நீங்கள் கருவுற்றிருக்கிறீர்களா! வாழ்த்துக்கள்! உற்சாகம், அச்சம், மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தல், போன்றவற்றை ஒரே நேரத்தில் உணர்வீர்கள். என்ன உணர்கிறீர்கள் என்பதைக் குறிப்பாக சொல்வது கடினம் அல்லவா? குழந்தை உதைப்பது மகிழ்வளிக்கிறது, ஆனால் தசைப்பிடிப்புகள் பலவீனப்படுத்துகின்றன. ஒரு நொடியில் உற்சாகமாகவும், மறு நொடியில் உணர்ச்சி மேலீட்டால் மூழ்கடிக்கப்படுவது போலவும் உணர்வீர்கள். ஓர் உயிர் உங்கள் உள்ளே வளரும் அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. உயிரணுக்களின் மாற்றத்தால் மனநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உணர்வீர்கள். இதனால்தான் கருவுற்ற காலத்தில் யோகா உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்ககூடும்.
கர்ப்பிணி பெண்களுக்கு யோகா எப்படி உதவுகிறது
தாய்மை அடையப்போகிறவர்களுக்கு யோகா முழுமையான ஆரோக்கிய பலன்களை அளிக்கிறது:
- கர்ப்பகாலத்தில் யோகா உடலை வளையும் தன்மையுடன் வைத்திருக்கிறது. இடுப்புப் பகுதியை தளர்வாக்கி, கருப்பை வாயைச் சுற்றி அழுத்தத்தை நீக்குகிறது. இது கருவுற்ற பெண்களை பிரசவ வலிக்கும், பிரசவத்திற்கும் தயார் செய்கிறது.
- யோகாவும், பிராணாயாமமும் ஆழமாக சுவாசிக்கவும், விழிப்புணர்வுடன் ஓய்வெடுக்கவும் பயிற்சி அளித்து பிரசவ வலியையும், பிரசவத்தையும் எதிர்கொள்ள உங்களுக்கு உதவுகின்றன.
- மசக்கை, கால்களில் தசைப்பிடிப்பு, கணுக்கால் வீக்கம், மலச்சிக்கல் போன்ற பொதுவான கர்ப்பகால அறிகுறிகளின் விளைவுகளை தணிப்பதற்கு கர்ப்பகால யோகா உதவுகிறது.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு, பிரசவத்திற்குப் பிறகு விரைவாக உடல்நலம் தேறுவதற்கும் யோகாசனங்கள் உதவுகின்றன.
கர்ப்பிணி பெண்களுக்கான யோகா
கர்ப்ப காலத்தில் யோகப்பயிற்சி அவசியமானது. கீழ்காணும் யோகாசனங்கள் கருவுற்ற பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களான ஈர்ப்பு மைய மாற்றம் மற்றும் கீழ் முதுகில் வலி ஆகியவற்றை கையாள உதவுகின்றன.
மார்ஜரி ஆசனம்

- கழுத்து மற்றும் தோள்களை இழுத்து, அழுத்தம் மற்றும் பிடிப்பை தளர்த்துகிறது.
- முதுகெலும்பை நெகிழ்வாக வைத்திருக்கிறது. இது கரு வளர வளர முதுகு கூடுதல் எடையை தாங்க வேண்டிய நிலையில் இருப்பதால் மிக முக்கியமானது.
- வயிற்றுப் பகுதியை வலுப்படுத்துகிறது.
- ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இனப்பெருக்க உறுப்புகள் நன்றாக ஊட்டச்சத்து பெறுவதை உறுதி செய்கிறது.
கோணாசனம் – I

- முதுகெலும்பை நெகிழ்வாக வைக்கிறது.
- உடலின் இருபுறங்களுக்கும் பயிற்சி அளிக்கிறது.
- கர்ப்ப காலத்தின் பொதுவான அறிகுறியான மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது.
கோணாசனம் – II

- கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளை நீட்டி வலுப்படுத்துகிறது.
- முதுகெலும்பை நீட்டி உடற்பயிற்சியளிக்கிறது.
வீரபத்ராசனம்

- உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது.
- கைகள், கால்கள் மற்றும் கீழ்பகுதி முதுகுத்தசைகளை வலுப்படுத்துகிறது.
- உடல் வலிமையை அதிகரிக்கிறது.
திரிகோணாசனம்

- உடல் மற்றும் மனத்தின் சமநிலையை பேணுகிறது. கருவுற்ற பெண்களின் ஈர்ப்பு மையம் மாறுவதால் இது அவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது.
- இடுப்பை நீட்டி விரிவடையச் செய்கிறது; இது பிரசவத்தின்போது மிகவும் உதவியாக இருக்கும்.
- முதுகு வலி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
விபரீத கரணி

- முதுகு வலிக்கு நிவாரணமளிக்கிறது.
- இடுப்புப் பகுதிக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
- கர்ப்பகால அறிகுறியான கணுக்கால் வீக்கம் மற்றும் சுருள் சிறை (Varicose) நாளங்கள் தணிக்கிறது.
பத்தகோணாசனம்

- இடுப்பிலும், தொடைகளுக்கிடையேயான பகுதிகளிலும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
- தொடை மற்றும் கால்முட்டியை நீட்டி, வலி நிவாரணம் அளிக்கிறது.
- சோர்வைத் தணிக்கிறது.
- கர்ப்பகாலத்தின் இறுதிவரை பயிற்சி செய்தால் சிக்கலற்ற பிரவசத்துக்கு உதவுகிறது.
சவாசனம்

- உடலை தளர்வாக்கி, செல்களை சீர் செய்கிறது. கருவுற்ற பெண்கள் மருந்து, மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டியது முக்கியமென்பதால், தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள இது உதவுகிறது.
- அழுத்தத்தை போக்குகிறது.
யோக நித்திரை

- அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கிறது.
- ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
- உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆழ்ந்த ஓய்வை அளிக்கிறது.
கர்ப்பகாலத்தில் பிராணாயாமமும், யோகாசனமும்
கர்ப்பகாலத்தில் கோபம், விரக்தி போன்ற எதிர்மறை உணர்வுகளை பிராணாயாமப் பயிற்சிகள் வெளியேற்றுகின்றன. மன அழுத்தத்தை வெளியேற்றி மனதை அமைதியாகவும், ஒருநிலையாகவும் வைக்க அவை உதவுகின்றன.
பிரமரீ பிராணாயாமம்

- ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது
- தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
நாடி சோதன பிராணாயாமம்

- மனதை அமைதிப்படுத்தி ஓய்வுடன் வைக்கிறது.
- உடல் வெப்பத்தை பராமரிக்கிறது.
- பிராண வாயுவின் விநியோகத்தை மேம்படுத்துவதன் மூலம், கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
யோகாசனங்கள் மற்றும் பிராணாயாமங்களை செய்த பிறகு, சிறிது நேரம் தியானம் செய்யவும். இது உங்களுக்கு ஆழ்ந்த ஓய்வை தரும்.
யோகாசனம் செய்யும்போது கருவுற்ற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
- வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுக்கும் யோகாசனங்களை கர்ப்பத்தின் இறுதி காலகட்டத்தில் தவிர்க்கவும்.
- கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு நின்று கொண்டே செய்யும் யோகாசனங்களைச் செய்யவும். இது கால்களை வலுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கால்களில் தசைப்பிடிப்பைக்கூட இது கட்டுப்படுத்தும்.
- இரண்டாம் மற்றும் மூன்றாம் மூன்று மாத காலகட்டத்தில், சோர்வைத் தடுக்க, ஆசனங்களில் அமர்ந்திருக்கும் நேரத்தை குறைக்கவும். அதற்கு பதிலாக மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் செய்யவும்.
- கர்ப்பத்தின் முக்கியமான காலகட்டமான 10ம் வாரம் முதல் 14ம் வாரம் வரை யோகப்பயிற்சியை தவிர்க்கவும்.
- தலை கீழ் ஆசனங்களைத் தவிர்க்கவும்.
- அதிக சிரமம் இல்லாமல் உங்களால் இயன்ற அளவு எதைச் செய்யமுடிகிறதோ அதை மட்டுமே செய்யவும்.
கர்ப்பகாலத்தில் தவிர்க்கவேண்டிய ஆசனங்கள்
- நௌகாசனம்
- சக்ராசனம்
- அர்த மத்ஸ்யேந்திராசனம்
- புஜங்காசனம்
- விபரீத சலபாசனம்
- ஹலாசனம்
கர்ப்பகாலத்தில் எந்தவொரு யோகப்பயிற்சியையும் செய்வதற்கு முன் ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பரிந்துரைக்கபடுகிறது. பயிற்சிபெற்ற ஆசிரியர் ஒருவரின் மேற்பார்வையிலேயே யோகாசனங்களை கற்றுக்கொண்டு பயிற்சி செய்யவும்.
யோகப்பயிற்சி மனத்தையும் உடலையும் மேம்படுத்த உதவுகிறது என்றாலும், அது மருந்துகளுக்கு மாற்று அல்ல. பயிற்சிபெற்ற யோக ஆசிரியர் ஒருவரிடமிருந்து கற்பதும் அவர் மேற்பார்வையில் பயிற்சி செய்வதும் இன்றியமையாதது. உங்களுக்கு ஏதேனும் மருத்துவப் பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரையும், ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரையும் கலந்தாலோசித்த பின்னரே யோகப்பயிற்சி செய்யவேண்டும்.
கர்ப்பகால யோகா குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
திரிகோணாசனம் (முக்கோண ஆசனம்) விபரீத கரணி (சுவற்றின் மேல் கால்களை சாய்த்தல்) பத்தகோணாசனம் (பட்டாம்பூச்சி ஆசனம்) சவாசனம் ( சாந்தி ஆசனம்) யோக நித்திரை (யோகவயமான உறக்கம்)
கர்ப்பகாலத்தில் பரிந்துரைக்கபடும் மூச்சு பயிற்சிகள் அல்லது
பிராணாயாமங்கள் இவை : பிரமரீ பிராணாயாமம் (தேனீ சுவாசம்), நாடி சோதன பிராணாயாமம் (மாற்று நாசித்துவார சுவாச நுட்பம்)











