எளிமையாக சொல்வதானால், தியானம் என்பது மன சுகாதாரம் தான்: அதாவது மனத்தில் சேரும் குப்பையை தினமும் அகற்றுவதன் மூலம் உங்கள் உண்மையான சுயத்துடன் தொடர்புகொண்டு, திறமைகளையும் திறன்களையும் செம்மைப்படுத்தி, மனநலனை மேம்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும். அதிவேகமான, இன்றைய நவீன உலகில் உங்களுக்கு ஏற்கனவே நேரப்பற்றாக்குறை இருக்கும்போது, ”நான் ஏன் தியானம் செய்யவேண்டும், அது உண்மையில் உதவுமா?” என்ற கேள்வி எழலாம். ஆனால், இந்த 25 அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால், தியானப் பயிற்சியை தொடங்க, அதிகரிக்க அல்லது மீண்டும் உறுதியாக இணைவதற்கான சரியான நேரம் இதுதான்.

தியானம் செய்பவர்களில் பலருக்கு மனதை அமைதிப்படுத்துதலும், சிந்தனையற்ற மனநிலையை அடைதலும் சாத்தியமற்ற மற்றும் எரிச்சலுட்டும் இலக்காகத் தோன்றலாம். மன அழுத்தத்தை குறைப்பதற்குப் பதிலாக தியானம், அதை அதிகரிப்பதாக பலமுறை எனக்குத் தோன்றியுள்ளது. குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வழிகாட்டுதலுடன் கூடிய யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தன. எனது தியானப் பயிற்சியை எளிதாகவும், மகிழ்சிகரமானதாகவும் அதே நேரத்தில் ஆழமானதாகவும், அர்த்தம் நிறைந்ததாகவும் மாற்றிய சில ஞானத்துளிகளை உங்களுடன் பகிர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

1. நாம் அனைவருமே பிறவி யோகிகள்!

சிறு குழந்தைகளை கவனித்திருக்கிறீர்களா? உடலை நன்றாக வளைத்து  அனைத்து யோகாசனங்களையும் எளிதாகவும் இயல்பாகவும் அவர்கள் செய்கிறார்கள். எப்போதும் புன்சிரிப்புடனும், துள்ளிக் குதிக்கும்  உற்சாகத்துடனும், ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். எப்போதும் நிகழ்தருணத்தில் இருக்கிறார்கள்: கண்ணீர் காயும் முன்னேயே சிரிக்கத் தொடங்குகிறார்கள். அவர்களின் மனம் குழப்பமற்றது. ஒவ்வொரு கணத்திலும் 100% வாழ்கிறார்கள். நீங்களும் நானும் கூட குழந்தையாக இருந்தபோது இப்படித்தான் இருந்தோம். ஒரு யோகிக்கான உடல், மனம் மற்றும் ஆன்மாவுடன்தான் நாம் அனைவருமே பிறக்கிறோம். ஆனால் வளர வளர மன அழுத்தம் நம்மைத் தாக்கி நம் உண்மையான இயல்பை மறைத்து விடுகிறது. நம் தியானப் பயிற்சியின் முக்கிய நோக்கமே இயல்பான மனநிலைக்குத் திரும்புவதுதான்.

2. ’எனக்கு வேண்டும்’ என்பதிலிருந்து ’என்னிடம் உள்ளது’ எனும் மாற்றம்

நாம் மன அமைதியை விரும்பியே தியானம் செய்கிறோம். ஆனால் நமக்குத் தேவையான அமைதி நம்மிடம் ஏற்கனவே இருந்தால்? நம் உடல் எப்படி எலும்பு, தசைகள், உறுப்புகள், இரத்தநாளங்கள், மற்றும் நரம்புகளால் ஆனதோ, அது போலவே நம் ஆன்மா அன்பு, ஆனந்தம், சாந்தி, பேரின்பம் மற்றும் மகிழ்ச்சியினால் ஆனது. நம் இருப்பின் உண்மையான இயல்பு சச்சிதானந்தமே ஆகும் – சத் (உண்மை), சித் (விழிப்புணர்வு), ஆனந்தம் (தூய இன்பம்). தியானம் செய்யும்போது நாம் வெளியில் எங்கிருந்தோ அல்லது நமக்கு வேறான ஏதோ ஒன்றிலிருந்தோ அமைதியையும், ஆனந்தத்தையும் நம்முள் கொண்டுவருவதில்லை. உண்மையில் நாம் யார் என்பதை உணரும்போது, நாடுதல், விரும்புதல், தேடுதல் — இவை எல்லாம் நின்றுவிடுகிறது. நம் பயிற்சியின் ஆரம்பப்புள்ளி எதையோ நாடுவதிலிருந்து ஏற்கனவே அது நமக்குள் இருப்பதை உணர்வதற்கான பயணமாக மாறுகிறது. அப்போது தேடல் நின்று, அனுபவம் தொடங்குகிறது.

3. தியானம் செய்வது மிகவும் எளிதானது, மற்றும் இயல்பானது!

தியானம் செய்வது கடினமானது மற்றும் சவாலானது எனப் பலர் நினைக்கிறார்கள்! உணமையில் தியானம் என்பது நமக்கு எளிதானதும் இயல்பானதும் கூட. நம் விரல்கள் எப்படி எளிதாகவும் இயல்பாகவும் மடங்கி விரிகின்றனவோ, அது போலவேதான் நம் மனமும் தியான நிலைக்குள் செல்கிறது. கண்களை மூடி உட்கார்ந்து, நம் கவனத்தை சில நிமிடங்கள் உள்நோக்கித் திருப்பினால் போதும், அது நம்மை நம் இயல்பில் கொண்டு சேர்க்கும். புதிதாகத் தொடங்குபவர்க்கு தியானம் ஒரு பயிற்சி போலத் தோன்றலாம் எண்ணற்ற நற்பயன்களை வழுங்குவதாக அறியவில் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு பயிற்சி போலவோ அல்லது ஒரு அன்றாட நடைமுறைப் போலவோ தோன்றலாம். ஆனால் காலப்போக்கில் தியானத்தின் ஆழத்தை உணரத் தொடங்கும்போது, தியானம், நாம் செய்வது அல்ல; நாம் வாழும் முறையாக மாறுகிறது. தியானம் ஒரு பயிற்சி அல்ல அது நம் உண்மையான இயல்பு என்பதைப் புரிந்துகொள்கிறோம். மேம்பட்ட தகவல்தொடர்பு, படைப்பாற்றல், மனத்தெளிவு, புத்துணர்வு தரும் ஆழ்ந்த தூக்கம், அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த அதிர்வுகள் போன்றவை தியானத்தினால் நாம் அனுபவிக்கத் தொடங்கும் சில நன்மைகளாகும்.

4. நம் மனம் வானத்தைப் போன்றது, எண்ணங்கள் மேகங்களைப் போன்றவை; அவை நகர்ந்து கொண்டே இருக்கும்!

ஒரு நாளில் நம் மனதில் பல எண்ணங்கள் எழுகின்றன, ஆனால் அவற்றில் எத்தனை எண்ணங்களை உண்மையில் நாம் நினைவில் கொள்கிறோம்? பெரும்பாலும், 5-10 நிமிடம் முன்னால் நாம் என்ன எண்ணினோம் என்பதுகூட நம் நினைவில் நிற்பதில்லை. எண்ணங்கள் இயற்கையிலேயே தற்காலிகமானவை, நிலையற்றவை; வானத்தில் உள்ள மேகங்களைப் போல அவை வந்துபோய்க்கொண்டே இருக்கின்றன. அவை வந்துபோகட்டும். தியானம் என்பது மனத்தைக் கட்டுப்படுத்துவதோ, எதன் மீதாவது கவனம் செலுத்துவதோ, நம் எண்ணங்கள், உணர்ச்சிகள் அல்லது உணர்வுகளுக்கு தடை விதிப்பதோ அல்ல. மாறாக, அது கவனத்தை எதன் மீதும் செலுத்தாமல், கவனத்தை குவிக்காமல், அத்தருணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு நம் இருப்பில் ஓய்வெடுக்கும் ஒரு நிலை. சுறுசுறுப்பான, சதா எதையாவது நினைத்துக்கொண்டேயிருக்கும் நம் மனதைத் தாண்டி, எண்ணங்களை கைவிட்டு நாம் ஓய்வெடுக்கும்போது, நம்முள் இருக்கும் முழுமையான அமைதியை நம்மால் உணரமுடியும். காற்று வீசுவது நின்றவுடன் கொந்தளிக்கும் கடல் எப்படி அமைதி அடைகிறதோ, அப்படியேதான் நம் மனமும் அமைதியடைந்து நம்முள் உறையும் சாந்தியை கண்டறிகிறது.

உங்கள் மனதை தெளிவுபடுத்த வழிகாட்டப்பட்ட தியானம்

5. நீங்கள் தியானம் செய்யவேண்டியதில்லை, தியானம் தானாகவே நடக்கிறது!

