நாம் பணிபுரியும் “கார்ப்பரேட்” உலகில் காலம் கடினமாகி வருவதால், பலர்  மன அழுத்தத்தை உணர்கிறார்கள். மன அழுத்தம் நாம் நினைக்கும், உணரும் மற்றும் நடந்துகொள்ளும் விதத்தை பாதிக்கிறது, இதனால் நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் பாதிக்கப்படுகின்றன. மன அழுத்தம் நம்மை ஆட்டுவிக்க அனுமதிப்பதன் விளைவுகள் பேரழிவு மற்றும் சோகத்திற்கு குறைவானவை அல்ல. எனவே மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையின் அதிக பாதிப்பு இல்லாமல் ஒருவர் எவ்வாறு வெற்றி பெற முடியும்? இதைத்தான் இப்போதெல்லாம் எல்லோரும் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு பதில் எளிதாகவும் எளிமையாகவும் இருக்கலாம்.

இது சைக்கிள் ஓட்டுவது போன்றது.

சைக்கிள் ஓட்டுவதன் ரகசியம் என்ன? சமநிலையில் இருப்பதே! இது மையத்தில் நிலை குலையாமல் இருப்பது பற்றியது. வலதுபுறமோ  அல்லது இடதுபுறமோ  சாய்ந்து விழுந்து விடக்கூடாது. சைக்கிள் ஒரு பக்கத்தில் விழப்போகும் நிலையில் செல்லும்போது நீங்கள் அதை சமநிலைக்கு கொண்டு வருகிறீர்கள். நீங்கள் சமநிலையை இழந்தால் விழுவதை உணர்கிறீர்கள். இந்த உணர்வை கண்டு உணருங்கள். அதை மட்டும் புறக்கணிக்க வேண்டாம்; அதை ஏற்றுக்கொண்டு மையத்திற்கு வாருங்கள். வாழ்க்கையின் எந்த அம்சத்திலும் நீங்கள் சமநிலையை இழக்கும் போதெல்லாம், உங்கள் உள் குரலைக் கேட்டு நடு நிலைக்கும், மையத்திற்கும்  வாருங்கள்.

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அவற்றில் எதிலும் பற்றுதலோ அல்லது வெறுப்போ  இல்லாமல் சமநிலைப்படுத்துவதே உண்மையான வெற்றியின் ரகசியம்.

– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

புத்துணர்ச்சி பெறுவதில்  கவனம் செலுத்துங்கள்.

முதலில், வேலைக்கும் புத்துணர்ச்சி பெறுவதற்கும் இடையில் உங்கள் நேரத்தை சமப்படுத்துங்கள். உணவு உட்கொள்ளல், உடற்பயிற்சி, தியானம் மற்றும் தளர்வு பெற  நேரம் ஒதுக்குங்கள். பணியிடத்தில் பிற்பகலில் உணவு மற்றும் தியானம் பரிந்துரைக்கப்படுகிறது. மக்கள் ஒன்றாக உட்கார்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்யும்போதும், ஒன்றாக உணவைப் பகிர்ந்து கொள்ளும்போதும், அவர்கள் புத்துணர்ச்சி பெறுவதை உணர்கிறார்கள். மேலும் காலையில் அவர்கள் கொண்டிருந்த அதே ஆற்றலுடன் நாளின் இரண்டாம் பாதியைத் தொடர முடிகிறது.

கலை உங்களுக்கு சரியானது

இரண்டாவதாக, ஏதாவது ஒரு கலை வடிவத்தில் ஆர்வம் காட்டுங்கள். கார்ப்பரேட் உலகில், தர்க்கரீதியான சிந்தனை, திட்டமிடல், பகுப்பாய்வு போன்ற இடது மூளை செயல்பாடுகளால் நீங்கள் உந்தப்படுகிறீர்கள். எனவே, நீங்கள் இந்த இடது மூளை செயல்பாட்டை வலது மூளை செயல்பாட்டுடன் சமப்படுத்த வேண்டும். ஓவியம், இசை, கவிதை அல்லது வேறு வகையான படைப்பு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் வலது மூளையை செயல்படுத்துகின்றன. மூளையின் இரண்டு அரைக்கோளங்களும் சீரானதாக, சம நிலையில் இருக்கும்போது, நீங்கள் அதிக தெளிவு, படைப்பாற்றல், உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் தளர்வு ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

வாழ்க்கை மற்றும் வேலையை சமநிலைப்படுத்துங்கள்

மூன்றாவதாக, வேலை-வாழ்க்கை இவற்றுக்கிடையில் சமநிலையை ஏற்படுத்துங்கள். உங்கள் உள்குரலைக் கேளுங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தை புறக்கணித்திருந்தால், அது உங்களை பாதிக்கிறது. உங்கள் சமூக அர்ப்பணிப்பை நீங்கள் புறக்கணித்திருந்தால், அது உங்களை பாதிக்கிறது. உங்கள் தொழிலையே, பணியையோ நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்றால், அது உங்களுள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் ஆன்மீக நடைமுறைகளை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்றால், அது உங்களை பாதிக்கிறது. எனவே எங்கே எது உங்களை பாதித்தாலும், மீண்டும் மையத்திற்கு, நடு நிலைக்கு வாருங்கள்.

மன அழுத்தத்தைப் போக்குங்கள்

நான்காவதாக, சில தொண்டுகள் (சேவை செயல்கள்) செய்யுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவியாக இருங்கள். இது மன அழுத்தத்திற்கு சிறந்த மாற்று மருந்து. சமூகத்திற்கு தொண்டு செய்ய வேண்டும். நீங்கள் சில சேவை மற்றும் கருணை செயல்களைச் செய்யும்போது, அது மனப்புத்துணர்ச்சி உணர்வை உடனடியாக கொண்டுவருகிறது.

குறைபாடுகளை ஒப்புக்கொள்ளுங்கள்

கடைசியாக, நேர்த்தியற்றதற்கு, குறைபாடுகளுக்கு இடமளியுங்கள். மற்றவர்களின் குறைபாடுகளையும், உங்கள் சொந்த குறைபாடுகளையும் சிறிது ஏற்றுக்கொள்ளுங்கள். இது உங்களை மிகவும் பொறுமையாக இருக்க உதவுகிறது. இது உங்கள் வீட்டில் உங்கள் குப்பைத் தொட்டியை வைத்திருக்கும் இடம் போன்றது. உங்கள் வீட்டின் மற்ற பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க உங்களுக்கு இது மிகவும் அவசியம்.

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *