இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தற்கொலை விகிதங்கள் கடந்த ஐந்து தசாப்தங்களாக அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சினை தற்போதைய தலைமுறையில்தான் நடக்கிறது. முந்தைய தலைமுறையினர் மிகவும் நெகிழ்ச்சியுடனும், சோதனைகளை எதிர்கொள்ளும் மனப்பாங்குடனும் இருந்தனர். இப்போது, வாழ்க்கை மிகவும் சொகுசாகி விட்டது. உங்கள் ஆசைகள் நிறைவேறுவதால், நீங்கள் மேலும் மனச்சோர்வு அடைவீர்கள். நீங்கள் பெரு முயற்சி செய்யாமல் இலக்கை எளிதாக அடைவதால் உங்கள் மனம் அலைபாய்கிறது.
உங்கள் மனதிற்கு ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் ஒரு உடல் செயல்பாடு செய்யும்போது, ஓடும்போது அல்லது ஒரு நல்ல உடற் பயிற்சி செய்யும் போது உங்கள் மனம் அந்த நேரத்தில் வேலை செய்யாது, வெறுமனே அலை பாயாது. ஆனால் நீங்கள் வெறுமனே உட்கார்ந்து சமூக ஊடகங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் மனம் அலை பாய்கிறது. இது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
மனச்சோர்வு எங்கிருந்து வருகிறது?
- குறைந்த ஆற்றல்: உங்கள் ஆற்றல் குறைவாக இருக்கும்போது, மனச்சோர்வு ஏற்படுகிறது. ஆற்றல் சாதாரணமான அளவில் இருக்கும்போது, நீங்கள் சாதாரணமாக, இயல்பாக உணர்கிறீர்கள். ஆற்றலின் அளவு குறையும் போது, நீங்கள் ஆர்வமற்றவராக இருப்பதை உணர்கிறீர்கள். இதனால் நீங்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறீர்கள். ஆற்றல் மேலும் கீழே செல்லும்போது, உங்களுக்குள் இருக்கும் ஊக்கத்தை இழக்கிறீர்கள்.
- என்னை பற்றி என்ன? என்னை பற்றி என்ன? என்னை பற்றி என்ன? என்னை பற்றி என்ன? என்னை பற்றி என்ன? என்று சும்மா உட்கார்ந்து யோசிக்க யோசிப்பது மனச்சோர்வை ஏற்படுத்தும் ஒரு நுட்பம்! நீங்கள் உட்கார்ந்து உங்களைப் பற்றியே “என்னை பற்றி என்ன? எனக்கு என்ன நடக்கும்? எனக்கு என்ன நடக்கும்? உனக்கு என்ன நடக்கும்?” என்று எண்ணி என்ன பயன்? நீங்கள் பூமிக்கடியில் படுத்திருப்பீர்கள்.
- பாராட்டு இல்லாமை: சலிப்பு உங்களை விரக்தி மற்றும் மனச்சோர்வுக்கு இட்டுச் செல்லும்போது அது ஒரு வகையான சாபமாக இருக்கிறது. வாழ்க்கையில், நீங்கள் எதையும் போற்றவில்லை அல்லது பாராட்டவில்லை என்றால், நீங்கள் எதிர்மறை எண்ணங்களால் நிரப்பப்படுவீர்கள்; வணங்கவோ, போற்றவோ எதுவுமே இல்லாத ஒருவர் நிச்சயம் மனச்சோர்வில் விழுவார்.
- ஜடம் போன்ற புரிதல்: மனச்சோர்வு என்பது வாழ்க்கையை பற்றிய ஜடம் போன்ற புரிதலின் அறிகுறியாகும். “வாழ்க்கையில் எல்லாமே முடிந்து விட்டது . இறந்துவிட்ட, ஜடம் போன்றது. இதற்கு மேல் எதுவும் இல்லை, எங்கும் செல்ல முடியாது” என்று நினைக்கும் போது, நீங்கள் மனச்சோர்வடைகிறீர்கள்.
மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை எவ்வாறு சமாளிப்பது?
- துணிவை எழுப்புங்கள்: முதலில், உங்களுக்குள் இருக்கும் வீரத்தையும் துணிவையும் வரவழைத்துக் கொள்ளுங்கள். கடந்த காலத்தை திரும்பிப் பாருங்கள், அதில் நீங்கள் பல இன்னல்களையும் சிரமங்களையும் கடந்து வந்து இருக்கிறீர்கள். இப்போதைய சூழலையும் நீங்கள் சமாளித்து கடக்க முடியும் என்பதை உணருங்கள்.
- உங்கள் பார்வையை விரிவுபடுத்துங்கள்: உலகைப் பாருங்கள் – பெரிய பெரிய பிரச்சினைகள் உள்ளன. அதனுடன் ஒப்பிட்டு பார்த்தால் உங்கள் பிரச்சினைகள் சிறியதாக தோன்றும். உங்கள் பிரச்சினைகள் சிறியதாகத் தோன்றும் தருணத்தில், அவற்றைச் சமாளிக்க அல்லது அவற்றைத் தீர்ப்பதற்கான ஆற்றலையும் நம்பிக்கையையும் நீங்கள் பெறுவீர்கள்.
மகிழ்ச்சிக்கான ‘கோடு’! ஒருமுறை, ஒரு ஞானி ஒரு பலகையில் ஒரு கோட்டை வரைந்து, அதைத் தொடாமல் அல்லது அழிக்காமல் கோட்டைச் சுருக்கும்படி தன் மாணவரிடம் கூறினார். நீங்கள் அதை எப்படி செய்வீர்கள்? ஒரு கோட்டைத் தொடாமல் சுருக்க வேண்டும். ஒரு புத்திசாலி மாணவன் பின்னர் அந்த வரிக்கு அடியில் மிக நீண்ட கோட்டை வரைந்தார். எனவே, முதல் கோடு தானாகவே குறுகியது. இங்குள்ள பாடம் என்னவென்றால், உங்கள் கஷ்டங்கள் மிகப் பெரியதாகத் தோன்றினால், உங்கள் பார்வையை உயர்த்துங்கள், ஏனென்றால் நீங்கள் உங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள். நீங்கள் உங்கள் பார்வையை உயர்த்தி, கஷ்டங்களைக் கொண்ட மற்றவர்களைப் பார்த்தால், திடீரென்று உங்கள் சுமை நீங்கள் முன்பு நினைத்ததைப் போல மோசமாக இல்லை என்பதை உணர்வீர்கள். உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சினை இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதைவிட பெரிய பிரச்சனை உள்ளவர்களைப் பாருங்கள். திடீரென்று, என் பிரச்சினை மிகவும் சிறியது என்று உணர்வீர்கள், அதை என்னால் கடக்க முடியும் என்ற நம்பிக்கையையும் பெறுவீர்கள்.
- சேவை செய்ய உறுதிபூண்டு, பின்னர் ஒரு படி மேலே செல்லுங்கள்: பயனுள்ளதாக இருக்கும் ஒன்றில் உங்கள் ஆற்றலை செலுத்துங்கள்; உங்கள் இலக்கை கண்டறியுங்கள். உங்கள் சொந்த மகிழ்ச்சியின் பின்னால் ஓடுவதற்குப் பதிலாக மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதே மிகவும் அர்த்தமுள்ள விஷயம். அதிக தேவையில் இருப்பவர்களுக்கு சேவை செய்யுங்கள். மற்றவர்களுடன் பகிர்வதற்கும் சேவை செய்வதற்கும் நீங்கள் உங்களை அர்ப்பணிக்கும்போது, உங்கள் பிரச்சினை சிறியதாகத் தோன்றும். நீங்கள் எல்லா நேரத்திலும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், உங்கள் பிரச்சினை தீர்க்க முடியாததாகிவிடும். ஆனால் நீங்கள் பரந்த மனப்பான்மையுடன், திறந்த மனதுடன் உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தால், உங்கள் பிரச்சினையில் நீங்கள் தனியாக இல்லை என்பதைக் காண்பீர்கள்.
- உங்கள் மனதை பலப்படுத்துங்கள்: உங்கள் மன சக்தியை நம்புங்கள். “நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய்”. உங்கள் நினைவில் நேர்மறையான விதைகளை அதிகமாக விதைக்கவும். இதனால் உங்கள் மனம் எதிர்மறை எண்ணங்களை விட நேர்மறையை எண்ணங்களையே ஈர்க்கத் தொடங்கும்.
- உங்கள் ஆற்றலை உயர்த்துங்கள்: நீங்கள் மருந்து எடுத்துக் கொண்டே இருக்கலாம். இது சிறிது நேரம் வேலை செய்கிறது. பின்னர் அது வேலை செய்வதை நிறுத்துகிறது. மருத்துவம் தீர்வாகாது. வேறு என்ன செய்ய முடியும்? உடற்பயிற்சி, சரியான உணவு, தியானம், சுவாசம், சுதர்சன கிரியா மற்றும் இந்த அனைத்து செயல்களின் மூலம் உங்களுக்குள் பிராணனை உயர்த்த வேண்டும். இது ஆற்றல் மட்டத்தை உயர்த்தும். தியானம் உங்களை கூர்மையாகவும், மகிழ்ச்சியாகவும், உள்ளுணர்வுடனும் ஆக்குகிறது. இது உங்களை தற்போதைய தருணத்தில் மிகவும் நிலை கொண்டிருக்க வைக்கிறது மற்றும் கடந்த காலத்தில் நடந்த எல்லாவற்றிலிருந்தும் உங்களைத் துண்டிக்கிறது. ஆற்றல் அதிகமாக இருக்கும்போது, நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள். நீங்கள் உற்சாகமாக உணர்கிறீர்கள். அது நிறைவடையும் போது, நீங்கள் மிகவும் ஆனந்தமாக உணர்கிறீர்கள். சமாதி. தியானம். அதனால்தான் மிக மிக முக்கியமானது.
