தியானம் மற்றும் பிரணாயாமம் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம். பண்டைய அறிவியல் சுமார் கடந்த 5000 வருடத்தில் இருந்து 8000 வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. இந்த அறிவியல் ஆயுர்வேதத்துடன் கலந்து பல தலைமுறைகளாக மக்களின் ஆரோக்கியத்தையும் மனநலத்தையும் காத்து வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக எந்த ஒரு ஆவணமும் இதற்கு இல்லை. ஆயுர்வேத ஆராய்ச்சிப் பிரிவை இந்திய அரசு உருவாக்கி வருகிறது.
பிறந்த குழந்தையை நன்றாக கவனித்து பார்த்தால் அது மூன்று வயது வரை எல்லா யோக ஆசனங்களையும் செய்கிறது. இதைத் தெரிந்து கொள்வதற்கு நாம் ஒரு யோகா பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
குழந்தைகள், புஜங்காசனம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆசனத்தை செய்வார்கள். நன்றாக கவனித்து பார்த்தால் இது வயிற்று புறமாக படுத்து தலையை உயர்த்தி பாம்பு போல செய்யும் ஒரு ஆசனம் ஆகும். முதுகு புறமாக படுத்து கைகளையும் கால்களையும் உயர்த்தி ஒரே நேர்கோட்டில் ஒரு படகு போல இருக்கும் நவுகாசனம் என்னும் ஆசனமும் செய்கிறார்கள். மேலும் குழந்தைகள் சுவாசிக்கும் விதமும் வேறு. அவர்கள் வயிற்றிலிருந்து சுவாசிக்கிறார்கள். உணர்ச்சிகளுக்கு ஏற்ப சுவாசத்திற்கு தாளம் உண்டு. தூக்கத்தில் இருக்கும் போது வேறு ஒரு விதமாகவும் நம் சுவாசம் இயங்குவதை நாம் கவனிக்க முடியும். வெவ்வேறு உணர்ச்சிகளை பொறுத்து சுவாசத்தின் வெப்பநிலை, வேகம், நீளம் மற்றும் அளவு மாறுபடுகிறது. (மூச்சை மாற்றுவதன் மூலம் வெவ்வேறு உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று பயிற்சி வகுப்புகளில் கற்பிக்கப்படுகிறது) உணர்ச்சிகள் சுவாசத்துடனும் நமது உடலின் சில பகுதிகளுடனும் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறது.
யோக முத்திரைகள் எவ்வாறு செய்வது என்பது பற்றியும் மற்றும் அதன் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்
ஒரு குழந்தை பிறக்கும்போது கட்டை விரலை உள்ளங்கையில் வைத்து மற்ற விரல்களை அதன் மீது வைத்து மடித்த படி பிறக்கிறது. யோக சாஸ்திரத்தில் இதன் பெயர் ஆதி முத்திரை என்பதாகும். குழந்தைகள் தூங்கும் போது சின்முத்திரையில் தூங்குகிறது. சின்முத்திரை என்பது கட்டை விரல் ஆள்காட்டி விரலின் நுனியை தொட்ட படியும் மற்றவிரல்கள் நீட்டிய படியும் செய்வது. குழந்தைகள் தூங்கும் போது சின்மய முத்திரை செய்வதையும் பார்க்க முடியும். இது கட்டைவிரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் தொட்டு, மற்ற விரல்களை மடக்கி உள்ளங்கையில் வைத்தபடி இருக்கும். குழந்தைகள் கட்டை விரலை சூப்பும் போது செய்வார்கள். இந்த முத்திரை செய்யும்போது கட்டை விரலை மேலே சுட்டிக்காட்டி மற்ற விரல்களை மடக்கி உள்ளங்கையில் வைத்திருப்பார்கள்.
முத்திரை (கை தோரணை) மூளையின் சில பகுதிகளையும் உடலின் வெவ்வேறு பகுதிகளையும் ஊக்கப்படுத்துகிறது. குழந்தைகள் அனைத்து விதமான முத்திரைகளையும் செய்கிறார்கள். யாராவது அதிக குளிர்ச்சியாக உணர்ந்தால் இயற்கையாகவே தனது கட்டை விரலை விரல்களுக்குள்ளோ அல்லது கைகுட்டைகுள்ளோ மறைத்து வைப்பதுண்டு இது வெப்பத்தை உண்டாக்கும். கட்டைவிரல் சூடாக இருப்பது முழு உடலையும் சூடாக வைப்பதற்கு உதவும். யோக சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது என்றால் நம் விரல் நுனிகளை ஆற்றல் கொண்ட புள்ளிகள் என்று கூறுகிறது.
உடலில் 108 சக்கரங்கள் உள்ளன அதில் 12 முக்கியமானவை அதிலும் ஏழு மிக முக்கியமானவை இதில் கவனம் செலுத்துவதன் மூலம் முக்கியமான புள்ளிகளை தூண்டவும் ஓய்வெடுக்கவும் நாம் வைக்கிறோம்.
1. சின் முத்திரை
- கைகளைத் தொடையில் வைத்து உள்ளங்கை ஆகாயத்தை பார்த்தவாறு வைத்துக் கொள்ளவும்
- கட்டைவிரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் அழுத்தம் கொடுக்காமல் ஒட்டியபடி வைக்கவும்.
- மற்றும் மூன்று விரல்கள் நீட்டிய வண்ணம் இருக்க வேண்டும். இந்த மூன்று விரல்கள் முடிந்தவரை நேராக வைக்க வேண்டும்.
- கைகளைத் தொடையில் வைத்து உள்ளங்கை ஆகாயத்தை பார்த்தவாறு வைத்துக் கொள்ளவும்
- இப்போது சுவாச ஓட்டத்தை கவனிக்கவும்.
சின் முத்திரையின் நன்மைகள்:
- கூர்மையான அறிவுக்கு உதவுகிறது
- ஆழ்ந்த உறக்கம் பெறலாம்
- அதிகப்படியான உடல் ஆற்றல் கிடைக்கும்
- கீழ் முதுகு தண்டில் வலி இருந்தால், இதை செய்வதன் மூலம் குறையும்

2. சின்மய முத்திரை
- கைகளைத் தொடையில் வைத்து உள்ளங்கை ஆகாயத்தை பார்த்தவாறு வைத்துக் கொள்ளவும்
- கட்டைவிரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் அழுத்தம் கொடுக்காமல் ஒட்டியபடி வைக்கவும்.
- இது கட்டைவிரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் தொட்டு மற்றவிரல்கள்ளை மடக்கி உள்ளங்கையில் வைத்தபடி செய்ய வேண்டும்.
- இப்போது சுவாச ஓட்டத்தை கவனிக்கவும்.
சின்மய முத்திரையின் நன்மைகள்
- செரிமானத்தை தூண்டுகிறது
- உடல் ஆற்றலை அதிகரிக்கிறது

3. ஆதி முத்திரை
- கட்டை விரலை உள்ளங்கையில் வைத்து மற்ற விரல்களை அதன்மேல் வைத்து மூடி ஒரு முஷ்டி செய்து கொள்ளவும்.
- உள்ளங்கையை தொடையில் வைத்து ஆகாயத்தை பார்த்த மாதிரி வைத்துக் கொள்ளவும். இதுவே ஆதி முத்திரையின் செய்முறை.
- இப்போது சுவாச ஓட்டத்தை கவனிக்கவும்.
ஆதி முத்திரையின் நன்மைகள்
- தலைக்கு ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிக்கிறது
- குறட்டையை குறைக்கிறது
- நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது
- நரம்பு மண்டலத்தை தளர்த்துகிறது

ஒரு வருடத்திற்கு முன்பு நியூயார்க்கில் இருக்கும் விஞ்ஞானிகள், ஒருவர் தியானம் செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகளைப் பற்றி கண்டறிந்துள்ளனர். ஒரு நாளைக்கு 20 நிமிடம் என எட்டு வாரத்திற்கு தொடர்ந்து தியானம் செய்வதன் மூலம் நமது மூளையில் சாம்பல் நிற சிறுமூளை திசுக்கள் (grey matter) அதிகமாகிறதாம். தொடர்ந்து தியானம் செய்யும் ஒருவர், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணரலாம். இது மூளையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமே. இதை நாம் காலம் காலமாக உணர்ந்து வருகிறோம். இப்போது இது அறிவியல் பூர்வமாக உணர்த்தப்பட்டுள்ளது.
“விஷ்வமயோ யோக பூமிகா” என்று இதைக் கூறுகிறார்கள். யோகா என்பது விஷ்வமையோ அல்லது ஆச்சரியம். நம்மை சுற்றியுள்ள பொருள்களை ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்குகிறோம். இதுவே உண்மையான யோக நிலை. யாராவது குளிர்ச்சியாக உணரும்போதெல்லாம், முதலில் ஏற்படும் இயல்பான போக்கு, கட்டைவிரல்களை அக்குள்களுக்குக் கீழே மறைத்து, கட்டைவிரல்களை சூடாக வைத்திருப்பதுதான். உண்மையில், யோகாவில், கட்டைவிரல்கள் மிகவும் முக்கியம். கட்டைவிரலை சூடாக வைத்திருந்தால், முழு உடலும் சூடாக இருக்கும் என்று கூறப்படுகிறது. யோகாவில், நம் விரல்களின் நுனிகள் ஆற்றல் புள்ளிகள் என்றும் கூறப்படுகிறது.
யோகாசனத்தின் நன்மைகள்
- உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாறுகிறது
- மனம் இனிமையாகிறது
- புத்தி கூர்மையாகிறது
- சுவாசம் தடையின்றி சீராக இருக்கிறது
- உள்ளுணர்வு அதிகரிக்கிறது
- உணர்வின் மூலம் சுய உணர்ந்தறிதல் அதிகரிக்கிறது
மேலும், இது போன்ற நன்மைகள் பல இருக்கின்றன. யோகா என்பது மருத்துவத்திற்கு மாற்றாக கற்றுக் கொடுப்பது அல்ல. நன்கு கற்று தேர்ந்த யோகா பயிற்சியாளரின் மேற்பார்வையில் பயிற்சி செய்வது அவசியம். ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் மருத்துவரிடமும் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரிடமும் கலந்துரையாடிய பின்னரே யோகா செய்ய வேண்டும். யோகாவை பற்றியும் தியானத்தை பற்றியும் வாழும் கலையில் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளின் மூலம் கற்றுக் கொள்ளலாம். உதாரணமாக, வாழும் கலை நடத்தும் ஆனந்த அனுபவ பயிற்சி திட்டம். எங்கள் நிபுணர்களுடன் இலவச தியான அமர்வில் இப்போதே சேருங்கள்.
அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
● சின்மய முத்திரை செரிமானத்திற்கும்
● ஆதி முத்திரை நரம்பு மண்டலத்தில் தளர்வு ஏற்படுத்துவதற்கும்
● பிரம்ம முத்திரை சோர்வை குறைப்பதற்கும்
● அஞ்சலி முத்திரை நேர்மையான எண்ணங்களுக்கும்
● பிராண முத்திரை குணப்படுத்துவதற்கும்
● வருண முத்திரை நேர்த்தியான தகவல் தொடர்பிற்கும்
● அபான வாயு முத்திரை மனச்சோர்வில் இருந்து
விடுபடுவதற்கும்
● சூரிய முத்திரை சிறந்த வளர்ச்சிதை மாற்றத்திற்கும்
● அஸ்வினி முத்திரை மலச்சிக்கல் நிவாரணத்திற்கும்
● அக்கினி முத்திரை சிறந்த மனநிலைக்கும்
என ஒவ்வொரு தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு முத்திரையும் பிராண ஓட்டத்தை திசை திருப்பி நன்மை பயக்கிறது.
பிராண முத்திரை – உயிர் சக்தி
கணேச முத்திரை – தடைகள் நீக்கம்
அஞ்சலி முத்திரை – மன அமைதி
காளி முத்திரை – சிரமத்தை சமாளித்தல் மற்றும்
லிங்க முத்திரை – நுரையீரலை வலுப்படுத்தவும், சுவாசப் பிரச்சினைகளை சமாளிக்கவும் பயன்படுகிறது என ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு பலனை தருகிறது.