தியானம் என்பது ஒன்றுமே செய்யாமலிருக்கும் நுண்ணிய கலை. தியானம் செய்ய அமரும்போது, இந்தப் பின்னணியை மனதில் கொண்டு அமரவேண்டும் – நான் ஒன்றுமில்லை! நான் செய்யவேண்டியது ஒன்றுமில்லை, எனக்கு எதுவும் வேண்டாம்! இப்போது, நான் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறேன், வரையறுக்கப்பட்ட அடையாளங்களையும், நான் நடிக்கும் எல்லா கதாபாத்திரங்களையும் துறந்து, ஒன்றுமில்லாமல் ஆகிறேன். உடல், மன, உணர்வு, அறிவு மற்றும் ஆன்மா சார்ந்த அனைத்து செயல்களையும் நிறுத்தி ஒன்றுமே செய்யாமல், என்னுடைய இருப்பில் ஓய்வெடுக்கிறேன். எதையும் விரும்பவில்லை, எதையும் எதிர்பார்க்கவில்லை – மன அமைதியைக் கூட! எதையும் தடை செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் விருப்பத்தை கைவிட்டு, திறந்த மனதோடு, எந்த அனுபவம் ஏற்பட்டாலும், எனக்கு ஏற்படும் எந்த அனுபவமும் அத்தருணத்தில் எனக்கு மிகச் சரியானது என்ற நம்பிக்கையோடு, அதை ஏற்றுக்கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒன்றுமற்ற, திறந்த நிலை நமக்கு வாய்க்கும்போது, தியானம் இயல்பாகவே நடக்கத் தொடங்குகிறது.

6. கெட்ட நேரத்திலும், நல்ல நேரத்திலும் சுவாசமே நமது உற்ற தோழர்

நமது சுவாசம், நமக்கு மிக முக்கியமான பாடங்களை கற்பிக்கிறது. நம் மனதின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் மூச்சில் ஒரு தாளகதி உள்ளது. அதேபோல், நாம் சுவாசிக்கும் விதம் நம் உணர்வுகளின் மீது தாக்கம் செலுத்துகிறது, அதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மனதை நேரடியாகக் கையாள்வது கடினம்தான், ஆனால் அதை சுவாசத்தின் மூலம் எளிதாகச் செய்யமுடியும். உங்கள் நண்பர் கோபமாகவோ, பதட்டமாகவோ, நிலையிழந்தோ இருக்கும்போது எத்தனை முறை நீங்கள் அவரை ஆழ்ந்த மூச்சு எடுத்து, அமைதியடையச் சொல்லியிருக்கிறீர்கள்? மென்மையான மூச்சு, மாற்று நாசித்துவார பிராணாயாமம் ஆகியவை மனதை அமைதிப்படுத்த உதவுகின்றன. நம்முடைய சுயம், ஆன்மா, மற்றும் விழிப்புணர்வின் ஆழத்தோடு தொடர்புகொள்ள நம் மூச்சின் தாளகதி நமக்கு உதவுகிறது.

7. பல் துலக்குவது பல் சுகாதாரம், தியானம் செய்வது மன சுகாதாரம்!

தினமும் காலையில் பல் துலக்குவது ஒரு சாதாரண செயலாக இருந்தாலும் அது மிக முக்கியமான செயலாகும். ஒரு நாள்கூட நாம் அதை தவற விட விரும்புவதில்லை. அதே போல தியானமும், மனதில் உள்ள பதிவுகளையெல்லாம் நீக்கி, குப்பைகளை அகற்றி, மனநலத்தைப் பேணுகிறது. பல் துலக்கும்போது வெளியேறும் அழுக்கை நாம் எப்படி ஆராய்வதில்லையோ, அப்படியே தியானத்தில் வரும் அனுபவங்களையும் ஆராயக்கூடாது. பதிவுக் குப்பைகள் பல விதங்களில் வெளியேறக்கூடும், அதைக் குறித்த விவாதங்களோ, பகுப்பாய்வோ தேவையில்லை. நாள்தோறும் பல்துலக்கும் வழக்கத்தைப் போலவே தியானம் செய்யும் வழக்கத்தையும் நாள்தோறும் தவறாது பின்பற்றுவது மட்டுமே முக்கியம்.

8. உங்கள் பயிற்சியை ஒரு உயர்ந்த நோக்கத்தோடு இணைத்துக் கொள்ளுங்கள்

நாம் தியானம் செய்யும்போது, நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நன்மை அடைகிறார்கள். நீங்கள் அமைதியாக இருப்பதன் மூலம், இந்த உலகத்தில் மேலும் அமைதி நிலவ வழிவகுக்கிறீர்கள். அகத்தின் அமைதியும் வெளிப்புற அமைதியும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. நான் தவறாமல் பெரிய குழுக்களோடு தியானம் மேற்கொள்கிறேன். ஒரே நோக்கத்துடன் ஒரு பெரிய குழுவாக தியானம் செய்யும்போது, அந்த நோக்கத்தை நிஜமாக்க நீங்களும் உதவுகிறீர்கள்! 2016 ல் புது தில்லியில் நடைப்பெற்ற உலக கலாச்சார விழாவில் 155 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3.5 மில்லியன் மக்களோடு சேர்ந்து தியானம் செய்தது, என் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம்.

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *