நமது இருப்புக்கு ஏழு அடுக்குகள் உள்ளன, அவை உடல், சுவாசம், மனம், புத்தி, நினைவுத்திறன், அகந்தை மற்றும் சுயம். ஆனால் பெரும்பாலும், அவை ஒவ்வொன்றும் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் அறிந்திருப்பதில்லை. சுவாசம் உடலைக் கட்டுப்படுத்துகிறது; நமது தீர்வுகள் நமது எதிர்வினைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன ; அகந்தை நமது நடத்தையைப் பாதிக்கிறது; நினைவுத்திறன் நிகழ்வுகளைப் பாதுகாக்கிறது; அதே நேரத்தில் ஆன்மா நம்மைச் ம்மைப்படுத்துகிறது. ஆரோக்கியம் நமது உடல் இருப்புக்கு மட்டுமல்ல, அதற்கு அப்பாற்பட்டது. மனம் – உடல் இணைப்பை மேலும் ஆராய, பின்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களது லட்சிய வேலையில் காலக்கெடுவைத் துரத்துகிறீர்கள், அருமையான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளனர், ஆனால் மன அழுத்தம் உங்களுக்கு கடுமையான முதுகுவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உடல் பின்னடைவு மெதுவாக உங்கள் அன்றாட வேலையில் பிரதிபலிக்கும், இது இடையூறுக்கு வழிவகுக்கும். மனம் – உடல் இணைப்பின் தாக்கத்தை நாம் இப்படித்தான் புரிந்துகொள்கிறோம். இதுவே மனமும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பாதிக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு. உடலின் நலன் மன அமைதியைக் கொடுக்கும்; மன அமைதி உடல் நலனைச் சேர்க்கும்.
மனம் – உடல் பயிற்சியின் 4 நன்மைகள்

- மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நமது உடல் நலம் நமது மன நிலையை பாதிக்கிறது. மனநல நோயாளிகளில், மனச்சோர்வு, பதட்டம், சுய சந்தேகம் போன்ற கோளாறுகள் அவர்களை பலவீனமாகவும் மந்தமாகவும் ஆக்குவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நாள்பட்ட வலி கூட ஒருவரை மோசமான மனநிலையில் வைத்திருக்கும். எனவே, மனம் மற்றும் உடல் இணைப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களைச் சேர்ப்பது பெரிதும் உதவுகிறது.
- போதையிலிருந்து விடுபட உதவுகிறது
உடல், பல வழிகளில் மனதை பாதிக்கிறது. இதைப் புரிந்துகொள்வது மனம் – உடல் சிகிச்சையை உள்ளடக்கிய ஒரு சிகிச்சைத் திட்டத்தை நிறுவ உதவும். மேலும் மீட்சியின் போது, தன்னைப்பற்றிய நேர்மறையான பேச்சு மிகவும் முக்கியமானது. நீங்கள் இனி அடிமையாக இருக்க மாட்டீர்கள் என்று, அல்லது நேர்மாறாக .மனதில் முடிவெடுப்பது உங்களை அதே வழியில் செயல்பட வைக்கும்.

- மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது
மனம் – உடல் இணைப்பை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் மன அழுத்த எதிர்வினை சிறப்பாகிறது. உடனே பதிலளிக்க வேண்டும் என்ற உந்துதல் குறைந்து, தாங்கும் திறன் அதிகரிக்கிறது.
- நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது
அதிர்ச்சி, அறுவை சிகிச்சை, மனவேதனை போன்ற வாழ்க்கையின் சவால்களை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும், மனம்-உடல் இணைப்பை மேம்படுத்துவது அவசியம்.
உடல் – மன இணைப்பை மேம்படுத்த 5 வழிகள்
- யோகா மற்றும் தியானம்
யோகா மற்றும் தியானம் மனதில் விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு,. தன்னம்பிக்கை அதிகரித்து, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தொடங்கும்போது நமது ஒட்டுமொத்த கண்ணோட்டத்தில் ஏற்படும் தாக்கத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
- சுதர்சன கிரியா
நமது சுவாச முறைகள் பெரும்பாலான நேரங்களில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கின்றன. நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது, நமது சுவாசம் ஆழமற்றதாகவும், அதேபோல் நேர்மாறாகவும் இருக்கும், சுதர்சன கிரியா என்பது நம் மனதை உறுதிப்படுத்தும் மற்றும் முன்கூட்டிய கருத்துக்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரு தாள சுவாச நுட்பமாகும். கிரியாவை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், நம் வாழ்க்கையை நடைமுறையில் சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
- ஆழமான சுவாசம்
ஆழமான சுவாச நுட்பங்கள் நமது விழிப்புணர்வை மேம்படுத்துகின்றன, நமது சுவாசத்தில் கவனம் செலுத்த வைக்கின்றன. இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது மற்றும் நாள்பட்ட வலிகளுக்கு எதிராக போராடவும் உதவுகிறது.
- வழிகாட்டப்பட்ட காட்சிப்பதிவு
ஒருவர் விடுமுறையில் இருந்தபோது, மலைகளில் ஒரு மலையேற்றத்தில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களைப் பார்த்து நீங்கள் பரவசமடைந்திருக்கிறீர்களா? இதேபோல், மனச்சோர்வடைந்த செய்திகள் எப்போதாவது உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு அது நடக்கும் என்ற பயத்தை உங்களுக்கு அளித்திருக்கிறதா? இவை அனைத்தும் கற்பனையின் தாக்கம். நேர்மறை வழிகாட்டப்பட்ட கற்பனைகளைப் பயிற்சி செய்வது மனம் – உடல் இணைப்பை மேம்படுத்தி புத்துணர்ச்சியூட்டுகிறது மேலும் நமது ஆற்றலை அதிகரிக்கிறது.
- சரியான ஊட்டச்சத்து
சத்தான உணவு உடலைச் செயல்படச் செய்து மனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.. நீங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால், மனநலப் பிரச்சினைகள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றிலிருந்து மீள்வது எளிதாகிறது.
முடிவுரை
மனமும் உடலும் நம்மிடம் உள்ள பொக்கிஷங்களைப் போன்றவை, மேலும் மனம் – உடல் இணைப்புக்கான முழுமையான அணுகுமுறை வலியற்ற மற்றும் நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும். அவற்றை நீங்கள் எவ்வளவு ஆழமாக ஒருங்கிணைக்க முடியும் என்று முடிவெடுத்து, அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக, நேர்மறை உளவியல் எதிர்கால சிகிச்சைகளுக்கான பல வாயில்களைத் திறக்கக் கூடியது.