- தன்னிச்சையாக, இயற்கையாக இருங்கள்! உங்களுக்குள்ளே ஆழமாக பயணம் செய்ய சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்போது தன்னிச்சையானது வரும். எல்லாம் இயல்பாக இருக்கும்போது, எல்லாம் நீங்கள் விரும்பும் வழியில் நடக்கும்போது புன்னகைப்பதில் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்குள் இருக்கும் வீரத்தை எழுப்பி, ‘என்ன நடந்தாலும் சரி, நான் புன்னகைத்துக் கொண்டே இருக்கப் போகிறேன்’ என்று நிச்சயித்தால் உங்களுக்குள் இருந்து எழும்பும் பேராற்றலை நீங்கள் உணர்வீர்கள், காண்பீர்கள். “பிரச்சனை ஒன்றுமில்லை; அது வந்து காணாமல் போகிறது” என்று உணர்வீர்கள்.
- உங்கள் சுவாசத்தின் சக்தியைத் திறக்கவும்: நம் சுவாசம் நம் உணர்ச்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உணர்ச்சிக்கும், சுவாசத்தில் ஒரு குறிப்பிட்ட தாளம் உள்ளது. எனவே, உங்கள் உணர்ச்சிகளை நேரடியாகப் பயன்படுத்த முடியாதபோது, சுவாசத்தின் உதவியுடன், நீங்கள் அதைச் செய்யலாம். நீங்கள் நடிகராக இருந்தால் கோபத்தை காட்ட வேண்டிய நேரத்தில் இயக்குனர் உங்களை வேகமாக மூச்சு விடச் சொல்வார். ஒரு அமைதியான காட்சியைக் காட்ட வேண்டும் என்றால், மென்மையாகவும் மெதுவாகவும் மூச்சு விடச் சொல்வார் இயக்குநர். நம் சுவாசத்தின் தாளத்தைப் புரிந்துகொண்டால், நம் மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். கோபம், பொறாமை, பேராசை போன்ற எந்த எதிர்மறை உணர்ச்சிகளையும் நாம் வெல்ல முடியும், மேலும் நம் இதயங்களிலிருந்தே மகிழ்ந்து அதிகம் சிரிக்க முடியும். சுதர்சன கிரியா போன்ற சுவாச நுட்பங்கள் உண்மையில் உதவக்கூடும். பல்வேறு ஆய்வுகள், சுதர்சன கிரியாவின் முறையான பயிற்சி மூலம் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைப்பதாகக் காட்டுகின்றன.
- ஒரு உயர்ந்த சக்தியில் நம்பிக்கை வையுங்கள்: பல நேரங்களில், கோபம் அல்லது விரக்தியில், ‘நான் கை விட்டுவிடுகிறேன்’ என்று சொல்கிறோம். “நான் இந்த பிரச்சினையை கை விட்டுவிடுகிறேன், என்னால் அதை தீர்க்க முடியாது; தெய்வம் எனக்கு உதவட்டும்” என்று விரக்தி அல்லது கோபம் இல்லாமல் கூறுங்கள். அந்த தெய்வீக உதவி உங்களுக்கு எப்போதும் கிட்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிரபஞ்சத்தில் ஒரு சக்தி உங்களுக்கு உதவப் போகிறது என்ற நம்பிக்கையுடன் இருங்கள். உங்களுக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். பிரபஞ்சத்தில் ஒரு சக்தி உங்களுக்கு உதவப் போகிறது.
சுருக்கம்
மனச்சோர்வை சமாளிப்பதற்கும் உள் அமைதியைக் கண்டறிவதற்கும் நம் கண்ணோட்டத்திலும் மற்றும் செயலூக்கமான செயல்களிலும் மாற்றம் தேவைப்படுகிறது. நமது பார்வையை விரிவுபடுத்துவதன் மூலமும், பிரச்சினைகள் தற்காலிகமானவை என்பதை ஒப்புக்கொள்வதன் மூலமும், மற்றவர்களுக்கு சேவை செய்வதில் நம் கவனத்தை திருப்புவதன் மூலமும், நாம் அதிக ஆற்றலையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும். இதைச் செய்ய, சுவாசம் மற்றும் தியானத்தின் சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மன உறுதியையும் மகிழ்ச்சியையும் வளர்த்துக் கொள்ளலாம். நம்பிக்கையைக் கொண்டிருப்பதும், தன்னிச்சையாக வெளிப்படுத்துவதும் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்லும்.
மனச்சோர்வை வெல்வதற்கும், உள் அமைதியைக் கண்டறிவதற்கும் வாழும் கலை ஆனந்த அனுபவ திட்டத்துடன் (Art of Living Happiness Program) பாதையைக் கண்டறியவும்.
இந்த உள்ளடக்கம் தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இருக்காது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.











