கோபம் என்றால் என்ன, அது என்ன செய்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கோபம் உறவுகளை சீர்குலைக்கலாம், நமக்கே தீங்கு விளைவிக்கலாம், மரியாதையை இழக்கச் செய்யலாம் என்பதையும் கேள்விப்பட்டுள்ளோம். இந்த வலுவான உணர்வை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் “கோபப்பட வேண்டாம்’ என்ற ஆலோசனையை ஆயிரம் முறை கேட்டிருப்பர். ஆனால் “எப்படி கோபப்படாமல் இருக்கலாம்?” என்ற கேள்விக்கு சிலரே பதில் பெற்றிருப்பார்கள். இன்று நாம் பேசப்போவது அதைப்பற்றியே — கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள்.
-
கோபம் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் அது மோசமானதல்ல. அளவாக பயன்படுத்தினால், அது சரியானதாக இருக்கும்.
-
நீங்கள் கோபப்படலாம், கத்தலாம், மனம் புண்படலாம் — ஆனால் தண்ணீரின் மேற்பரப்பில் ஒரு கோடு நிலைக்கும் நேரம் வரை மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியமானது.
-
உங்கள் புன்னகையை மலிவாகவும் கோபத்தை விலை உயர்ந்ததாகவும் ஆக்குங்கள்!
-
மனம் பயம் இல்லாமல், குற்றஉணர்வு இல்லாமல், கோபம் இல்லாமல், மேலும் மையமாக இருக்கும்போது, அது எந்த நோயையும் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது.
-
ஒரு தவறை தவறாகவே பாருங்கள்; அதை “என் தவறு” அல்லது “அவன் தவறு” என்று சொல்லாதீர்கள். “என் தவறு” என்றால் குற்றஉணர்வு ; “அவன் தவறு” என்றால் கோபம்.
-
பேராசை, பொறாமை, கோபம், வெறுப்பு அல்லது விரக்தி எதுவாக இருந்தாலும் சரி. இந்த எதிர்மறை உணர்ச்சிகள் அனைத்தையும் யோகா மூலம் குணப்படுத்தலாம் அல்லது மறுசீரமைக்கலாம்.
-
பரிபூரணத்திற்கான உங்கள் ஆசையே கோபத்தின் காரணம். குறைபாடுகளுக்கு இடம் விடுங்கள். செயல்களில் முழுமையான பரிபூரணம் என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
-
கோபம் அர்த்தமற்றது, ஏனெனில் அது எப்போதும் ஏற்கனவே கடந்து போன ஒன்றைப் பற்றியது.
-
ஏற்கனவே நடந்த ஒன்றைப் பார்த்து கோபப்படுவதில் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செய்யக்கூடியதெல்லாம், அது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான்.