உங்கள் முடியை பிடித்து இழுத்து, பற்களை கடித்து, முஷ்டியை இறுக்க வேண்டும் போன்று உணர்ந்த நாட்கள் உண்டா? நன்று, உங்கள் முஷ்டியை மேலும் இறுக்குங்கள். உண்மையில் உள்ளபடியே உங்கள் முழு உடலையும் இறுக்குங்கள். மூச்சை வெளிவிட்டபடியே வயிற்றை உட்பக்கம் சுருக்கி, முகம் சுளித்து, உதடுகளை ஒன்றாக சுருக்கவும். இப்போது, ‘ஹா’ என்று சத்தத்துடன் விடவும்.  இதில் எதை அதிகம் ரசித்தீர்கள்? கைமுஷ்டியை இறுக்கி வைத்திருப்பதையா?, அல்லது அதை விடுவித்ததையா?


மேற்கண்டவை, சூட்சும யோகாவின் (நுட்பமான யோகா) பல்வேறு நுட்பங்களில் ஒன்று. இந்த யோகா தளர்வு நுட்பங்களின் வித்தியாசமான தரம் என்னவென்றால், அவை எளிமையானவை, குறுகியவை மற்றும் நுட்பமானவை. உங்கள் முடியை பிடித்து இழுக்க தோன்றாத நாட்களிலும் இதை செய்யலாம். “நீங்கள் உடனடியாக ஓய்வைப் பெற்றிட விரைவான வழிகளில் ஒன்று,” என்கிறார் சூட்சும யோகாவின் வழக்கமான பயிற்சியாளர் பல்லவி ஜோஷி. “இதை எப்போது வேண்டுமானாலும் ,எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் – வீட்டில் அமர்ந்திருக்கும் போது, பணியிடத்தில், பயணத்தின் போது காரில், பேருந்தில், அல்லது விமானத்திலும் கூடச் செய்யலாம்”, என்கிறார் மற்றொரு சூட்சும  யோகா ஆர்வலர்.

சூட்சும  யோகா பயிற்சிக்கான வழிமுறைகள்

சூட்சும  யோகாவுக்கு நேரம் எடுக்காது. முன்னேற்பாடு தேவையில்லை. இந்த சிறிய உடற்பயிற்சி நுட்பமான ஆற்றல் தடங்களை திறந்து விடுகிறது. வெறும் 7 நிமிட பயிற்சியில் கூட நீங்கள் மிகவும் உணரக்கூடிய வேறுபாடுகளை உணரலாம்.

  • ஏதேனும் தவறாக நடந்து விட்டால், நாம் நமது தலையில் கைகளை வைத்து கொண்டு “ஓ கடவுளே ” எனச் சொல்லி கொண்டு,  தலையை மசாஜ் செய்தால் மனம் ஓய்வடையும். மனம் ஓய்வடைந்தால் வாழ்க்கை மென்மையாக மாறும்.
  • உங்கள் கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் பயன்படுத்தி உங்கள் புருவங்களை 5-6 முறை கிள்ளுங்கள்.  நாம் முகம் சுளிக்க 72 தசைகளையும், புன்னகைக்க பாதி தசைகளையும் மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
  • உங்கள் கண்களை 5-6 முறை (கடிகாரதிசை) வலதுபுறமாகவும், பின்னர் இடதுபுறமாகவும் (எதிர் கடிகாரதிசை) சுற்றுங்கள்.
  • உங்கள் கண்களை இறுக்கமாக மூடுங்கள், பின்னர் அவற்றை நன்றாக  திறக்கவும். இதை 10-15 முறை செய்யவும்.
  • 10-15 வினாடிகள் உங்கள் காதுகளை இழுக்கவும். விழிப்புணர்வை அதிகரிக்கக் கூடிய அனைத்து நரம்புகளும் காதின் கீழ் பகுதியில் அமைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சில நேரங்களில், பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்கள் குழந்தைகளின் விழிப்புணர்வை அதிகரிக்கவும், தவறு செய்யும் வாய்ப்புகளைக் குறைக்கவும் அவர்களின் காதுகளை இழுக்கிறார்கள். நீங்கள் உங்கள் காதுகளை இழுத்தால், மற்றவர்கள் உங்கள் காதுகளை இழுக்க வேண்டிய அவசியம் வராது.
  • உங்கள் காதுகளைப் பிடித்து, அவற்றை கடிகார திசையிலும், எதிர் கடிகார திசையிலும் (சைக்கிள் ஓட்டுவது போல) உங்கள் காதுகள் சூடாகும் வரை சுழற்றவும்.
  • உங்கள் மூன்று விரல்களை (முதல், நடுத்தர மற்றும் மோதிர விரல்) தாடைகோட்டிலிருந்து தாடை வரை நகர்த்தி, பின் உங்கள் கன்னங்களை மசாஜ் செய்யவும். இதைச் செய்யும்போது வாயைத் திறந்து வைத்துக் கொள்ளவும். உங்கள் தாடைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் சில முடிச்சுகள் இருப்பதைக் கண்டீர்களா?  மன அழுத்தத்தை மறைக்கும் இடம் இது.  நீங்கள் எவ்வளவு ‘முடிச்சு’ போட்டிருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து, இஸ்திரி போடுவது போல எல்லா முடிச்சுகளையும் நேராக்குங்கள்.
  • உங்கள் தாடையை 8-10 முறை திறந்து மூடுங்கள்.
  • உங்கள் வாயைத் திறந்து, உங்கள் தாடையை 8-10 முறை இரண்டு பக்கவாட்டிலும் நகர்த்தவும்.
  • உங்கள் கழுத்தை சுழற்றுங்கள். மூச்சை எடுத்து கொண்டே உங்கள் தலையை பின்னால் நகர்த்தி பின் மூச்சை வெளிவிட்டபடியே, உங்கள் தாடையால் மார்பில் தொடவும்.  உங்கள் தலையை கடிகார திசையில் சுழற்றுங்கள். மேலே செல்லும் போது (வட்டத்தின் முதல் பாதி) மூச்சை உள்ளிழுக்கவும், துவக்க  நிலைக்குத் திரும்பும்போது (வட்டத்தின் இரண்டாம் பாதி) மூச்சை வெளியே விடவும்.  இதை      5-6 முறை கடிகார திசையில் செய்யவும் பின்னர் எதிர் கடிகார திசையில் செய்யவும்.
  • உங்கள் கைகளை 2 நிமிடங்கள் குலுக்குங்கள். எந்த அளவிற்கு குலுக்க வேண்டும் என்று தெரிய வேண்டும் என்றால், நாய்கள் மற்றும் பூனைகள் தங்கள் உடலில் நீர் தங்காமல் இருப்பதற்காகக் குலுக்குவதைப் பாருங்கள். அவைகள் தங்கள் உடலில் இருக்கும் நீரைக் குலுக்கி குலுக்கி வெளியே போகும்படி செய்து விடும். அதுபோல உங்கள் கைகளை குலுக்கி குலுக்கி, பின் மெதுவாக அவற்றை நிலைநிறுத்தி அமைதியாக உட்காரவும்.

இந்த நுட்பங்களை நீங்கள் பயிற்சி செய்யும்போது, ​​​​ஒவ்வொரு அசைவுகளும்  உங்கள் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள். ஒவ்வொரு சிறிய அசைவுகளும் அல்லது செயல்களும்  சில மன அழுத்தத்தை நீக்குகிறது, மேலும்  பிராண (ஆற்றல்) இயக்கத்தின் இயக்கும் முறையை  உங்களுக்குள் நீங்கள் மெதுவாகப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கலாம். இந்த அறிவை பயிற்சி மற்றும் அனுபவத்தால் மட்டுமே பெற முடியும், புத்தகம் படிப்பதால் அல்ல.  உங்கள் உடல்-மன ஒருங்கிணைப்பு சிரமமற்றதாகவும், துல்லியமாகவும் இருக்கும் ஒரு மண்டலத்தில் நீங்கள் இருப்பதாக உணர்வீர்கள். ஆயினும் அது யோகாவின் புறவிளைவு மட்டுமே.

இன்னும் நிறைய இருக்கிறது.  மகிழ்ச்சியுடன்  பயிற்சி செய்யுங்கள்.

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *