பயமானது சில சமயங்களில் நேர்மையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் ஒரு எதிர்மறையான உணர்வாகும். பயம் வாழ்க்கையைப் பாதுகாக்கும் ஒரு பழமையான உள்ளுணர்வாகும். பயம் உணவில் உப்பு போன்று இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதிகப்படியான பயம் நம்மை ஒரு கூண்டில் அடைத்து விடும்.
பயத்தை அகற்ற முயற்சிக்க வேண்டாம். தியானம் செய்யுங்கள். நீங்கள் யாருமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள் அல்லது நீங்கள் தனித்துவமான ஒருவருக்குச் சொந்தமானவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பயம் என்பது அதன் எதிர்மறை உணர்வான அன்பை நிறைவு செய்வது. பயம் அன்பிற்கு எதிர்மறையானது. பயமோ சிதைந்த அன்பாக கருதப்படுகிறது. அன்பினால் விளக்கப்பட வேண்டியவை பயத்தினாலும் விளக்கப்படலாம். உதாரணமாக ஒரு குழந்தை தன் தாயிடம் ஒட்டிக் கொண்டிருப்பது அன்பு அல்லது பயம் காரணமாக இருக்கலாம்.
பயம் என்பதே நிகழ்காலத்தில் எதிர்காலமதில் பிரதிபலிக்கும் கடந்த கால பகுதியின் ஒரு பதிவாகும். மக்கள் பயத்தை மறுக்கும்போது, அவர்கள் சுயநலவாதிகளாக மாறுகிறார்கள். அவர்கள் பயத்தை அடையாளம் கண்டு ஏற்றுக்கொண்டால் அவர்கள் அதையும் தாண்டி விடுகிறார்கள் .மேலும், அதிலிருந்து விடுபட்டும் விடுகிறார்கள்.
முற்றிலும் பயம் இல்லாதது முழுமையான குழப்பத்திலோ அல்லது முழுமையான ஒழுங்கிலோ மட்டுமே சாத்தியப்படும். ஒரு துறவிக்கும் பயம் இல்லை. ஒரு முட்டாளுக்கும் பயம் இல்லை. ஆனால் இடைப்பட்ட எல்லோரிடத்திலும் பயம் இருக்கிறது. உலகில் ஒழுங்கைப் பாதுகாப்பதற்குப் பயம் அவசியம் தேவைப்படுகிறது.
பயம் என்றால் என்ன?
ஒவ்வொரு விதையையும் பாதுகாப்பதற்கு ஒரு சவ்வோ அல்லது ஒரு ஓடோ அமைந்துள்ளது. நீங்கள் விதையை ஊற வைக்கும் பொழுது அது உடைந்து முளை வெளியே வருகிறது. அதுபோல பயம் என்பது வாழ்க்கையைப் பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாக உள்ளது. அதிலிருந்து அதே நேரத்தில் வெளியே வர ஒரு வழிமுறையும் உள்ளது. ஒரு குழந்தை சுதந்திரமாக வெளியே வரும் பொழுது பயம் ஏற்படுகிறது. மனம் அல்லது அறிவு முதிர்ச்சி அடையும் பொழுது பயம் மறைந்து விடுகிறது. முதிர்ந்த புத்திக்கு பயம் கிடையாது.
பயம் எதனுடனும் இணைக்கப்படலாம். உங்கள் கௌரவத்தையும் வாழ்க்கையையும் இழப்பதோடு இணைக்கப்படலாம்; அல்லது, நோய், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் அல்லது பெற்றோரைப் பற்றிய பயமாகவோ அல்லது பணத்தை இழப்பதாகவோ இருக்கலாம் – இவை அனைத்தும் சாத்தியமானவை.
பயத்தை நீங்கள் வெவ்வேறு விஷயங்களில் தொங்க விடுகிறீர்கள். அவை பயத்தைத் தொங்கவிடுவதற்கான கொக்கிகள் மட்டுமே. பயத்திற்கு எப்படி பதில் அளிப்பது? அறிவின் மூலமாகவே பயத்திற்கு பதில் அளிக்க முடியும். பயத்தின் இயல்பை நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அன்பு இருக்கும்போது அதே அன்பு தலைகீழாக மாறி பயமாகி விடுகிறது. வெறுப்பும் அன்பின் மறு வடிவம் தான். அன்பு தன்னைத்தானே சிதைத்து மற்ற எல்லா உணர்ச்சிகளையும் உருவாக்குகிறது. அர்ப்பணிப்பு, நம்பிக்கை ,தியானம் மற்றும் பிரார்த்தனை ஆகியவை பயத்தை அன்பாக மாற்றும் வழிகள் ஆகும்.
நீங்கள் பயத்தை அனுபவிக்கும் போது அந்த அளவிற்கு அன்பு செலுத்த திறமை உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் காதலில் விழுந்தாலும் அல்லது அன்பில் உயர்ந்தாலும் உங்கள் பயம் என்றும் மறைந்துவிடும். பயம் என்பதே அன்பின் மற்றொரு வழியேயன்றி வேறு எதுவும் இல்லை.
பயம் அதன் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது
மரண பயம் உயிரைப் பாதுகாக்கிறது. தவறான பயம் சரியானதை நிலைநாட்டுகிறது. நோய் பற்றிய பயம் சுகாதாரமாக இருக்க உதவுகிறது. துன்பம் பற்றிய பயம் உங்களை நேர்மையாக இருக்க உதவுகிறது. ஒரு குழந்தைக்கு சிறிய பயம் இருப்பதால் நடக்கும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறது. விஷயங்களை நகர்த்துவதற்கு ஒரு சிட்டிகை பயம் அவசியப்படுகிறது.
இயற்கை அனைத்து உயிரினங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவு பயத்தை உள்ளமைத்துள்ளது. இந்த பயம் தான் வாழ்க்கை தன்னைக் காக்கவும், பாதுகாக்கவும் உதவுகிறது. உணவில் உப்பு தேவையானதைப்போல, வாழ்க்கையில் சிறிதளவு பயம் நம்மை நேர்மையாக வைத்திருக்கிறது. ஒருவரை புண்படுத்துவது பற்றிய பயமானது உங்களை அதிக உணர்வு உள்ளவர்களாக மாற்றுகிறது. தோல்வி பயம் உங்களை மேலும் கூர்மையாகவும் துடிப்பாகவும் ஆக்குகிறது. பயம் நம்மை கவனக்குறைவிலிருந்து கவனமாக இருக்க வழிநடத்துகிறது. உங்களை உணர்ச்சியற்ற நிலையில் இருந்து உணர்திறன் மிக்க நிலைக்கு நகர்த்துகிறது. மந்த நிலையிலிருந்து விழிப்புணர்வு உள்ளவராக மாற்றுகிறது.
இயற்கை அனைத்து உயிரினங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளார்ந்த பயத்தை வைத்துள்ளது. இந்த பயம் வாழ்க்கையை தற்காத்துக் கொள்ளவும் தன்னைப் பாதுகாக்கவும் செய்கிறது.
– குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்
முழுமையான பயமின்மை அழிவுகளை ஏற்படுத்தும். ஒரு சிதைந்த அகங்காரம் உடையவருக்கு பயம் தெரியாது. விரிவடைந்த உணர்ச்சி உடையவர்க்கும் பயம் தெரியாது. அகங்காரம் பயத்தை நிராகரித்து சீர் குலைத்து விடும். ஞானம் உள்ளவர்கள் பயத்தை ஒப்புக்கொண்டு தெய்வீகத்தில் அடைக்கலம் புகுவார்கள்.
நீங்கள் அன்பில் இருக்கும் போதும் சரணடைந்து இருக்கும் பொழுதும் பயம் இல்லாமல் இருப்பீர்கள். அகங்காரத்திற்கும் பயமில்லை. ஆனால் இந்த இரண்டு அச்சமற்ற நிலைகளுக்கு உள்ள வேறுபாடு சொர்க்கத்திற்கும் பூமிக்கும் உள்ள வேறுபாடு போன்றது. பயம் உங்களை நீதியுடன் வைத்திருக்க உதவுகிறது. பயம் உங்களை சரணடைய வைத்தலுக்கு நெருக்கமாக கொண்டு சேர்க்கிறது. பயம் உங்களை அழிவிலிருந்து தடுப்பதாக உள்ளது. பயம் காரணமாகவே பூமியில் அமைதியும் சட்டமும் பராமரிக்கப்படுகின்றன. புதிதாக பிறந்த ஒரு குழந்தைக்கு பயம் தெரியாது. அக்குழந்தை முற்றிலும் தன் தாயை நம்பி இருக்கிறது. ஒரு குழந்தையோ அல்லது பறவையோ அல்லது பூனைக்குட்டியோ சுதந்திரமாக பயணத்தைத் தொடங்கும் பொழுது பயம் அவர்களை துரத்துகிறது. பயமானது அவர்களைத் தங்கள் தாயிடம் திரும்ப ஓட வைக்கிறது. இயற்கையாகவே இது வாழ்வில் நிலைத்திருக்க நம்முள் பதித்திருக்கும் ஒரு இயல்பான அமைப்பு. எனவே, பயத்தின் நோக்கம் என்னவென்றால் – அது உங்களை மீண்டும் மூலத்திற்குக் கொண்டுவருவதாகும்!
நம்மை விழுங்கக்கூடிய பத்து பயங்கள்
- நிராகரிப்பின் பயம்
- கடமை பயம்
- பொறுப்பு பயம்
- இனம் புரியாத
- தோல்வி பயம்
- கைவிடப்படும் பயம்
- உண்மையை எதிர்கொள்ளும் பயம்
- பிரிவு பயம்
- கருத்துகள் மற்றும் அவமானம் பற்றிய பயம்
- போதுமானதாக இல்லை என்ற பயம்
சேவை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் மருந்து
பயத்திற்கு மாற்று மருந்து அன்பும் சேவை மனப்பான்மையும்தான். நீங்கள் ஏதாவது சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது , எதைப் பற்றியும் சிந்திக்க எங்கே நேரம் இருக்கிறது? பயம், வெறுப்பு அல்லது அன்பு என வெளிப்படும் அதே ஆற்றலை அன்பை நோக்கி செலுத்தினால் பயம் அல்லது வெறுப்பு வெளிப்படாது. எனவே, சுயநலமில்லாத சேவையில் ஈடுபட்டு, உங்களை செயல்படச் செய்வது பயத்தை தாண்டிச் செல்ல உதவும்.
பிரிவு பயத்தை கொண்டு வருகிறது .ஒற்றுமை இருந்தால் பயம் இல்லை.
– குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்
நீங்கள் எல்லையற்ற தன்மையுடன் இணைந்து இருக்கிறீர்கள் என்று தெரியாத போது அச்சங்கள் எழுகின்றன. நான் எல்லையற்ற தன்மையின் ஒரு பகுதி என்பதை மறந்து விடும்பொழுது தான் பயம் எழுகிறது.
நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் கடலுடன் இணைந்து உள்ளீர்கள். ஒரு துளி பயப்படுகிறது. ஏனென்றால் அது தனித்து இருப்பதாக நினைக்கிறது. அது கடலுடன் இணைக்கப்படவில்லை. ஆனால் துளி கடலில் இருக்கும் போது அதற்கு எந்த பயமுமில்லை. அது கடலில் இருப்பதால் ஒரு போதும் அணைக்கப்படாது. பிரிவு பயத்தைக் கொண்டுவருகிறது. ஒற்றுமை இருந்தால் பயம் இல்லை. அப்படியானால் பயத்தை எப்படி வெல்வது? ஒற்றுமையினை நினைவில் கொள்வதின் மூலம்தான் பயத்தை வெல்ல முடியும்.










