தலையிலிருந்து தலையுடனான தொடர்பு எண்ணங்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் அமைகிறது. உள்ளத்திலிருந்து உள்ளத்திற்கான தொடர்பு உணர்ச்சிகளை உள்ளடக்கியது. ஆத்மாவிலிருந்து ஆத்மாவுடனான தொடர்பே அமைதி ஆகும்.
– குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்
நாம் முதல் சுவாசம் எடுத்த உடனேயே பிறருடன் தொடர்பு கொள்ளத் தொடங்குகிறோம். நமது முதல் அழுகை என்பதே நமக்கும், தாய் மற்றும் உலகத்திற்கும் உள்ள ஒரு தகவல் தொடர்பாகும். மேலும் நமது கடைசி மூச்சு வரை பிறருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். இருப்பினும் நல்ல தகவல் தொடர்பு என்பது வெறும் வார்த்தைகளை விட உயர்ந்ததாக, சிறந்த கலையாகத் திகழ்கிறது. பயனுள்ள தகவல் தொடர்பு என்பது பெரிய பரிமாணங்களைக் கொண்டு விளங்குகிறது. ஒருவருக்கொருவர் பாசமாக தொடர்பு கொள்ளும் திறனானது மதிப்பு மிக்கதாகவும் பாராட்டப்படக் கூடியதாகவும் உள்ளது. நீங்கள் எப்பொழுதும் உணர்வு மற்றும் விவேகம் உள்ளவர்களாக இருங்கள்.
தகவல் தொடர்பு என்பது ஒரு உரையாடல். அது ஒரு தனித்த பேச்சு அல்ல.
நாம் தொடர்பு கொள்ளும் மனிதர் அல்லது மனிதர்களின் கண்ணோட்டத்தை அல்லது கருத்தை நாம் மதிக்க வேண்டும். தகவல் தொடர்பு என்பது உணர்வுள்ள மற்றும் விவேகம் உள்ளதாக இருக்கும் நேரத்தில் பிறக்கிற ஒரு சிறந்த கலையாகும். சில நபர்கள் மிகவும் உணரும் திறன் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் பேச்சு தெளிவற்றதாக உள்ளது. மேலும் வெளிப்படுத்தும் திறன் அற்றதாகவும் இருக்கிறது.
உங்களின் மனநிலை மிகவும் முக்கியமானது. ஒருவர் மீது நீங்கள் கோபப்படுவதின் மூலம் அவர்களை மேம்படுத்தி விட முடியாது. உங்கள் மன அமைதியை நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள்.
நீங்கள் கோபமாக இருக்கும்போது நீங்கள் சரியானதைச் சொன்னாலும் கூட யாரும் கேட்க விரும்புவதில்லை.
– குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்
நீங்கள் ஒருவரைச் சந்திக்கும்போது பெரும்பாலும் தலை முதல் தலைவரை தொடர்பு கொள்கிறீர்கள். பெரும்பாலும் நீங்கள் இயற்கையுடன் இருப்பீர்கள் என்றால் பாடத் தொடங்கி விடுவீர்கள். உங்கள் இதயத்தில் இருந்து நீங்கள் இயற்கையுடன் தொடர்பு கொள்கிறீர்கள். பெரும்பாலும் மனிதர்களோடு சேர்ந்திருக்கும் போது நீங்கள் பேசிக் கொண்டும் உளறிக் கொண்டும் உள்ளீர்கள். ஏனெனில் தகவல் தொடர்பு தலையின் மட்டத்திலேயே வைத்துக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் இயற்கையுடன் இருக்கும் போது முணுமுணுக்கவும் பாடவும் தொடங்கி விடுவீர்கள். ஏனெனில் இத்தொடர்பு இதயத்தின் மூலமே வருகிறது. நீங்கள் குருவுடன் இருக்கும் பொழுது மனம் வெறுமையாகி கேட்க வேண்டிய கேள்விகளையே மறந்து விடுகிறீர்கள். அப்போது தகவல் தொடர்பு ஆன்மாவின் மூலம் அமைதியாக வருகிறது.
தகவல் தொடர்பில் விழிப்புணர்வின் பங்கு
நீங்கள் மனிதர்களைச் சந்திக்கும் பொழுது அறிவு நிலையில் இருப்பதால், மிக அரிதாகவே பாடுகிறீர்கள். உங்களின் நான் எனும் அகந்தை உங்களைப் பாட விடாமல் தடுக்கிறது. பலர் மக்களுடன் சேர்ந்து ஆடுவதற்கு தயாராக இருக்கும் மன உணர்வோடு இருப்பது இல்லை. நீங்கள் மக்களோடு சேர்ந்து பாடும் பொழுது அறிவு நிலையில் இருந்து இறங்கி உணர்ச்சி நிலையை அடைகிறீர்கள். சிலர் இசையை மட்டும் காதால் கேட்க நினைக்கிறார்கள். இன்னும் சிலர் தாங்கள் தனியாக இருந்தால் மட்டும் பாட நினைக்கிறார்கள். இதுதான் வசதியான நிலை எனவும் நினைக்கிறார்கள். சிலர் கவனத்தை ஈர்க்கவும் அல்லது மற்றவர்களை மயக்கவும் பாடுகிறார்கள். மற்றவர்கள் முதலில் பாடல் பாட அவர்களோடு சேர்ந்து பாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். எல்லாப் பாடல்களும் அவர்களின் அகங்காரத்தில் இருந்து உதிப்பவையாகவே அமைந்துள்ளன.
தலைக்கு தலை தொடர்பு கொள்ளும் போது நீங்கள் பேசுகிறீர்கள். இதயத்திற்கு இதயம் தொடர்பு கொள்ளும் போது நீங்கள் பாடுகிறீர்கள். ஆன்மாவுக்கு ஆன்மா தொடர்பு கொள்ளும் போது மட்டும் அங்கு அமைதி நிலவுகிறது.
– குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்
நான் எனும் அகங்காரம் தரும் தடைகளை உடைப்பதன் மூலமாகத் தான் தகவல் தொடர்பு இடைவெளிகள் குறையும்
பக்திப் பாடல்கள் (பஜன்) குழுவாகப் பாடும் பொழுது நமது இருப்பின் ஆழமான மட்டத்திலிருந்து ஒரு பகிர்வு ஏற்படுகிறது. பஜன் என்றாலே பகிர்வு என்பது பொருள். நீங்கள் மக்களுடன் பாட முடிந்தால் உங்கள் அகந்தையானது சிதைந்து விடும். குழந்தைகளைக் கவனியுங்கள். அவர்களுக்கு அகந்தை என்று எதுவும் இல்லை. அவர்களால் மக்களோடு இணைந்து பாட முடியும். நீங்கள் அன்னியருடன் இணைந்து பாடும் பொழுது உங்கள் அகங்காரத்தில் இருந்து விடுபட வேண்டும். அகந்தை என்ற குணமானது ஒரு அன்னியருடன் பாட உங்களை அனுமதிக்காது. தலையின் நிலை அகங்காரத்திற்கு உரியது. இதய நிலை அகங்காரத்தை உடைத்து எறிந்து விடுகிறது. ஆன்மா நிலை அகங்காரத்தைக் கரைத்து விடுகிறது. அனைத்து விதமான தகவல் தொடர்பின் இடைவெளிகளும் அகங்காரத்தில் ஏற்படுகின்றன.
திறம்பட தொடர்பு கொள்ளுதல் என்பது ஒரு உருமாறும் திறன் ஆகும். இது நமது உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி மட்டுமல்லாது ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பெரிதும் மேம்படுத்துகின்றன. குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் அவர்களால் நிறுவப்பட்ட வாழும் கலை, தகவல் தொடர்பு கலையை ஆராயவும் இன்றியமையாத திறனை மேம்படுத்தவும் நடைமுறைக் கருவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஏராளமான திட்டங்கள் மற்றும் போதனைகளை வழங்கி வருகிறது.
‘சுதர்சன் கிரியா’ என்ற தனித்துவமான நுட்பத்தை பயன்படுத்தி, நீங்கள் ஆனந்த அனுபவம் மற்றும் சகஜ சமாதி தியான யோகா பயிற்சியின் மூலம் விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளலாம். நுண்ணறிவை வளர்த்துக் கொள்ளவும், மற்றவருடன் ஒரு ஆழமான தொடர்பு ஏற்படுத்தவும் இந்த நுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன. இந்தத் திட்டங்கள் யோகா தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் போன்ற நடைமுறைகளை உள்ளடக்கிய தகவல் தொடர்பான முழுமையான அணுகுமுறையை வழங்குகின்றன. அவை உங்கள் உள் அமைதியைக் கண்டறியவும், கேட்கும் திறன்களை மேம்படுத்தவும் இதயத்தில் இருந்து தொடர்பு கொள்ளவும் உதவி புரிகின்றன.











