நாம் அனைவரும், உணர்வுபூர்வமாகவோ அல்லது ஆழ்மனதிலோ, நமது மன ஆரோக்கியத்தை உருவாக்கவோ அல்லது பாதிக்கவோ கூடிய சில நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறோம். நேர்மறையான நம்பிக்கைகள், வாழ்க்கை, மக்கள் மற்றும் பிரச்சினைகளை ஆரோக்கியமான அணுகுமுறையுடன் பார்க்க உதவுகின்றன. அவ்வளவாக நல்லன அல்லாத நம்பிக்கைகள் சுயமரியாதையை குறைத்து, பல எதிர்மறை உணர்ச்சிகளை வளர்க்கின்றன. நல்ல மன ஆரோக்கியத்திற்காக விட வேண்டிய சில பொதுவான நம்பிக்கைகள் பின் வருமாறு.

என் சுய மதிப்பு மக்களிடம் என்னைப் பற்றிய கருத்துக்களைப் பொறுத்தது

மக்களின் கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. உங்களைப் பற்றிய உங்கள் கருத்தும் மாறுகிறது. அந்தக் கருத்துக்களுடன் உங்கள் சுய மதிப்பை இணைப்பது மாறிவரும் வானிலையுடன் அதை இணைப்பது போன்றது. உங்கள் சுயமரியாதையை உங்களுடைய நம்பிக்கைகளை வைத்தே சேதப்படுத்துகிறீர்கள். உங்கள் தோல்விகள் மற்றும் வெற்றிகளால் உங்கள் சுய மதிப்பை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஆரோக்கியமான கண்ணோட்டத்தை வளர்க்கவும், உங்கள் உள்ளார்ந்த வலிமையை அணுகவும் தியானம் செய்யுங்கள்.

நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகிறார், “‘எப்போதும்’ என்பதை விட்டுவிடுங்கள், மகிழ்ச்சி சாத்தியமாகும்.” உண்மை என்னவென்றால், மகிழ்ச்சியும் துக்கமும் நிலையற்ற உணர்வுகள். அதில் நாம் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம், அவை நம்மை மேலும் மகிழ்ச்சியற்ற நிலைக்கு கொண்டு செல்கின்றன. நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். அதனால் நமது பழக்கப்பட்ட அனுசரணையான சுகவளையத்தை விட்டு வெளியேற மறுக்கிறோம். பழக்கப்பட்ட அனுசரணையான சுகவளையத்திற்கு வெளியே உள்ள இடத்தில்தான் உண்மையான வளர்ச்சி நிகழ்கிறது.

வெற்றி என்பது நான் விரும்புவதைப் பெறுவதுதான்

நம் ஆசைகள் எப்போதும் நிறைவேறுவதில்லை. கடந்த காலத்தைப் பார்க்கும்போது, ​​உங்களின் சில ஆசைகள் நிறைவேறவில்லை என்பதில் நீங்கள் இன்று மகிழ்ச்சியடைவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உண்மையான வெற்றி என்பது துன்பங்களை எதிர்கொள்ளும் போது குறையாத தைரியத்தைக் கொண்டிருப்பதாகும். நீடித்த புன்னகையுடன் இருக்கும் நாட்களை வெற்றிகரமான நாட்களாகக் கருத வேண்டும். நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கும் நாள் வெற்றி பெற்ற நாளாகும். மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையில் ஒரு சாதனை வெற்றியாக இருக்காது.

நான் பரிபூரணமாக இருக்க வேண்டும்

பரிபூரணமாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் நம்மை அபூரணமாக்குகிறது. பரிபூரணத்தையே எதிர்பார்ப்பவர்களுக்கு பெரும்பாலும் திருப்தி இருக்காது.  அவர்களால் பிறரின் குறைகளை ஏற்க முடியாது.  அபூரணமாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. அது அவர்களின் கழுத்தில் ஒரு கயிறாக மாறுகிறது. அவர்கள் தொடர்ந்து கோபப்படுகிறார்கள். கோபம் என்பது மற்றவர்களின் தவறுகளுக்கு, நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை ஆகும். கோபம், சர்க்கரை அளவையும், மன அழுத்தத்தையும், இரத்த அழுத்தத்தையும் உயர்த்துகிறது. கோபப்படுவதால் எதுவும் மாறாது. நிலைமையை விரிவான கோணத்தில் பார்க்கவும், திறமையாக அணுகவும் வேண்டும்.

எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்

இலக்குகளை வைத்திருப்பதும் அவற்றை நோக்கிச் செல்வதும் நல்லது. ஆனால் வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். திட்டங்களைச் சுற்றி நெகிழ்வுத்தன்மை, உங்கள் உணர்வுகளை சமநிலையிலும், உங்கள் முயற்சிகளை உறுதியானவையாகவும் வைத்திருக்க உதவும். ஒரு திட்டத்திற்காக உங்கள் வாழ்க்கையின் பிற மதிப்புமிக்க அம்சங்களில் சமரசம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் எப்போதும் மாற்றுத் திட்டங்கள் (திட்டம் B, C, D) போன்றவற்றை வைத்திருக்கலாம். ஆழமாக சிந்தித்து ஒவ்வொன்றிற்கும் தனித்த நேரம் உள்ளது என்பதை உணருங்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்; முடிவுகளுக்காக பொறுமையுடன் காத்திருக்கவும்.

ஆசைகளை நிறைவேற்றுவதே மகிழ்ச்சிக்கான பாதை

உண்மையில், ஒவ்வொரு ஆசையும் நம்மை விரக்தி அடையச் செய்கிறது.. ஒரு ஆசை நிறைவேறியதும் அது நம் மனத்திற்கு சுவாரஸ்யமில்லாததாகிவிடுகிறது. உடனே அடுத்த ஆசையைத் தேடி ஓட ஆரம்பிக்கிறோம். ஒரு ஆசை நிறைவேறாமல் போனால், அது வெளிப்படையான விரக்தியை ஏற்படுத்துகிறது. எனவே உண்மையான சந்தோஷத்தின் ரகசியம் — ஆசைகளிலும், பொருளாதார இலாபங்களிலும் சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பது.

உங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு பெரிய குறிக்கோளுக்காகவோ அல்லது உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களின் சேவைக்காகவோ அர்ப்பணிக்கவும். பின்னர் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே பாய்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். ஒரு உயர்ந்த சக்தி உங்களை கவனித்துக்கொள்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு அத்தகைய நம்பிக்கை இருக்கும்போது, ​​நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ”என்று குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகிறார்.

ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஏதோ தவறு என்பதைக் குறிக்கிறது

நாம் ஒருவருடன் உடன்படாதபோது, ​​அவர்களை பெரும்பாலும் கெட்டவர்கள் அல்லது தவறு செய்பவர்கள் என்று முத்திரை குத்துகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், ஒரே சூழ்நிலையில் நமக்கு வெவ்வேறு கண்ணோட்டங்கள் உள்ளன. “பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும், இருக்க வேண்டும்.

நல்வாழ்வு மற்றும் சொந்தம் என்ற அடிப்படை நீரோட்டத்தை நீங்கள் அங்கீகரிக்கும்போது வெவ்வேறு கண்ணோட்டங்கள் வாழ்க்கையை மிகவும் வளமாக்குகின்றன.” என்று குருதேவர் கூறுகிறார், வாதங்கள் வரவேற்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால் பல நேரங்களில் அது நகைச்சுவையிலேயே முடியும். வாதங்கள் சோகம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளில் முடிவதல்ல; நகைச்சுவையில் முடிவதே சிறந்தது. புத்திசாலிகள் எப்படி வாதிக்க வேண்டும் என்றும், பின்னர் அதில் இருந்து எப்படி வெளியேற வேண்டும் என்றும் அறிந்திருப்பார்கள்.

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் உரைகளின் அடிப்படையில்

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *