உடல் எடையை குறைப்பதற்கான முழுமையான உடற்பயிற்சி சூரியநமஸ்காரம் எனக்கூறப்படுகிறது.12 சூரியநமஸ்கார தொகுப்புகளை செய்வது 288 சக்தி வாய்ந்த யோகாசனங்களை 12-15 நிமிடங்கள் செய்வதற்கு சமமானது என்று யோகா நிபுணர்கள் கூறுகிறார்கள். நல்ல விஷயங்கள் எவ்வாறு சிறிய தொகுப்புகளில் வருகின்றன என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.
எடையைக் குறைப்பதற்கான ஒரு முழுமையான முயற்சி
நேர நெருக்கடி ஏற்படுகிறதா? உடல்நலத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க விரும்புகிறீர்கள், ஆனால் எப்படி என்பது தெரியவில்லையா? சூரியநமஸ்காரம் பயிற்சிக்கு வரவேற்கிறோம். சூரியனுக்கு வந்தனம் என்று நேரடி மொழிபெயர்ப்பாகும் சூரியநமஸ்காரம், 12 யோகாசனங்களின் தொடரை உள்ளடக்கியது.
ஓய்வு ஒழிச்சல் இல்லாது, நேர நெருக்கடியினாால் யோகாசனங்கள் செய்ய இயலவில்லை என்று புலம்புவோர்க்கு, சூரியநமஸ்காரம் ஒரு நல்ல ஏற்பாடாகும். இதுவே சூரியநமஸ்காரத்தின் மிகச் சிறந்த அம்சம்.
Though pretty much an exercise in itself, Sun Salutation forms an excellent link between warm-ups and 12 சூரியநமஸ்கார தொகுப்புகள், குறிப்பாக சூரியோதயத்தில், வேகமான கதியில் செய்வது, இருதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு ஒரு நல்ல பயிற்சியை கொடுக்கிறது. மெதுவான கதியில் செய்யும் பொழுது, இவ்வாசனங்கள் தசைகளை வலுப்படுத்துவதோடு மனதை லேசாக்கி, தியான நிலைக்கு எடுத்துச் செல்கிறது. இது மட்டுமல்லாமல் உங்கள் பயிற்சியை அனுபவிக்க வைத்து, உடல் தளர்வடைவதையும் உணர வைக்கிறது.
அதுவே ஒரு உடற்பயிற்சியாக திகழ்ந்தாலும் சூரியநமஸ்காரம் ஆயத்த பயிற்சிகளுக்கும் தீவிர யோகாசனங்களுக்கும் இடையே ஒரு அற்புதமான தொடர்பாக அமைகிறது. உங்களது வழக்கமான அதிகாலை யோகா பயிற்சியை, உடல் விறைப்பை தளர்வாக்க சில ஆயத்த பயிற்சிகளுடன் தொடங்குங்கள். அதற்குப் பிறகு சில சுற்றுகள் சூரியநமஸ்காரம் செய்யலாம். இது உங்கள் உடலை தளர்வாக்க உதவுகிறது, மற்றும் தீவிர யோகாசன தொடர் பயிற்சியின் பொழுது உடலை அதிகமாக வளைக்க தயார் செய்கிறது.
சூரியநமஸ்காரம் ஏன் நல்லது?
ஆனால் அது மட்டுமல்ல. சூரியநமஸ்கார தொடர்பயிற்சி உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் பல சுவாரசியமான நன்மைகளைத் தருகிறது.இந்த சக்தி வாய்ந்த யோகாசனங்கள் இருதயம், கல்லீரல், வயிறு, மார்பு, தொண்டை மற்றும் கால்கள் என்று மேலிருந்து கீழ்வரை உடல் முழுவதும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி,உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக்க, வயிறு, குடல் மற்றும் நரம்பு மையங்களின் ஒழுங்கான செயல்பாட்டை உறதிப்படுத்துகிறது. சூரியநமஸ்காரத்தை தினமும் பயில்வது வாதம் ,பித்தம், கபம் ஆகிய உடலின் மூன்று கட்டமைவுகளை சமமாக்க உதவுகிறது.
நீங்கள் செய்யும் 12 நிமிட சூரியநமஸ்கார பயிற்சியில் உள்ள யோகாசனங்களின் எண்ணிக்கை
ஒரு சுற்று சூரியநமஸ்காரம் 12 யோகாசனங்களை உள்ளடக்கியது.
ஒரு தொகுப்பு 2 சூரியநமஸ்கார சுற்றுகளைக் கொண்டது: முதலில் உடலின் வலது பக்கத்திற்கான பயிற்சி,பிறகு இடது பக்கத்திற்கு. எனவே நீங்கள் 12 தொகுப்புகள் சூரியநமஸ்காரம் செய்யும் பொழுது, 12 தொகுப்புகள் × 2 சுற்றுகள் ( ஒவ்வொரு தொகுப்பிலும்) × 12 யோகாசனங்கள (ஒவ்வொரு சுற்றிலும்) = 288 யோகாசனங்களை 12-15 நிமிடங்களில் நிறைவு செய்கிறீர்கள்.
ஒவ்வொரு சூரியநமஸ்காரத்திலும் எரிக்கப்படும் கலோரிகள்
சராசரி எடையுள்ள ஒரு மனிதன், ஒரு சுற்று சூரியநமஸ்காரம் செய்யும் பொழுது 13.90 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. நீங்கள் இதை வைத்து, உங்களுக்கான ஒரு இலக்கினை அமைத்துக் கொள்ளலாம். நிதானமாக சூரியநமஸ்கார சுற்றுகளின் எண்ணிக்கையை 108 ஆக உயர்த்தலாம். இந்த எண்ணிக்கையை எட்டுவதற்குள்ளாக, நீங்கள் உங்களை (எடை) மெலிந்தவராக உணர்வீர்கள்.
30 நிமிட பயிற்சியின் கலோரிமீட்டர்
உங்களது 30 நிமிட பயிற்சியில் எரிக்கப்பட்ட கலோரிகளின் எண்ணிக்கையை கணக்கிடலாம்.
பளு தூக்குதல் = 199 கலோரிகள்
டென்னிஸ் = 232 கலோரிகள்
கூடைப்பந்து = 265 கலோரிகள்
கடற்கரை கைப்பந்து = 265 கலோரிகள்
கால்பந்து = 298 கலோரிகள்
சைக்கிள் ஓட்டுதல் (14 – 15.9 mph) = 331 கலோரிகள்
பாறை ஏறுதல் = 364 கலோரிகள்
ஓட்டம் (7.5mph) = 414 கலோரிகள்
சூரியநமஸ்காரம் = 417 கலோரிகள்
சூரியநமஸ்காரம் மற்ற விதமான பயிற்சிகளை ஒப்பிடும் பொழுது,அதிகபட்சமான கலோரிகளை எரிக்கக்கூடியது.
நன்றியுணர்ச்சியுடன் யோகாசனம்
இந்த கிரகத்தில் உயிர் வாழ்க்கையை சூரியன் எப்படி சாத்தியமாக்குகிறது என்ற பள்ளி பாடங்களை நினைவுகூறுவோம். சிறு குழந்தையாக நமது வாழ்வில் இந்த ஒளிரும், மஞ்சள் பந்தின் அத்தியாவசிய பங்கினை நாம் அனைவரும் கற்றிருக்கிறோம்- இருளை நீக்கி, படைப்பிற்கு உயிர் மூச்சை அளிக்கிறது. நமக்கு மிக அருகாமையில் உள்ள நட்சத்திரத்திற்கு நன்றி தெரிவிப்பதற்கு இப்பொழுது நம்முடைய முறையாகும்.
சூரியநமஸ்காரம் இந்த வாய்ப்பினை நமக்கு அளிக்கிறது. மதிப்பிற்குரிய உயிர் சக்தியான சூரியனுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, உடல் முழுவதற்கும் பயிற்சியை அளிக்கக்கூடிய உன்னதமான வழியாக சூரியநமஸ்காரம் அமைகிறது.
எடைக் குறைப்பதற்கு சூரியநமஸ்காரம் பயில ஆர்வமாக உள்ளீர்களா? சூரியநமஸ்காரம் செய்வது எப்படி என்பதற்கு இந்த எளிமையான முறைகளைப் பின்பற்றுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு யோகா விரிப்பின் மீது, ஒரு யோகாசனத்திலிருந்து மற்றொன்றிற்கு நளினமாக மாறிக் கொண்டு, புன்முறுவலுடன் பயிற்சியை ரசிப்பதுதான். உங்கள் சூரியநமஸ்காரப் பயிற்சியை மேலும் புனிதமானதாகவும், பயனுள்ளதாகவும் ஆக்க சூரியனுக்கு ஒரு பிடி நன்றியுணர்வை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்பொழுது நோயற்ற உடல் மற்றும் தளர்வுற்ற மனதைப் பெறும் பாதையில் அடி வைத்து செல்லத் தொடங்குகிறீர்கள்.
மேலும் ஒரே அமர்வில் 108 சூரியநமஸ்காரங்கள் என்ற இணைப்பில் அதை பயில்வது எப்படி என்பதை அறிந்து கொள்ள விரும்பலாம்.
சூரிய நமஸ்கார வீடியோ
சூரிய நமஸ்காரத்தை ஒரு ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சியாளரிடமிருந்து சரியான முறையில் கற்றுக் கொள்ள, உங்கள் அருகில் நடைபெறும் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி பற்றிய விவரம் அறிந்து கொள்ளுங்கள்.











