நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியின் ஆச்சரியமான ரகசியங்களை அறிந்துகொள்ளுங்கள்!

சிலருடைய உடல் அமைப்பிலேயே அனைத்து விதமான தண்ணீரையும், வானிலையையும், அனைத்து நிலைகளையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையதாக இருக்கும். குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி, பல நேரங்களில் பங்களாக்களில் வாழும் மக்களை விட அதிகமாக இருக்கும்.

நீங்கள் வடிகட்டப்படாத தண்ணீர் குடித்தால், சில நாட்கள் உடல்நலக் குறைவு ஏற்படலாம். ஆனால் அவர்கள் அதையே எளிதாக சமாளித்து விடுகிறார்கள். அவர்கள் உடல் மிகவும் வலிமையானது. நமது உடல் பல்வேறு காலநிலைகள், வெப்பநிலைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் திறன் உடையது. அது நெகிழ்வுத்தன்மை பொருந்தியது.

உணவில் மிகுந்த தேர்வு காட்டும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி மெதுவாகக் குறைந்து கொண்டே போகும். நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு சவால்கள் வரும்போதுதான் அது செயல் புரிவதற்கான உந்துதல் பெறுகிறது. அதனால், அவ்வப்போது அதை சற்று சவாலுக்கு உள்ளாக்குவது நல்லது. அப்போது உடலின் தற்காப்புத் திறன் இயற்கையாகவே மேம்படும். இல்லையெனில், மிகுந்த தேர்வு மனப்பான்மை விரக்தி மற்றும் கோபத்தை உருவாக்கும். உங்கள் உடல் அமைப்பு நெகிழ்வுதன்மை கொண்டதாகவும், தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவு உடலுக்கு பெரிதாக இந்தத் தீங்கையும் விளைவிக்காது என்று மனதில் உறுதியாக நம்பும்போதுதான் இது நிகழக்கூடும். அதனால் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட வேண்டும் என்று பொருள் இல்லை. ஆனால் உணவு மற்றும் அதன் தரம் குறித்து அளவுக்கு மீறிய தேர்வு காட்டாமல், நடுநிலையான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

யோகா, தியான வகுப்புகள்

வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள்