நல்வாழ்வு



நல்வாழ்வுக்கான வியக்கதகும் ரகசியங்களை அறியலாம்!

விழிப்புணர்வின்றி நல்வாழ்வு இல்லை. எனவே, விழிப்புணர்வு நல்வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதேபோல், விழிப்புணர்வு இருந்தாலும், அதை பயன்படுத்தவில்லை என்றால் அது பயனற்றதே. மேலும், சில நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடிப்பதும் நல்வாழ்வை உறுதிபடுத்துகிறது. அதோடுகூட, கவனத்தை குவித்தல், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை உற்று கவனித்தல், அவற்றின் வடிவங்களை கூர்ந்து நோக்குதல் ஆகியவையும் இன்றியமையாதவை.

நீங்கள் முன்வைக்கும் சிந்தனைகள், புரிந்துகொள்ளுவதில் ஏற்படும் சிரமம் மற்றும் மனநிலைகள் ஆகியவை காலந்தோறும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் உங்கள் நல்வாழ்வில் பங்களிக்கின்றன. உங்கள் அணுகுமுறை என்ன? உங்களை சுற்றி நடப்பதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? எப்படி மீண்டு வருகிறீர்கள்? எவ்வளவு முற்போக்கு சிந்தனை கொண்டிருக்கிறீர்கள்? இவை அனைத்தும் நல்வாழ்வு மற்றும் ஆன்மீக சக்தியின் அங்கங்களே. இன்று உலக சுகாதார நிறுவனம் (WHO) கூட ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. ஆன்மீகம் மனிதனுக்கு திருப்தி, நலவாழ்வு, இணைப்பு உணர்வு மற்றும் தன்னம்பிக்கை அளிக்கிறது என்று அது கூறுகிறது. அக அழகே புற அழகில் பிரதிபலிக்கிறது. அழகு பல பரிமாணங்களைக் கொண்டது- ஒன்று புற அழகு, மற்றொன்று அக அழகு. அக அழகே புற அழகில் பரிமளிக்கிறது.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்

வெல்னஸ் ப்ரொக்ராம்

ஆயுர்வேதம் மற்றும் நவீன அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய முழுமையான ஆரோக்கியப் பயிற்சி.

யோகா, தியான வகுப்புகள்

வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள்