எடைக்குறைப்பு என்பது அபரிமிதமான தைரியமும், அர்ப்பணிப்பும், திட உறுதியும் நிறைந்த ஒரு செயலாகும். இந்த பாதையில் பயணிப்பவர் எவருமே விரும்பிய இலக்கை அடையவே முயல்கிறார்கள். பல பழக்கங்களையும், நடை முறைகளையும் உடைத்தெரிவதை உள்ளடக்கியது இது. சில நேரம், நம் கடின முயற்சியையும் தாண்டி, மிக மெதுவான முன்னேற்றமோ, அல்லது எந்த மாற்றமுமே இல்லாதது போலவோ தோன்றும். உடற்பயிற்சி உபகரணங்களுடன் செலவழிக்கும் பல மணி நேரங்களும், வியர்வை சிந்தி கடினமான உடற்பயிற்சி செய்வதும், கடுமையான கட்டுப்பாடும் கூட விரும்பிய பலனை தராமல் போகலாம்.

சோர்வடைந்து, ”என் கனவு இலக்கை அடைய இன்னும் என்னதான் செய்வது?” எனக் கேட்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டிருந்தால், ஒரு எளிய முறையை முயன்று பார்க்கும் நேரம் வந்து விட்டது. அதுதான் தியானம். எளிமையான மற்றும் இயல்பான இந்தக் கருவி, உங்கள் எடைக்குறைப்பின் வேகத்தை அதிகரிக்க உதவும்.

முயற்சி தேவைப்படும் ஒன்றையும், முற்றிலும் மாறாக முயற்சியற்றிருக்கும் நிலையான இன்னொன்றையும் எப்படி தொடர்புப்படுத்துவது? இது எளிதே. எடைக்குறைப்பு என்பது உடற்சார்ந்த செயல்முறை மட்டும் அல்ல, மனம் சார்ந்ததும் ஆகும். ஆரோக்கியமற்ற உணவை (ஜங்க்) மறுக்க உங்கள் மனதை நீங்கள் பழக்கப்படுத்திவிட்டால், போராட்டத்தில் பாதி வெற்றி கிடைத்துவிடும். அதேபோல், உங்கள் எடைக்குறைப்பு பயணத்தில் தியானம் ஒரு பெரிய பங்கு வகிக்கக்கூடும். எவ்வாறு என்பதை இங்கே காணலாம்.

எடைக்குறைப்புக்கு தியானம் எவ்வாறு உதவுகிறது

1. தியானம் உங்கள் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தை (BMR) ஐ எளிதில் குறைக்கிறது

ஓய்வாக இருக்கும்போது, அதாவது மூச்சு மட்டுமே விடும்போது, உங்களுக்கு எத்தனை கலோரிகள் தேவை? அதுதான் உங்கள் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் அதாவது (BMR). அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் குறைவாக இருப்பது நல்லது. குறைந்த கலோரி உட்கொள்ளல் என்றால் எடை குறைதல் என்று பொருள். தியானத்தின் போது இது நிகழ்கிறது. ஏனெனில், உங்கள் அன்றாட வழக்கத்தில் தியானத்தை இணைத்துக் கொண்டால், உடலின் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் குறைகிறது. அதாவது, உங்களுக்கு குறைந்த கலோரிகள் தேவைப்படுகின்றன, இது இயற்கையாகவே எடைக்குறைப்புக்கு உதவுகிறது.

2. தியானம் உணவு  கிரகித்தலை மேம்படுத்துகிறது

நீங்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு மணி நேரம் செலவழிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு உங்களுக்கு அதீத பசி எடுக்கிறது. கடுமையான உடற்பயிற்சி முறைக்கு பிறகு மேசையில் காணும் எல்லா உணவையும் வாயில் திணித்துக் கொள்கிறீர்கள். மேலும், விரும்பத்தகாத உண்மை என்னவென்றால், உடற்பயிற்சி செய்யாதபோதும் கூட உங்களுக்கு அதிக பசி எடுக்கிறது. உட்கொள்ளும் உணவை கிரகித்தலில் சிக்கல் எழுகிறது. உடல் எடையை குறைக்க இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?

தியானம் இங்குதான் முக்கிய பங்கு வகிக்கிறது. எடைகுறைப்புக்கான மிகச்சிறந்த உதவிக்குறிப்புகளில் இதுவும் ஒன்று. தியானம், உணவின் செரிமானத்தையும், கிரகித்தலையும் மேம்படுத்துகிறது. ஹார்மோன்களில் சமநிலையின்மையும், மன அழுத்தமும், அதிக உணவு உட்கொள்ளலுக்கும் அஜீரணத்திற்கும் வழிவகுக்கிறது. அன்றாடம் தியானம் செய்வது அழுத்தம் நிறைந்த உங்கள் நரம்புகளைத் தளர்த்தி, ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவுகிறது. எடைகுறைப்புக்கான உங்கள் முயற்சிகளில் இது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

3. தியானம்,  துரித உணவுக்கான விருப்பத்தை மட்டுப்படுத்துகிறது

எடைக்குறைப்புப் பயணத்தில் பெரும் வேகத்தடையாக இருப்பது ஆரோக்கியமற்ற  உணவுக்காக ஏங்குவதாகும், குறிப்பாக நீங்கள் உணவுப் பிரியராக அல்லது இனிப்பை விரும்புவராக இருந்தால், எடைக்குறைப்புப் பயணத்தில் உங்கள் இலக்கை அடைய விரும்பினால், இப்படிப்பட்ட ஏக்கத்தைத் தவிர்க்க மிகவும் அவசியமானது கூடுதல்  விழிப்புணர்வே. உங்கள் விழிப்புணர்வை அதிகரிக்க தியானம் உதவுகிறது. நீங்கள் ‘விழிப்புணர்வு மண்டலத்தில்’ இருக்கும்போது, இத்தகைய ஆசைகளை நிராகரிப்பது எளிதாகிறது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள் காலப்போக்கில் இத்தகைய உணவுக்கான ஆசையும் குறைகிறது.

4. தியானம் = குறைந்த மன அழுத்தம்

ஒரு சிப்ஸ் கவரையோ, சாக்லேட்டையோ எடுக்க நீங்கள் எப்போது கையை நீட்டுகிறீர்கள் என்று கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் அப்போது மன அழுத்தத்தில் இருந்தீர்களா? விரைவான, ‘பாதிப்பற்ற’ மகிழ்ச்சியைத் தேடினீர்களா? நீங்கள் உணராதபோதும் மன அழுத்தும் உங்களுள் ஆழமாக ஒளிந்திருந்து, அளவுக்கதிகமாக உண்ண வைக்கக்கூடும். ஆகவேதான், அன்றாட அழுத்தத்தை விரட்ட, தியானம் அவசியமாகிறது. எடைக்குறைப்புக்கும் அது உதவுகிறது. அது உங்கள் ஆழ்மனதில் சென்று, சுமைகளை குறைத்து, உங்கள் பாரத்தை லேசாக்குகிறது. அழுத்தமில்லாமல் தளர்வாக இருக்கும்போது சாப்பிட என்ன இருக்கிறது என்று நீங்கள் அடிக்கடி சமையலறையில் தேடமாட்டீர்கள்.

5. தியானம் அர்ப்பணிப்பை அதிகரிக்கிறது

உங்கள் எடைக்குறைப்புத் திட்டத்தில் முதல் மற்றும் பத்தாவது நாட்களே மிகக் கடினமானவையாக இருக்கக்கூடும். தொடங்குவதற்கு முயற்சித் தேவைப்படுகிறது, அதே நேரம், அதை வழக்கமாக்கிக் கொண்டு தவறாமல் கடைப்பிடிப்பதும் எளிதல்ல. தொடர்ந்து கடைப்பிடிக்க அர்ப்பணிப்பு தேவை. உங்கள் சிறந்த நோக்கத்தையும் தாண்டி பல தடைகள் உள்ளன. உதாரணமாக, அதிக அல்லது குறைந்த தூக்கம், துரித உணவை விரும்பி உண்பது. இவை அனைத்துமே உங்கள் உறுதியைக் குலைத்து, உங்கள் எடைக்குறைப்புத் திட்டத்தை பாதிக்கக்கூடும். இதிலிருந்து வெளிவர ஒரே வழி தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொள்வதற்கான தெளிவுமே ஆகும். தவறாமல் தியானம் செய்வது உங்கள் மனவுறுதியை வலுப்படுத்தி, உங்கள் நோக்கத்தை தீவிரமாக்குகிறது. இது உங்கள் அர்ப்பணிப்பின் மதிப்பை உங்களுக்கு உணர்த்துகிறது. ஆகவே, உங்கள் அன்றாட எடைக்குறைப்பு திட்டத்தில் தியானத்தையும் சேர்த்துக்கொள்வது அவசியம்.

6. தியானம், எடைக் குறைப்புக்கு நேரம் ஒதுக்க உதவுகிறது

உடற்பயிற்சி செய்ய எனக்கு நேரமில்லை என்று எப்போதாவது சொல்லியிருக்கிறீர்களா? எடைக்குறைப்புக்கான சிறந்த குறிப்புகள்கூட இதனால் உங்களுக்கு பயனளிக்கவில்லயா?

தியானம் உங்கள் திறனை மேம்படுத்தி, கூடுதல் நேரம் பரிசளிக்கப்பட்ட உணர்வை உங்களுக்கு தருகிறது. உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்க இது உங்களுக்கு உதவுகிறது. எடைக்குறைப்புக்கு சஹஜ சமாதி தியானத்தை நீங்கள் முயலலாம். எடைக்குறைப்புக்கு தியானப் பயிற்சி செய்வதற்கு முன், சில யோகாசனங்களைச் செய்யலாம். எந்தவொரு எடைக்குறைப்புத் திட்டத்துக்கும் உணவு முறை மிக இன்றியமையாதது. எனவே, இந்த ஆயுர்வேதக் குறிப்புகள் அற்புதமாக வேலை செய்யக் கூடும்.

நாளின் இறுதியில், நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக் கொள்ளவும், நேசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். சில சமயம், எடைக்குறைப்பை பற்றி சதா யோசிப்பதை விட்டுவிட்டாலே, எடை குறையத் தொடங்கும்.

தினமும் தவறாமல் தியானம் செய்வது மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுவித்து, மனத்திற்கு ஆழ்ந்த ஓய்வை அளித்து, உங்கள் உடலுக்கு புத்துணர்வை அளிக்கிறது. உங்களுக்குள்ளே ஆழ்ந்து சென்று, உங்கள் வரம்பற்றத் திறனை வெளிக்கொணர உங்களுக்கு உதவவே வாழும் கலையின் சஹஜ சமாதி தியானம் பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

அருகிலிருக்கும் வாழும் கலை மையத்தில் சஹஜ சமாதி தியானப் பயிற்சி பற்றிய விவரங்களை கேட்டறியவும்

    World Meditates with Gurudev

    on

    World Meditation Day

    21st December 2025 | 8:30 PM (IST)

    Be a part of a World Record-Breaking event!

     
    *
    *
    *
    *
    *