தியானம் செய்வது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? ஆரம்ப நிலையில் தியானம் செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா?
ஆம் எனில், குறிப்பாக தியானத்தை இப்போது தான் தொடங்கியவர்களாக இருந்தால், தியானத்தில் ஆழமான அனுபவங்களை நாடும் இயல்பு உங்களிடம் இருக்கும்.
தியானத்தின் நுட்பங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனக் கூர்மையை அதிகரிக்கவும், நம் ஒட்டுமொத்த நல வாழ்வினை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழியாக உள்ளது.
தியானம் செய்யும் முன் சில எளிய அம்சங்களை உறுதி செய்துகொள்வதன் மூலம், தியான அனுபவம் மேலும் சிறப்பாக அமைய முடியும்.
வழக்கமாக தியானம் செய்யத் தொடங்குவோர் எழுப்பும் வினாக்கள்:
- தியானம் செய்வது எப்படி?
- வீட்டிலிருந்தே தியானம் செய்வது எப்படி?
தியானம் செய்யத் தொடங்குபவர்களுக்கான எட்டு குறிப்புக்கள்
-
உங்கள் வசதிக்கேற்ப நேரத்தை முதலில் தேர்ந்தெடுக்குங்கள்
தியானம் என்பது தளர்வான நிலையில் செய்யவேண்டிய ஒன்று. தியானத்தை சரியாக செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், உங்கள் வசதிக்கேற்ப நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு தொந்தரவுகள் இல்லாத, சுதந்திரமாக ஓய்வெடுத்து தியானத்தை அனுபவிக்கக்கூடிய நேரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரங்கள் தியானத்திற்கு மிகவும் ஏற்றவை. இந்த நேரங்களில் வீட்டில் அமைதி நிலவும். இது நீங்கள் எளிதாக தியானம் செய்வதற்கு உதவும்.

-
உங்கள் வசதிப்படி அமைதியான இடத்தை தேர்ந்தெடுக்குங்கள்
அமைதியான நேரத்தைத் தேர்வு செய்வது போல அமைதியான இடத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
தொல்லைகள் ஏதும் இல்லாமல் அமர்ந்து தியானம் செய்ய அமைதியான சூழ்நிலை வேண்டும்.
அது உங்கள் வீட்டின் அறையாகவும் இருக்கலாம். இயற்கையான எழிலுடன் கூடிய இடமாகவும் இருக்கலாம். தியான மையமாகவும் இருக்கலாம்.
இப்படிப்பட்ட இடங்களைத் தேர்வு செய்யும் போது தியானம் செய்யும் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு தியானம் அனுபவிக்கக் கூடியதாகவும் ஓய்வளிப்பதாகவும் இருக்கும்.

-
வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள்
நீங்கள் அமரும் விதம் மிகவும் முக்கியமானது எவ்வாறு அமர்ந்து தியானம் செய்வது உங்களுக்கு ஏற்றதாக உள்ளது என்பதைக் கண்டறியுங்கள்.
நீங்கள் ஒரு நாற்காலியில் அமரலாம். தரையில் ஒரு குஷனில் அமரலாம். முதலில் உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
கைகளை மடியின் மீது தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தளர்வாக இருக்கும் அதே நேரத்தில் நிலையாகவும் அமர வேண்டும். உங்கள் முதுகெலும்பை நிமிர்த்தி உங்கள் தோள்கள் மற்றும் கழுத்துப் பகுதிகளைத் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த செயல்முறை முழுவதும் உங்கள் கண்கள் கண்டிப்பாக மூடியே இருக்க வேண்டும்.
மனதில் கொள்ளுங்கள்: பத்மாசனத்தில் (தாமரை நிலை) அமர்ந்துதான தியானம் செய்ய வேண்டும் என்பது ஒரு தவறான நம்பிக்கை.

-
ஓரளவு காலியான வயிற்றுடன் தியானம் செய்வது நல்லது
வீட்டிலோ வெளியிலோ தியானம் செய்வதாக இருந்தால் காலியான வயிற்றில் தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். உணவு உண்பதற்கு முன் தியானம் செய்வதற்கான காரணம் என்னவென்றால், சாப்பிட்டவுடன் தியானம் செய்தால் நாம் தூங்கி விடுவோம். சில நேரங்களில் வயிறு நிறைந்திருக்கும் போது தியானம் செய்வது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
நீங்கள் பசியெடுக்கும் போது தியானம் செய்தால், உங்கள் கவனம் திசை திரும்பலாம். . பசியாக இருக்கும்போது நீங்கள் உணவு பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பீர்கள்.
எனவே உணவு உண்ட பிறகு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் தியானம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
பசியாக இருக்கும் போது தியானம் செய்ய நீங்கள் உங்களைக் கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
-
தியானம் செய்வதற்கு முன் சில பயிற்சிகள் மூலமாக தயார்ப் படுத்திக் கொள்ளுங்கள்
தியானத்திற்கு முன் செய்யும் சிற்சிலப் பயிற்சிகள் உங்கள் கவனத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வர உதவும். உங்கள் உடலையும் மனதையும் தியானத்திற்கு தயார்படுத்திக் கொள்வதற்கு இந்த முன் பயிற்சிகள் உதவும்.
தியானம் தொடங்குவதற்கு முன்னான தயாரிப்பு முயற்சிகள் அல்லது நுட்பமான யோகப் பயிற்சிகள் உங்களின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சோம்பல் மற்றும் படபடப்பை நீக்கும். உடலை இலகுவாக உணரவும் உதவும். இது தியானம் செய்வதற்கு முன் உதவுகின்ற முக்கியமான ஒரு படிநிலை. இது நீண்ட நேரம் நிலையாக அமர உதவி செய்கிறது.
-
ஆழமான மூச்சுகளை முதலில் எடுக்க வேண்டும்
தியானம் ஆரம்பிப்பதற்கு முன் ஆழமான மூச்சை உள்ளெடுத்து விடுவது தியானம் கற்பதற்கு உதவி செய்யும் ஒரு முக்கிய குறிப்பாகும்.
தியானம் செய்ய தொடங்குவதற்கு முன் ஆழமாக சுவாசிப்பதும் நாடிசோதன் பிரணாயாமம் செய்வதும் நல்ல யோசனையாகும்.
இது சுவாசத்தை ஒரே சீராக வைத்திருக்க உதவுகிறது. மனதை நல்ல அமைதியான நிலைக்கு அழைத்துச் செல்கிறது. நீங்கள் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும் போதும், வெளிவிடும் போதும் உங்கள் சுவாசத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்கள் கவனத்தை ஒருமுகப் படுத்த உதவுமானால், உள்ளெடுத்து விடும் சுவாசத்தை எண்ணிக் கொள்ளலாம். உங்கள் மனம் அலை பாயுமானால் உங்கள் கவனத்தை சுவாசத்திற்கு மெல்ல திசை திருப்புங்கள்.
-
உங்கள் முகத்தில் ஒரு மென்மையான புன்னகை இருக்கட்டும்
தியானப் பயிற்சி முழுவதும் மென்மையான ஒரு புன்னகை உங்கள் முகத்தில் தவழ்வது அவசியமாகும். மென்மையான புன்னகையானது உங்களைத் தளர்வாகவும் அமைதியாகவும் வைத்திருக்க உதவி செய்யும். இதை முயற்சி செய்து பாருங்கள்.

-
தியானம் முடிவுக்கு வந்தவுடன் உங்கள் கண்களை மெதுவாகவும் மென்மையாகவும் திறக்க வேண்டும்
தியானம் முடிவுக்கு வந்தவுடன் அவசரமாக உங்கள் கண்களைத் திறக்கவோ, உடலை அசைக்கவோ வேண்டாம் அதற்கு பதிலாக உங்களையும் உங்கள் சுற்றுப் புறத்தையும் உணர்ந்த பின்னர் உங்கள் கண்களைப் படிப்படியாகத் திறக்கலாம். பின்னர் மெதுவாக உங்கள் உடலை அசையுங்கள். நீங்கள் அன்றைய நாளுக்குத் தயாராகி விட்டீர்கள்.
தியானப் பயிற்சி தொடங்குவது சற்று கடினமாக தோன்றலாம். சிறிது முயற்சியுடனும் பொறுமையோடும் முற்பட்டால் யார் வேண்டுமானாலும் தியானம் செய்யாலாம்.
சரியாக தியானம் செய்வது எப்படி என்று உங்களை நீங்களே அடிக்கடி கேள்வி கேட்டுக் கொள்பவரானால், மேற்கூறிய உதவி குறிப்புகளைப் பின்பற்றி சரியான முறையில் நீங்கள் தியானம் செய்யலாம்.
அமைதியான ஒருமுகப் படுத்தப் பட்ட மனதை பரிசாக உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொள்ளலாம்.
தியானம் செய்ய தொடங்குபவர்களுக்காக குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் அவர்கள் வழங்கியுள்ள வழிகாட்டுதல் தியானங்களை முயற்சி செய்யுங்கள்
தியான நுட்பங்கள், மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளைத் தணிக்கின்றன. மனதை ஆழமாக தளர்த்தி, புத்துணர்வளிக்கறது. தியான உலகினில் எப்படி நுழைய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் தியானத்திற்கான இலவச அறிமுக வகுப்பு அமர்வுக்கு நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் 60 நிமிடங்களில் தியானம், யோகா மற்றும் சுவாசம் பற்றி விளக்கிப் பேசுவோம். இது தியான உலகத்தைப் பற்றிய தெளிவான அறிவினை உங்களுக்கு வழங்கும்.
வாழும் கலையின் (Art of living) சஹஜ் சமாதி தியானம் என்பது, உங்கள் உள்மனதிற்குள் ஆழமாக செல்வதன் மூலம் உங்களுடைய எல்லையற்ற திறனை வெளிக்கொணர்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு பயிற்சியாகும்.”
ஒரு நாள் நீண்ட நேரம் தியானம் செய்துவிட்டு, அதன் பின் பல நாட்கள் தியானம் செய்யாமல் விட்டுவிடுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்வது மிகவும் நல்லது.
நீங்கள் தொடர்ந்து தியானம் செய்வதை ஒரு பழக்கமாக உருவாக்கிக் கொண்ட பிறகு, நீண்ட நேரம் தியானம் செய்வது மேலும் பயனளிக்கக்கூடும்.
தியானம் என்பது எதையும் செய்யாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து முயற்சிகளையும் கைவிட்டு, நமது இயல்பான நிலையான அன்பு, ஆனந்தம், அமைதி ஆகியவற்றில் ஓயவெடுக்கும் நுண்மையான கலையாகும்.
தியானப் பயிற்சியானது உங்களுக்கு ஆழ்ந்த ஓய்வினைக் கொடுக்கும். தினமும் தியான நுட்பங்களைப் பயிற்சி செய்து அதன் மூலம் மன அழுத்த அளவைக் குறைத்து மன ஆரோக்கியத்தைப் பராமரித்துக் கொள்வது அவசியம்.
யோக பயிற்சி, உடலில் உள்ள அமைதி இன்மையை நீக்கி, மனதிற்கு சாந்தியைக் கொண்டுவருகிறது.
ஒரு தரமான தியான அனுபவத்திற்கான சிறந்த கலவை, யோகாவுடன் இணைந்து தியானம் செய்வதாகும்.
இரண்டு முறை தியானம் செய்வது நல்லது.











