பல நோய்களின் பிடியில் சிக்கிய நமது தலைமுறை இறுதியில் முழுமையான வாழ்க்கையை வாழ்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறது. நல்ல உடற்கட்டுடன் இருப்பதற்காக மக்கள் யோகா மற்றும் டாய்ச்சி (tai chi) போன்ற பண்டைய வழிமுறைகளை பின்பற்றுவதல்லாமல் எடை குறைப்பதற்கான குறுக்கு வழிகளை நிராகரிக்கவும் செய்கிறார்கள். விரைவில் எடையைக் குறைப்பதற்கு வழிகளை நாடும்பொழுது நாம் புரிந்து கொள்ள வேண்டியது, எடை குறைப்பு என்பது ஒரு பயணமாகும்; மேலும் விரைவில் பயன்தரக்கூடியவை எவையும் ஆபத்துடன் வருபவையாகும். பலன்களைக் காண அவசரப்படாமல், எடை குறைவதை அதன் போக்கில் விடுவது சிறந்ததாகும்; மேலும் இயற்கையாக எடைக் குறைப்பதற்கு ஆன்மீக வழியே உகந்ததாகும். ஏனென்றால் ஆன்மீகம் உங்கள் மனதையும் உடலையும் ஒன்றிணைக்கிறது, இதன் மூலம் மனம் உடலை வழிநடத்தவும், அது ஒரு மாற்றத்தை சந்திக்கும் போது அதை விழிப்புடன் வைத்திருக்கவும் உதவுகிறது.

எவருமே உங்களிடமிருந்து பறிக்க முடியாத இத்தகைய சந்தோஷத்தைக் கொண்டு வருவதே ஆன்மீகத்தின் குறிக்கோளாகும்.

– குருதேவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

ஆன்மீக ரீதியால் எடை குறைப்பது எப்படி?

உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்

பசியின் அறிவியல் உங்களுக்குத் தெரியுமா? அது உண்மையில் வயிற்றில் இருந்து தொடங்குவதில்லை; உண்மையில், நீங்கள் உணவைப் பார்க்கும்போது பசியையும் ஏக்கத்தையும் தூண்டுவது மனம்தான் (நிச்சயமாக எப்போதும் இல்லை). உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவதுதான் அடிக்கடி ஏற்படும் பசி வேதனையைச் சமாளிக்க ஆன்மீக வழி. தியானம் மற்றும் நினைவாற்றல் ஆகியவை சுய விழிப்புணர்வை முன்னோக்கி கொண்டு வரவும், உங்கள் உணவுத் தேர்வுகள் குறித்து உங்களை விழிப்புணர்வடையச் செய்யவும் உதவுகின்றன.

உறுதியில்லா மனம் துக்கத்தில் சஞ்சரிக்கும். உறுதியுள்ள மனம் சில நேரம் இன்னல்களை அனுபவித்தாலும், இறுதியில் முயற்சியின் பலன்களை அறுவடை செய்யும்.

– குருதேவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

நன்றியுடன் இருங்கள்

உங்களைச் சுற்றியுள்ள துரதிருஷ்டசாலிகளைக் காணும் பொழுது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? மிகவும் நன்றியுடன் இருப்பீர்கள் இல்லையா? உங்களது  உயிர்  உங்களது  மிகப் பெரிய ஆசி என்பதனை நினைவில் கொள்ளுங்கள்; உங்களது உடலிற்கும் மனதிற்கும் நன்றியுடன் இருங்கள். இந்தப் பணிவு, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களில்  ஈடுபடுவதற்கு முன்பு, நம்மை  நம் உடலைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.

ஆன்மீக மலர்ச்சி என்பது வாழ்வின் எல்லா பரிமாணங்களிலும் மலர்ச்சியைக் காண்பதே ஆகும். சந்தோஷமாக இருத்தல், உங்களுடனும் சுற்றியுள்ள மற்ற எல்லோருடனும் இயல்பாக இருத்தல்.

– குருதேவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

உங்களது சக்கரங்களைச் செயல்படுத்துங்கள்

நமது உடல்களில் ஏழு சக்கரங்கள் அல்லது  சக்தி மையங்கள் உள்ளன. இந்த ஆன்மீக இணைப்பிகளை செயல்படுத்தும் பொழுது, இவை மனது, உடல் உறுப்புகள் மற்றும் புத்தியினை ஒருங்கிணைக்கின்றன. சுதர்சன கிரியா, தியானம் மற்றும் யோக பயிற்சி நமது சக்கரங்களை நிதானமாக, பாதுகாப்பாக செயல்படுத்தி நம்மை உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக மாற்ற உதவுகின்றன. அளவுக்கு மீறி உண்ணும் இச்சை அகன்று , நமது எடை சட்டென்று  குறைகின்றது.

தியானத்தில் குணமடைதல் சாத்தியமே. மனம் அமைதியாகவும், விழிப்புடனும், முழு திருப்தியுடனும் இருக்கும் பொழுது அது ஒரு லேசர் கற்றைப் போல(LASER beam) உள்ளது. அது மிகவும் சக்தி வாய்ந்தது, குணமடைவது சாத்தியமாகிறது.

– குருதேவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

இடைப்பட்ட உண்ணாவிரதம் (Intermittent Fasting)

பல மரபுகளில் உண்ணாவிரதம் கடைபிடிப்பது ஒரு ஆன்மீக ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. இடைப்பட்ட உண்ணாவிரதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலவரையளவில் விரதம் கடைப்பிடிப்பதையும், கடைப்பிடிக்காமல் இருப்பதையும் மாறி மாறி செய்வதாகும். இங்கு உணவு உண்ணும் முறையானது குறுகிய  கால அளவிற்கு விரதத்தை வழக்கமாக்குவது அல்லது இடையிடையே சிறிதளவு உணவு உட்கொள்வது அல்லது உணவே உட்கொள்ளாமல் இருப்பது ஆகும். இடைப்பட்ட உண்ணாவிரதம் எடைகுறைப்புப் பலன்களை காலப்போக்கில் அளிப்பதாக  ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.

அளவோடும் விழிப்புணர்வுடனும் உண்பது

நிதானமாகவும், விழிப்புணர்வுடனும் உண்பது, ஜீரணத்திற்கு ஏதுவாகி,  இயல்பாக நம் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது நம் உடலுக்குள் எதை அனுமதிக்கப் போகின்றோம், அது எவ்வளவு ஆரோக்கியமானது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் பழக்கத்தை வளர்க்கிறது. இது உணவின் மதிப்பை உணர வைக்கிறது. குறைவாக உண்டு, உறங்கப் போகும் முன்பு வயிற்றை காலியாக இருக்க வைத்திருப்பது, நமது தூக்க சுழற்சியை மேம்படுத்தி உடலைத் தூய்மைப் படுத்துகிறது. மேம்பட்ட விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது, நாம் தேவையற்ற நொறுக்குத் தீனிகளை நிராகரிக்க முனைகிறோம்; இதனால் இறுதியில் நம் வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்பட்டு திறம்பட நம் எடையைக் குறைக்க உதவுகிறது.

யோகபயிற்சிகளும் முத்திரைகளும்

கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய யோக  பயிற்சி, எடை குறைப்பதற்கான ஒரு அற்புதமான வழியாகும். யோக பயிற்சி நமது உடலையும் மனதையும் தளர்வாக்குவது மட்டுமல்லாமல் நமது எடையையும் கட்டுக்குள் வைக்கிறது. சூரியநமஸ்காரம், தனுராசனம், உட்கட்டாசனம் போன்றவை எடை குறைக்க உதவும் சில யோகாசனங்கள் ஆகும். எனினும் யோக பயிற்சி படிப்படியாகவே எடையை குறைக்க வழிவகுக்கிறது. யோகமுத்திரைகள் உடலில் சக்தியைக் கூட்டி, குணமடைதலில் பங்கெடுத்து எடை குறைப்பிற்கு உதவுகின்றன. ஒவ்வொரு முத்திரைக்கும் ஒரு தனிப்பட்ட பணி உள்ளது. உதாரணமாக ஆதிமுத்திரை நுரையீரல் திறனையும், உடலில் ஆக்சிஜன் ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. சின்மய முத்திரை மனதை தளர்வாக்கி, தன்னுணர்வை மேம்படுத்துகிறது. சின்முத்திரை கவனக் குவிப்பினை அதிகப்படுத்துகிறது.

மேலும் யோக சாத்வீக உணவினை (காய்கறிகள், பழங்கள், தானியங்கள், நட்ஸ் ஆகியவற்றின் சேர்க்கை) பின்பற்றக் கற்றுக் கொடுக்கிறது. சாத்வீக உணவு உடலுக்கு ஆற்றல் தரும் மூலப் பொருட்களைக் கொண்டது. அதே சமயம் எடை குறைப்பதற்கு ஒரு நல்ல உணவுத் திட்டமாக அமைகிறது. எடைக்குறைப்பிற்கு யோகா செய்வது எப்படி?

உண்பதிலும், பொழுதுபோக்குகளிலும் மிதநிலை, வேலையில் சமநிலை மற்றும் உறக்கத்திலும், விழித்தலிலும் கட்டுப்பாடு என்று இருப்பவர்கள்  இன்னலை அழிக்கும் யோகநிலையை அடைவார்கள்.

– பகவத்கீதை

செயல்பாட்டு முறையில் நம்பிக்கை வையுங்கள்

எடையைக் குறைப்பதற்கான பல ஆன்மீக வழிகளை நாம் முயற்சிக்கும்போது, ​​அந்த ஒழுக்கத்தில் நம்பிக்கை வைத்து, பின்னர் செயல்முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். சுய நம்பிக்கை, பகுத்தறிவற்ற எதிர்பார்ப்புகளை வைத்திருக்காமல் தொடர்ந்து செல்ல உங்களைத் தூண்டுகிறது. எடைகுறைப்பை கற்பனைப்படுத்திப் பார்ப்பதும் கூட நமது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை விட்டுவிடுவதற்கு ஊக்கமளிக்கிறது.

உங்களது மனமும் நடத்தையும் உங்கள் கட்டுக்குள் இருந்தால் அது மோட்சமாகும். உங்களது உயர்ந்த  ஆன்மாவை நீங்கள் உணரும் பொழுது இதனை அடைய முடியும்.

– குருதேவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

உங்களது உணர்ச்சிகளையும், அளவுக்கு மீறி உண்ணும் பழக்கத்தையும் குறைக்க விரும்பினீர்களானால், எங்களது தியானம் மற்றும் மூச்சு பயிற்ச்சி திட்டத்தில் கலந்து கொண்டு, சிறந்த மனக் கட்டுப்பாட்டைப் பெறுங்கள்.

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *