிப்படையாமல் நடக்கக்கூடிய பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்யவும். புத்துணர்ச்சி பெற அவ்வப்போது. இடங்களை மாற்றவும்.
  • நடப்பதை வழக்கமாக்குங்கள் – என் அருகாமையில் வசிக்கும் நண்பரும், சமஸ்கிருத  அறிஞருமான   டாக்டர் சுமன்லதா ஸ்ரீவஸ்தவாவிடமிருந்து ஒரு நாள் தவறாமல் நடக்க நான் ஊக்கம் பெற்றேன்.  மழை வந்தாலும் கூட அவர் குடையின் கீழ் நடப்பார்.
  • உணவுக்குப் பிறகு நடப்பது –   மதிய உணவு அல்லது இரவு உணவுக்குப் பிறகு உடனே 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது,  ஒரு மணி நேரம் கழித்து நடப்பதை விட எடை குறைப்பில் சிறந்த பலனளிக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
  • உணவுக்குப் பிறகு நடப்பது –   மதிய உணவு அல்லது இரவு உணவுக்குப் பிறகு உடனே 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது,  ஒரு மணி நேரம் கழித்து நடப்பதை விட எடை குறைப்பில் சிறந்த பலனளிக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
  •  இசை, ஆடியோ புத்தகம் அல்லது பாட்காஸ்ட் கேட்டுக்கொண்டே நடப்பது  உங்களை மேலும் நடக்க ஊக்குவிக்கும்.
  • உங்கள் தினசரி நடை எண்ணிக்கையை கண்காணிக்க. உடற்பயிற்சி கண்காணிப்புக்கு கருவி அல்லது நடை தொலைவு அளவி (பிடோமீட்டர் அல்லது ஃபிட்னஸ் )  பயன்படுத்துங்கள்
  • மலைப்பாதையில் ஏறுவது அல்லது சுமைகளுடன் நடப்பது – இது தசைகளை வலுப்படுத்தி, எடை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் உங்கள் தசைகளுக்கு வலிமையையும் சேர்க்கிறது
  • உங்கள் உடல் தோரணையை மனதில் கொண்டு, கைகளை வீசி நடப்பது, உங்கள் மேல் உடலுடன் உடற்பயிற்சி செய்வது போல எடை குறைக்க உதவுகிறது.
  • ஓடுபொறியில் அல்லாமல் (டிரெட்மில்லில்) ,  இயற்கையில் நடக்கவும்.
  • பகலில்  சூரிய ஒளியில் நடப்பதனால் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்தான வைட்டமின் டி கிடைக்கப் பெறும்.
  • ஒரு நடைப்பயிற்சி நண்பர், உங்கள் வேகமான அல்லது மெதுவான வேகத்திற்கு காரணமாக இருக்கலாம். எடை இழப்புக்கான உங்கள் இலக்கை ஆதரிக்கும் ஒரு நண்பருடன் நடப்பது நல்லது.
  • பின்னோக்கி நடப்பது உங்கள் வேகத்தைக் குறைத்தாலும்,  தசைகள் மற்றும் முழங்கால்களுக்கு தீவிர பயிற்சியை வழங்குகிறது.
  • உங்கள் கால்கள் மற்றும் கால்களில் ஏற்படும் அழுத்தத்தைத் தடுக்க நீண்ட நடைகளை விட வேகமான நடைகளை இலக்காகக் கொள்ளுங்கள்.
  • நடைப்பயிற்சிக்கு முன்பும், இடையிலும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும்.

டாக்டர் மனஸ் பரிஹார், வைத்தியா, ஸ்ரீ ஸ்ரீ தத்வா ஆகியோரின் குறிப்புகளின் துணை கொண்டு பிரதிபா சர்மா அவர்களால் எழுதப்பட்டது.

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *