ஈர்ப்பு விசையை பொய்க்க செய்யும் குட்டிகரணங்களுக்கும் (ஃப்லிப்ஸ்), சுழற்சிகளுக்கும் (ட்விஸ்ட்ஸ்) பெயர் போனவர் சிமோன் பைல்ஸ் – தரையிலும், பேலன்ஸிங்க் பீம் எனப்படும் அந்தரத்தில் நாட்டப்படும் கழியின் மீதும், கம்பிகளின் மேலும் செய்யும் சாகசங்களுக்காக இவர் நான்கு முறை ஒலிம்பிக் தங்கத்தை வென்றுள்ளார். அதற்கும் மேலாக, டோக்கியோ ஒலிம்பிக்கில், மனநலம் மற்றும் ஒலிம்பிக்கிற்கு அவர் ஆற்றியப் பங்கு போற்றத்தக்கது. இது விளையாட்டுத் துறையில் அதிகம் பேசப்படாத ஆனால் முக்கியமான ஒரு விஷயமான, விளையாட்டின் உயர் மட்டங்களில் போட்டியிடும் பொழுது ஒருவரை தாக்கும் மனஅழுத்தம் மற்றும் விளையாட்டு வீரர்களின் மனநலனின் மீது அதன் ஒட்டுமொத்த தாக்கத்தின்  மீது கவனத்தைத் திருப்பியுள்ளது. நம் அன்பிற்குரிய விளையாட்டு வீரர்களின் மனநலனைப் பாதுக்காக்க, ஆரோக்கியமான தீர்வுகளைக் கண்டறிய முடியும் என்பதே இதன் பொருள். விளையாட்டு வீரர்களும் மனிதர்கள்தானே!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முன்னணி விளையாட்டு வீரர்களுடன் உரையாடினார். விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பல மனப்போராட்டங்கள் குறித்து பேசினார். இதன் மூலம் போர்குணம் கொண்ட இளம் விளையாட்டு வீரர்களுக்கு பல விஷயங்களை தெளிவு படுத்தி, அவர்களுக்கு உந்துதலும், ஊக்குவிப்பும் அளித்தார். இதில் ஒரு அடிப்படையான கேள்வி என்னவென்றால்: விளையாட்டும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரணானவையா?

“உடற்பயிற்சிக் கூடத்தில் (ஜிம்மில்) பயிற்சி செய்யும்போது, நீங்கள் உங்கள் அனைத்து தசைகளையும் தளர்வாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால், தசைகளில் வளர்ச்சி இருக்காது, மேலும் உங்கள் நரம்புகளில் இறுக்கம் ஏற்படும். உடலுக்கு பயிற்சி தேவைப்படுகிறது, ஆனால் மனதிற்கோ தளர்வுத் தேவைப்படுகிறது. உடலுக்கும், மனதிற்கும் பயிற்சி மற்றும் தளர்வு இரண்டின் சேர்க்கை தேவையாக இருக்கிறது. ஆகவே, விளையாட்டும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று துணை நிற்கும் தன்மையுடையவை.”

விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் பிற மனநலப் பிரச்சினைகளுக்கும் இந்த விவேகம் நிறைந்த ஆலோசனை பொருந்துமா எனப் பார்க்கலாம்.

தோல்வியை எதிர்கொள்வதெப்படி

தோல்வி என்பது எந்தவொரு விளையாட்டிலும் தவிர்க்க முடியாததாகும். அது ஒரு மிகச் சிறந்த ஆசிரியர் ஆனால் அதை கையாள்வது எப்படி?

“விளையாட்டு என்பதே வெற்றியும் தோல்வியும் சேர்ந்ததுதான். சில நேரம், நாம் முன்னிலை வகிக்கிறோம், சில நேரம் பின்தங்குகிறோம். எப்படி இருந்தாலும் அமைதியைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் வெற்றி பெறும்பொழுது வேறொருவர் தோற்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தோல்வியை எவரும் விரும்புவதில்லை. இவை அனைத்தும் வாழ்க்கையின் சவால்கள். வாழ்க்கை எல்லா நேரமும் ஒரேமாதிரி இருப்பதில்லை. மேடு பள்ளங்கள் சகஜம்தானே. தோல்விகளை வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு மேலே செல்லவேண்டும். உறுதியாக இருங்கள். நம்பிக்கையை கைவிடாதீர்கள்.

பெருந்தொற்றின்போது அடைக்கப்பட்ட கதவுகள்

பயிற்சியை நம்பியுள்ள விளையாட்டு வீரர்களை ஊரடங்கு (லாக்டவுன்) வழிகாட்டுதல்கள் மிகவும் கட்டுப்படுத்தி, ஊக்கமிழக்கச் செய்தன. அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

“சூழ்நிலை நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை நாம் சிறிது காலம் உறுதியுடன் இருக்க வேண்டும். மற்ற திறன்களை வளர்த்துக்கொள்ள இந்த நேரத்தை பயன்படுத்துங்கள். இதுவரை எவற்றையெல்லாம் செய்ய நேரம் இல்லையோ, அவற்றில் கவனம் செலுத்துங்கள். இது ஒரு தற்காலிக நிலைதான். கட்டுப்பாடுகள் நீங்கி அனைத்தும் திறக்கப்படும்போது, புதிய உற்சாகத்துடன் பயிற்சியைத் தொடருங்கள்.”

சந்தேகங்களைக் கையாண்டு நம் திறனை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

போட்டிகள், வீரர்களின் சிறந்த பண்புகளையும் மோசமான பண்புகளையும் வெளிப்படுத்தக்கூடியவை. விளையாட்டின் முக்கியமான கட்டங்களில் மேலெழும் சந்தேகங்களை வெற்றிகொண்டு, நம் திறனை முழுவதுமாக வெளிப்படுத்துவது எவ்வாறு?

விளையாட்டு வீரர்கள் உடலுக்கு பயிற்சி அளிக்கும் அதே நேரத்தில் மனதிற்கும் பயிற்சி அளிப்பது அவசியம். விளையாட்டில் செயல்திறன் என்பது கவனக்கூர்மையுடன் மிகுந்த தொடர்பு கொண்டுள்ளது. நான் அனைத்து விளையாட்டு வீரர்களையும் வாழும் கலையின் பயிற்சியை மேற்கொள்ள பரிந்துரைக்கிறேன். ஏனெனில் அது மனதை பயிற்சி செய்து விளையாட்டில் சிறந்தவராக மாற மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

– சந்தீப் சிங், ஹரியானாவின் விளையாட்டுத் துறை அமைச்சர், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஹாக்கியில் உலகச் சாதனையாளர்

விளையாட்டு வீரர்களின் மனநலம் குறித்து  குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

மனநலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால், செய்துகொண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவில்லை என்றால், அதனால் என்ன பயன்? விளையாட்டு என்பது மகிழ்ச்சியான மனநிலையில் இருந்து பிறக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால், அது குறித்து அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும். ஒலிம்பிக் வீரர்கள் மனநலனைப் பேண சுதர்சன கிரியா செய்கிறார்கள். உங்களுக்குத் தாங்கும் சக்தி, அதாவது ஸ்டாமினா, தேவை, உடலளவில் மட்டுமல்ல மனஅளவிலும் நீங்கள் துடிப்புடன் இருக்க வேண்டும். தியானமும், யோகாவும் அதை உங்களுக்கு தரக்கூடும்.

யோகா உங்கள் உடலில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் பலனளித்து, உங்கள் மனதின் சமநிலையைப் பேண உதவுகிறது. அனைத்து விளையாட்டுகளுக்குமே கவனக்குவிப்பும், ஒருமுகத்தன்மையும் தேவை. ஒருமுகத்தன்மையை அடைய, தியானமும் யோகாவும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். விளையாட்டுப் பயிற்சிக்கு முன், சுதர்சன கிரியா பயிற்சி மற்றும் 10 நிமிட வழிகாட்டப்பட்ட தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளவும்.

நான் அண்மையில் இணையவழி மூச்சு மற்றும் தியானப் பட்டறையில் (பிரெத் அண்ட் மெடிடேஷன் வொர்க்‌ஷாப்பில்) பங்கேற்றேன். சுதர்சன கிரியா, மூச்சுப் பயிற்சிகள் போன்றவற்றை நாங்கள் செய்தோம். என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால், என்னுடன் பட்டறையில் கலந்து கொண்டவர்களின் நேர்மறையான ஆற்றல்தான் (positivity) இப்பட்டறை ஜூம் செயலியின் வழி நடந்தபோதிலும், எனக்கு நிறைவை அளித்தது. அந்த நேர்மறையான ஆற்றல் எல்லோரையும் தொற்றிக் கொண்டது.  இந்த தளத்தை உருவாக்கி, இப்படியான பயனுள்ள அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.

– சவுரவ் கோஷல், ஸ்க்வாஷ் வீரர், அர்ஜுனா விருது பெற்றவர்

காயங்களை கடந்து முன்னேறுவது

காயங்கள் விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். பெரும்பாலும் எல்லா விளையாட்டு வீரர்களுமே காயங்களினால் கடினமான நேரங்களைச் சந்தித்திருப்பார்கள். காயத்தினால் வரும் உடல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, அது தரும் மனக்கவலையும் நம்மை துவண்டுவிட செய்யும். சிலர் இதைப் போன்ற தடைகளையெல்லாம் கடந்து மேலே வருகிறார்கள். ஒரு விளையாட்டு வீரர் பெறக்கூடிய மோசமான அனுபவங்களில் ஒன்றையும் அதை எப்படி கடந்தார் என்பதையும் இந்த உத்வேகம் அளிக்கும் குறிப்பில் காணலாம்:

நான் விளையாட்டு வீரர்கள் நிறைந்த குடும்பத்திலிருந்து வந்தவன். ஒரு தோட்டாவினால் காயமடைந்து, என் உடல் இயக்கம் முடங்கியது; 2 வருடங்கள் சக்கர நாற்காலியில் இருந்தேன். என்னால் மீண்டும் விளையாட முடியாது என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால், நான் மீண்டும் விளையாடியது மட்டுமல்ல, குழுவிலும் இணைந்து, கேப்டனாக உயர்ந்து, அர்ஜுனா விருதும் பெற்றேன். வாழ்க்கையில் நாம் ஒரு பெரிய இலக்கை கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வேன்– அந்த இலக்கை அடைந்தவுடன், இன்னும் ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். கொண்டாட்டத்திற்கு போதைப் பொருட்களை நாடவேண்டியதில்லை. பல விளையாட்டு வீரர்கள் அந்தவகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வழி தவறி விடுகிறார்கள்.

– சந்தீப் சிங்

விளையாட்டின் இருண்ட பக்கத்தை கையாள்வது

இளைஞர்களுக்கு, குறிப்பாக விளையாட்டில் ஈடுபட்டவர்களுக்கு, சக்தி அபரிமிதமாக இருக்கும். அவர்கள் போதைப் பொருட்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஆபத்தான பாதைகளை அவர்கள் தவிர்ப்பது எப்படி?

இளைஞர்களுக்கு போதைப் பொருட்களை விட கவர்ச்சிகரமான ஒன்றை வழங்க வேண்டும். சுதர்சன கிரியா அடிமையாக்க வல்லது. பல லட்சம் மக்கள் போதை மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். பிராணாயாமம் மற்றும் சுதர்சன கிரியா பயிற்சியின் மூலம் பலர் இந்தப் பழக்கங்களை கைவிட்டிருக்கிறார்கள். விளையாட்டு வீரர்கள் யோகா, பிராணாயாமம், சுதர்சன கிரியா ஆகியவற்றை செய்ய வேண்டும். போதைப் பழக்கத்துக்கு எதிராக போர்தொடுக்க வேண்டும்.”

எண்ணங்களை கையாள்வது

நாம் அமைதியையும் சாந்தியையும் நாடும்போதுதான், நம் மனத்தில் பல எண்ணங்கள் எழுந்து கவனச்சிதறலையும், மனக்குலைவையும், மனச்சோர்வையும் ஏற்படுத்துகின்றன, அல்லது சோர்வூட்டும் எண்ணங்களால் நிரம்பிவிடுகிறது. இந்த “மனக்குழப்பத்தை எவ்வாறு நிறுத்தி, ஒருமுகப்படுத்தமுடியும்?

“நீங்கள் நடனமாடும்போதோ ஜாகிங் செய்யும்போதோ உங்கள் மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றனவா? இல்லை அல்லவா? அதேபோலதான், பஸ்திரிகா போன்ற பிராணாயாமங்களைப் பயிலும்போதும், நீங்கள் அத்தருணத்தில் இருக்கிறீர்கள். (எண்ணங்கள் எழும்போது), உங்கள் மனத்தில் வரும் எண்ணங்களையெல்லாம் எழுதுங்கள் – முக்கியமான எண்ணங்கள் மட்டுமே தங்கி விடுவதைக் காண்பீர்கள். சுதர்சன கிரியா செய்யும்போது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணங்கள் எழுவதைக் காண்பீர்கள். அதில் ஒன்றும் தவறில்லை. அது ஒரு வகையான சுத்திகரிப்பு தான்.”

ஆகவே, எண்ணங்கள் உங்கள் மனத்தில் நுழைந்து வெளியேறிக் கொண்டே இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்து வெளி விட்டுக்கொண்டே இருங்கள். சுதர்சன கிரியா மூலம்!

சுதர்சன கிரியா செய்வது எனக்கு ஒரு நல்ல உணர்வைத் தருகிறது. ஒரு புதிய உத்வேகம் அளிக்கிறது. நிச்சயமாக நான் மற்றவர்களுக்கும் இந்தப் பயிற்சியை செய்ய பரிந்துரைப்பேன்.

– சஞ்ஜீவ் ராஜ்புத், துப்பாக்கி சுடும் வீரர், அர்ஜுனா விருது பெற்றவர்

விளையாட்டில் இரக்கமற்று இருப்பது சரியா?

போட்டியிடும்போது எப்படி இரக்கப்பட முடியும்? தோல்வி அடைந்துவிட மாட்டோமா? ஆனால் ஆக்ரோஷமாக இருந்தால் அது ஆன்மீக கொள்கைகளுக்கு எதிரானது அல்லவா?

“விளையாடும் பொழுது உங்கள் 100 சதவிகிதத்தை கொடுங்கள் – இரக்கமற்று இருங்கள். ஆனால், விளையாட்டு முடிந்தவுடன் நேரெதிர் முனைக்கு செல்லுங்கள் – இரக்கமுள்ளவராகவும், புரிதல் உள்ளவராகவும் இருங்கள். வேகமாக ஓடுபவருக்கு அசையாமல் நிற்கும் திறனும் இருக்க வேண்டும்.”

பொதுக்கருத்திற்கு மாறாக, இரக்கமும், புரிதலும் ஒலிம்பிக்கின் உயர் விழுமியங்களை வெளிகொணர்கின்றன. இவை ஒலிம்பிக்கின் இலட்சிய நோக்கமான – மேலும்  வேகமாக, உயரமாக, வலிமையாக ( ஸிடியஸ், ஆல்டியஸ், ஃபார்டியஸ்) – என்பதை நோக்கிச் செல்ல விளையாட்டு வீரர்களுக்கு உதவுகின்றன. ஆகவே உலகம் முழுதும் பல சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவியுள்ள சுவாச நுட்பமான சுதர்சன கிரியாவின் மூலம் விளையாட்டில் உங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். இப்போதே இணையவழி தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிபட்டறைகளில் (மெடிடேஷன் அண்ட் ப்ரெத் வொர்க்‌ஷாப்பில்) இணையுங்கள்.

தடகள (அதெலெடிக்) யோகாவின் மூலம் வெற்றி விளிம்பைத் தொட மேலே படிக்கலாம்.

(பல்வேறு விளையாட்டு வீரர்களுடன் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் கலந்துரையாடலை அடிப்படையாக கொண்டது.)

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *